இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

0
181
#image_title

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்திற்கு ஆளாகுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் இந்து மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பற்றி கேவலப்படுத்தி பேசுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். தற்பொழுது வரை அவர் மீதான கண்டன குரல் எழுந்து வண்ணமே உள்ளது.

சர்ச்சையான கருத்துக்களை கூறுவதில் இவருக்கெல்லாம் முன்னோடி ஒருவர் திமுகவில் இருக்கிறார் என்றால் அவர் ஆ.ராசா ஒருவர் மட்டுமே. 2ஜி ஊழல் வழக்கு என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஆ.ராசா அவர்கள் தான்.

மேடை நிகழ்ச்சி, பேட்டி, பத்திரிகையாளர் சந்திப்பு என்று எதில் பங்கு பெற்றாலும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பல்வேறு தரப்பினரின் கண்டன குரலுக்கு ஆளாகுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஆ.ராசா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் “இந்தியா ஒரு நாடே அல்ல” “இந்தியா எப்பொழுதும் ஒரு நாடே அல்ல” என்று இந்தியாவை கேவலப்படுத்தி பேசி இருக்கிறார்.

அதுமட்டும் இன்றி “மணிப்பூர் மக்கள் அனைவரும் நாய்க்கறி சாப்பிடுவார்கள்” இன்றும் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இருந்து கொண்டு நாட்டை கேவலப்படுத்தி பேசியதற்கும் மணிப்பூர் மக்கள் நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று சர்ச்சையாக பேசியதற்கும் ஆ.ராசாவை கண்டித்து பல்வேறு தரப்பினர் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர்.