கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

0
189
#image_title

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும்.இதனால் அடிக்கடி தலைவலி,மயக்கம்,மந்த நிலை ஏற்படும்.உடல் சூடானால் அம்மை,சூட்டு கொப்பளம் ஏற்படும்.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க ராகி மோர் தயாரித்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – 1/2 கப்
2)மோர் – 2 கப்
3)கடுகு – 1/2 தேக்கரண்டி
4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி
5)கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
6)எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் ராகி மாவு போட்டு 3/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து ராகி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதன் பின்னர் அடுப்பை அணைத்து ராகியை ஆற விடவும்.பிறகு மிக்ஸி ஜாரில் தயாரித்த ராகியை போட்டு 2 கப் மோர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் கடுகு,உளுந்து,கடலை பருப்பு போட்டு பொரிய விட்டு அரைத்த ராகி மோரில் சேர்த்து கலந்து விடவும்.

இந்த ராகி மோரை குடித்தால் உடலில் உள்ள சூடு முழுமையாக குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.