சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!!

Photo of author

By Divya

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஏற்பட கூடிய நோயாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

*அடிக்கடி சிறுநீர் கழிப்பது

*அதிக பசி

*அதிக உடல் சோர்வு

*கண்பார்வை மங்குதல்

*திடீர் எடை குறைவு

*அடிக்கடி தாகம்

*தோல் நிறம் மாற்றம்

சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது:-

*சுற்றுச்சூழல் மாற்றம்

*வாழ்க்கை முறை மாற்றம்

*உணவு பழக்கம்

*மரபணு மாற்றம்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள்:-

1.துளசி:-

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், என்சைம்களும் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

2.புதினா

நம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் அதிகளவில் ஃபோலேட், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

3.வேப்பிலை

இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது. வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய், வேர், தண்டு, பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

வேப்ப இலையை ஜூஸ் செய்து பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

4.கறிவேப்பிலை

இந்த கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி, ஏ, பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக இருக்கும்.

5.​வெந்தயக் கீரை

இந்த கீரையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. இவை இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொள்ள பெரிதும் உதவுகிறது.

6.அஸ்வகந்தா

அஸ்வகந்தா இரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க இந்த அஸ்வகந்தா கிழங்கு பெரிதும் பயன்படுகிறது.