ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

0
152

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாபுராவிலிருக்கின்ற அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் அந்த கல்லூரியில் படித்து வந்த இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருசிலர் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தார்கள் அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ மாணவியர்கள் காவி துண்டை அணிந்து வந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதனால் அந்த கல்லூரியில் போராட்டம் வெடிக்க தொடங்கியது. இஸ்லாமிய மாணவிகள் அனைவரும் கல்லூரியின் நுழைவாயிலிலேயே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கு சென்ற மாதம் நிறைவு பெற்று விட்ட நிலையில் இன்று காலை 10மணியளவில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. வெளிப்புற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த மாவட்ட நிர்வாக அதிகாரி ராஜேந்திரா தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உடுப்பி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஷிவமொகாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் கே.எஸ் .ஆர். பி யின் 8 கம்பெனிகள், மாவட்ட ஆயுதப்படையின்6 கம்பனி உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் கூட்டம் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Previous articleஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அனுபவம் இல்லாத உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்!
Next articleஇன்று ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முதல்வரின் கோரிக்கையை ஏற்பாரா ஆளுநர்?