40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

0
107

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது கடந்தாலே இந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதை நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது.

இப்போது இருக்கும் உணவு பழக்கத்தால் 20 வயதிலேயே அனைவருக்கும் முழங்கால் வலி மூட்டு வலி என்று உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்றுகிறது. அனைத்து விதமான உடல் பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு பொடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
இதற்கு நமக்கு தேவைப்படுவது சுக்கு. சுக்கை எப்போதுமே தோல் நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். சிலர் தலைவலியால் மிகவும் சிரமப்படுவார்கள். தலையில் எப்போதுமே நீர் கோர்த்து கொண்டே இருக்கும். சைனஸ் தொந்தரவால் மிகவும் அவதிப்படுவார்கள்.

தலைவலி பல்வேறு விதமாக வருகிறது. சளியின் காரணமாகவோ அல்லது ஒரு சிலருக்கு நீண்ட தூர பயணத்தின் போது தலைவலி ஏற்படும். மன அழுத்தம் மற்றும் மிக அதிகமான வேலை பளு காரணமாக தலைவலி ஏற்படலாம். இது அனைத்தையும் இந்த சுக்கு பத்தே நிமிடங்களில் சரி செய்து விடும். சுக்கை தோல் நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு சிறிய அளவு இடிக்கக் கூடிய உரலை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு சொட்டு அளவு பசும் பாலை விட்டு அதன் மேல் சுக்கை நன்றாக தேய்த்து வரவும். நன்றாக தேய்த்து விட்டு அதை தலைவலி இருக்கக்கூடிய இடத்தில் தடவி வர உடனடியாக எந்தவிதமான தலைவலியோ சைனஸ் பிரச்சனையோ தலையில் நீர் கோர்த்தலோ என அனைத்தும் மாயமாகிவிடும்.

அடுத்தபடியாக சிறுநீரகப் பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை, மூட்டு, கை, கால் பிரச்சனை, முழங்கால் பிரச்சனை, இடுப்பு வலி என அனைத்தையும் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்க்கலாம்.

இதற்கு நமக்கு தேவைப்படுவது சுக்கு பொடி. மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுபவர்கள் இந்த சுக்கு பொடியுடன் சிறிதளவு வெந்தய பொடியையும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து மூட்டுகளில் பத்து போட்டு வர மூட்டு வலி உடனடியாக சரியாகும்.

மேலும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த சுக்குப்பொடி மிகவும் பயன்படும். அதாவது ஒரு டம்ளர் தண்ணீரில் அரை தேக்கரண்டி அளவு சுக்கு பொடியை நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடத்திற்கு இதை கொதிக்க வைத்து பின்பு வெதுவெதுப்பான சூட்டில் சிறிதளவு தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர இந்த சுக்கில் இருக்கக்கூடிய தெர்மோஜெனிக் எனும் பொருள் நம் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை உடனடியாக கரைத்து வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.

இந்த சுக்கு பொடியை ஒரு டம்ளர் பாலில் அரை தேக்கரண்டி அளவு கலந்து கொண்டு கூடவே இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். சளி இருமல் இருப்பவர்கள் பனங்கற்கண்டை பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரையின் அளவை குறைவாக பயன்படுத்தலாம். இதை எல்லாம் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பாக குடித்து வரலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

இவ்வாறு இதை தினமும் குடித்து வர உடம்பில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளான தலைவலி, சளி, இருமல், மலச்சிக்கல், குடல் புண், வயிறு உப்புசம், ரத்தக்கொதிப்பு, செரிமான கோளாறு என அனைத்தையும் இதன் மூலம் சரி செய்யலாம். நமது பித்தத்தை சரியான அளவு வைத்துக் கொள்ளும்.

இவ்வாறு இந்த பாலை தினமும் குடித்து வருவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அடி வயிற்று வலி சிலருக்கு தலைவலி இடுப்பு வலி என அனைத்தையும் சரி செய்ய முடியும்.

மேலும் நீண்ட தூர பயணத்தின் போது வருகின்ற தலைவலி மற்றும் வேலை சுமை அதிகமாக இருப்பதனால் ஏற்படக்கூடிய தலைவலி என அனைத்தையும் இந்த சுக்குப்பொடி சுக்குநூறாக்கிவிடும்.

Previous articleஎன்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!
Next articleஇதை தேய்த்த 2 நிமிடங்களில் உங்கள் பாதம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்!!