உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!!

Photo of author

By Divya

உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!!

Divya

உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் மேஜிக் பானம்..!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாவே இருக்கின்றது. தொடர்ந்து உடல் எடை அதிகரித்தால் ஆரோக்கியம் விரைவில் கெட்டுபோய்விடும். இந்த உடல் பருமனால் நீரழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். இந்த உடல் பருமனை குறைக்க சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதுமானது.

தேவையான பொருட்கள்:-

*பெருஞ்சீரகத் தூள்

*தேன்

*எலுமிச்சை சாறு

*தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த பெருஞ்சீரகத்தை அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் பெருஞ்சீரகப் பொடி சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அருந்தவும் . இவ்வாறு தினமும் செய்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை மளமளவென குறையும்.