செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மேல் மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேர் உடல் கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் போலீசார் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணிக்கு மேலாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து ஏற்ப்பட்ட செய்தியை கேட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதில் அவர் கூறியதாவது தமிழ்நாடு அரசு போக்குவரக் கழகத்தின் பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதால் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த செய்தியை கேட்ட அவர் மிகவும் வேதனை அடைந்ததாகவும் மற்றும் உயிரிழந்தவர்களை இறந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த ஒன்பது நபர்களுக்கு மேல் சிகிச்சை சிறப்பாக வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.