பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

0
196
A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!
A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . வாஷிங்டனில் உள்ள ஐடிஇஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணியளவில் 15 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

நேற்று நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மீக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்றொரு சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்வதில் உறுதியாக இருப்பதாக கடந்த வாரம்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்கூறியிருப்பதாவது, இந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களும்ஒரே பகுதியில் நடந்துள்ளன.மேலும் இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெட்ராய்ட் பகுதியில் கடந்த வாரம் இறுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இதனால் சக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleஆட்டோ தொழிலாளர்கள்  சங்க  கூட்டம் ! உதவித்தொகையை   உயர்த்த ஆர்ப்பாட்டம்!  
Next articleஇருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!