ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

0
103

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூவை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் போது பல வகையான நன்மைகளை அடைய முடிகிறது.

ஆவாரம் பூ மற்றும் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.

ஆவாரம் பொடியை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு வெந்நீரில் சேர்த்து இதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிப்பு அடையும். நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறும்.

ஆவாரம் பூ 200 கிராம், பச்சைப் பயறு 200 கிராம், பன்னீர் ரோஸ் 200 கிராம் என்ற வீதம் எடுத்து காயவைத்து பொடி செய்து குழந்தைகளை தினமும் இக்கலவையில் குளித்து வருகையில் குழந்தையின் சருமம் பொன்னிறம் ஆகி அழகு கொடுக்கும்.

அதுவே பெரியவர்கள் தினமும் 10 பூக்களை பறித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகையில் உடலில் உள்ள நோய்கள் தீரும்.உடல் சருமம் பொன்னிறமாகும்.

மேலும், ஆவாரம்பூ வேரை சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வருகையில் சீதபேதி குணமாகும்.

ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி நோய்களையும், கண் நோய்களையும், சிறுநீர் கோளாறுகளையும், தோளில் வரும் வெள்ளை வெள்ளை நோய்களையும் குணமாக்கும்.

இதனை, செய்வதன் மூலம் சருமம் தங்க நிறம் ஆகும் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கும்.