ஒரே வாரத்தில் தொப்பையை கரைத்து தள்ள உதவும் பானம்!! இதை தயாரிக்க 3 பொருள் இருந்தால் போதும்!!

Photo of author

By Divya

ஒரே வாரத்தில் தொப்பையை கரைத்து தள்ள உதவும் பானம்!! இதை தயாரிக்க 3 பொருள் இருந்தால் போதும்!!

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் தான் அதிகளவு கெட்ட கொழுப்புகள் சேர்கிறது.இதனால் உடல் ஆரோக்கியத்தை இழப்பதோடு அழகையும் சேர்த்து இழக்கிறது.

வயிற்றுப் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உணவுமுறையில் கட்டுப்பாடு கொண்டு வருவதோடு ஆரோக்கியம் நிறைந்த பானங்களை அருந்த வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)சியா விதை
2)சப்ஜா விதை
3)கொத்தமல்லி விதை

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.அதில் 1/4 தேக்கரண்டி சியா விதை மற்றும் 1/4 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்க்கவும்.இதை ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பின்னர்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அதில் இடித்த கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.இந்த நீரை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு ஊறவைத்த சியா மற்றும் சப்ஜா நீரை இதில் சேர்த்து கலந்து குடிக்கவும்.

தினமும் டீ,காபிக்கு பதில் இந்த ஆரோக்கிய பானத்தை குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு கடகடன்னு கரைந்து விடும்.