மீண்டும் முடிவை மாற்றிய சுகாதாரத்துறை! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
232

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதன் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

சென்ற இரண்டு மாத காலமாக தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் அதன் பிறகு சனிக்கிழமை க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தற்சமயம் பருவமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக, தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை, இருந்தாலும் சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தடுப்பூசி முகாம்கள் மறுபடியும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வருகின்ற நான்காம் தேதி நடைபெறுகிறது எல்லா மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை 16 லட்சம் நபர்கள் தடுப்பூசி சிரித்துக் கொண்டார்கள் வருகின்ற சனிக்கிழமை முகாம் நடைபெற்றால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.

Previous articleஅதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்! கட்சித் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleவரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here