ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

0
204

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து வீட்டின் முன்பு வைக்க வேண்டும்.

இதனை மூடி வைக்கக் கூடாது. இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் உங்கள் வீட்டின் மேல் இருக்கும் கண் திஷ்டி, பொறாமை எண்ணம், தீய சக்தி ஆகியவை விலகும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் அழிந்து போகும். இந்த பரிகாரத்திற்காக பயன்படுத்தும் பொருட்களை குருவி, காகம் என பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

மேலும் பச்சை நிற துணியில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து அதில் வெள்ளி நாணயம் அல்லது அதனுடன் தங்க நாணயம் அல்லது தங்க ஆபரணம் சேர்த்து அந்த துணியை பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். இதனை உங்கள் வீட்டின் பூஜையறையில்  மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம் குறைய ஆரம்பிக்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை முடிந்து வைத்துள்ள வெந்தயத்தை மாற்ற வேண்டும். அவ்வாறு  மாற்றப்படும் வெந்தயத்தை பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.