ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன்

0
97

ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன்

கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு கிடுகிடுவென உயர்ந்து 130 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகிய அனைவரின் சம்பளத்தையும் விட அதிகம் என சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த கமல் படங்களின் சந்தை பல மடங்கு அதிகமாகியுள்ளது.