எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

0
72
#image_title

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

இந்தியர்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலிகை பொருள் கிராம்பு.இவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியவை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

இந்த கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.டீ,காபிக்கு பதில் கிராம்பு நீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவது நல்லது.

இந்த கிராம்பு நீர் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பின்னர் அதில் 2 அல்லது 3 இலவங்கம்(கிராம்பு) சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த கிராம்பு நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டவும்.பிறகு அதில் சுவைக்காக ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.