இவர்களுக்கெல்லாம் நிவராண தொகை! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதன்முதலாக சட்டப்பேரவையில் நடைபெறுவதை மக்கள் முன்னிலையில் நேரடி காட்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்தவகையில் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி அவர்கள் தனது உரையுடன் தொடங்கினார். கவர்னர் உரையானது திமுக வரைமுறை செய்து கொடுத்ததை பேசியது போல இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டப்பேரவை விட்டு ஏறினர்.
வெளியேறினர்.மேலும் முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தின்போது பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை அறிமுகம் செய்வதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.நீட் தேர்வால் தமிழகத்தில் வருடம் தோறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துகொண்டே உள்ளது.அவ்வாறு இருந்தும் தற்போது வரை மத்திய அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வில்லை. அதனால் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என்று கூறி அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.இன்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். தமிழகத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்தது.
என்றுமில்லாத அளவிற்கு இம்முறை இந்த வடகிழக்கு பருவமழை அதிக பாதிப்பை கொடுத்தது. இந்த வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பருவ மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகளின் பயிர்கள் அதிக அளவு சேதம் அடைந்தது. விவசாயிகளின் இறப்பிற்கு ரூ.132 கோடி நிவாரண உதவி வழங்குவதாக மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நான் அந்த நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.
தற்போது நடந்த சட்டப்பேரவையில் இன்னும் ஒருசில தினங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் அவர்கள் கூறியது, ஒன்றிய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவசாயிகளின் நலனை காக்கும் இந்த அரசு மாநில நிதியிலிருந்து நிவாரண நிவாரண தொகையை விவசாயிகளுக்கு வழங்குகிறது என்று கூறினார்.