ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

காலையில் எழுந்ததும் டீ,காபி குடிக்கும் பழக்கம் இந்தியர்களிடம் உள்ளது.ஆனால் டீ,காபி போன்ற பானங்களுக்கு பதில் சூடான நீரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சுத்தமான கலப்படம் இல்லாத வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க முடியும்.

நெய் + ஹாட் வாட்டர் பயன்கள்:

1)தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.இளமை தோற்றத்தை கொடுக்கிறது.

2)உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3)செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

4)உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

5)மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

7)மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

இந்த ட்ரிங்க் எப்படி செய்வது?

ஒரு கிளாஸ் அளவு நீரை பாத்திரத்தில் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு அதில் சில துளிகள் நெய் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு குடிக்க வேண்டும்.