எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

0
76

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

தற்போது வங்கி பயன்பாட்டை விட மொபைல் பேங்கிங்,யுபிஐ செயலிகள் போன்றவற்றில் தான் நாம் அதிக பண பரிவர்த்தனையை செய்கின்றோம்.இதனால் கொள்ளையர்கள் பல்வேறு போலி செயலிகளை உருவாக்கி அதன் மூலம் நமது பணத்தை எளிமையாக திருடி விடுகின்றனர்.இதுபோன்ற செயலிகளை அவ்வப்போது சைபர் கிரைமால் முடக்கப்பட்டாலும் புதிய புதிய செயலிகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது.

தற்போது ஆண்ட்ராய்டு போனை குறி வைத்து தாக்கும் மால்வர் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.இந்த மால்வர் மொபைல் பேங்க் செயலியை (வங்கியின் செயலி)போன்றே உள்ளது. இதனால் இதனை வங்கியின் செயலி என்று நினைத்து அதனை லாகின் செய்து விட்டால் உங்கள் பணம் திருடப்படுவதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.எனவே மொபைல் பேங்க்-யை பயன்படுத்துவோர் இது வங்கியின் செயலிதானா என்று ஒன்று இருக்கு இரண்டு முறை ஆராய்ந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்கு செல்லும்போது இந்த மால்வர் எளிதில் பரவுவதாக கூறப்படுகிறது.

author avatar
Pavithra