பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!
சொத்தை பற்கள்,ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் பல் வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்.
தீர்வு 01:-
1)கடுக்காய்
2)நெல்லிக்காய்
3)தான்றிக்காய்
இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
இந்த பொடியை பல்லில் வலி உள்ள இடத்தில் பயன்படுத்தினால் பல் வலி முழுமையாக குணமாகும்.
தீர்வு 02:-
1)மஞ்சள் தூள்
சிறிதளவு மஞ்சள் தூளில் சில துளி தண்ணீர் விட்டு பேஸ்டாக்கி பல் வலி உள்ள இடத்தில் பூசினால் அதன் வலி முழுமையாக குணமாகும்.
தீர்வு 03:-
1)வேப்பிலை பொடி
1/4 தேக்கரண்டி வேப்பிலை பொடியை தண்ணீரில் குழைத்து பேஸ்டாக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் அவை முழுமையாக குணமாகும்.
தீர்வு 04:-
1)பூண்டு
2)மஞ்சள்
ஒரு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அதில் சிறிது மஞ்சள் சேர்த்து குழைத்து வலி உள்ள பற்களில் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.இவ்வாறு செய்தால் பல் வலி முழுமையாக சரியாகும்.
தீர்வு 05:-
1)கொய்யா இலை
2)புளி
ஒன்று அல்லது இரண்டு கொய்யா இலையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு புளியை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.இடித்த கொய்யா இலை மற்றும் புளியை ஒன்றாக சேர்த்து பற்களில் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி உடனடியாக குணமாகும்.