விளையாட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய ஆசிரியர்! அதற்கு கிடைத்த பிரதிபலன்!
ஒவ்வொரு வீட்டிலும் கிரிக்கெட் பார்ப்பதற்கென்று தனி கூட்டமே உள்ளது. அந்த வகையில் பலரது வீடுகளில் சிலர் இதற்கென சண்டை போட்டு தொலைகாட்சியை உடைக்கும் அளவுக்கு எல்லாம் போய் இருப்பார்கள். மக்கள் மனதில் அந்த அளவு அந்த விளையாட்டிற்கு இடம் உள்ளது.
அதிலும் ஐ.பி.எல், டி 20 மற்றும் ஒரு நாள் விளையாட்டு என பல்வேறு வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்களோ அதை பொறுத்து ஒவ்வொரு விளையாட்டுகளும் மக்களிடம் தனித்தன்மை பெறுகின்றன. அந்த வகையில் தற்போது ஐ.பி.எல். முடிந்த நிலையில் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத் தக்கது.
அதே போல் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடியது. இதில் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று போனது. இந்த விளையாட்டை பொறுத்த வரை யார்வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். யார் வேண்டுமானாலும் தோற்று போகலாம். இது சாதரணமான விஷயம். ஆனால் நாம் பாகிஸ்தானுடன் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த விளையாட்டை விளையாடுவோம் என்பதை கருத்தில் கொண்டு பல மீம்கள் இணையத்தில் வைரலாகின.
இதில் பாகிஸ்தானின் போட்டியாளர்களும் கூட காரசாரமான பேச்சு வார்த்தைகள் நடந்தேறின. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் வகையில் இந்தியா தோற்று போனது குறிப்பிடத் தக்கது. அதை கொண்டாடும் விதமாக ஒரு ஆசிரியர் தனது ஸ்டேட்டஸில் அதை வெளிப்படுத்தி உள்ளார். அதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்ற இடத்தில் நீர்ஜா மோடி என்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் நபீஸா அட்டாரி என்ற ஆசிரியை டி20 போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. அதற்கு அவர் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டாட்டஸ் வைத்துள்ளார். இதை இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என பலர் கண்டனம் தெரிவித்ததால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.