அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவின் தலைநகர் திரினாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரிக்ட்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
சில வினாடிக்கு மேல் நீடித்த இந்த நில நடுக்கம் திரானா மற்றும் அதனை சுற்றியுள்ள சிறிய நகரங்களை கடுமையாக உலுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின் அலறி அடித்து கொண்டு வீடுகளை வீட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்து அடுத்து பல முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அல்பேனியாவின் பல நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.
திரானா பகுதியில் மூதாட்டி ஒருவரும், அவரது பேரனும் இருந்த வீடு, நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. அதில் மூதாட்டி இறந்தார். இந்த நிலநடுக்கத்தால் 18 பேர் வரை பலியாகினர்கள். 300 மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.
நிலநடுக்கத்தால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அந்த நாட்டின் அதிபர், ஈடுபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க தீயணைப்பு துறையினரும் ராணுவத்தினரும் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.