நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 8 மணி நேர உறக்கம் இருந்தால் மட்டுமே மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெட், பாய் உள்ளிட்டவைகளில் இந்த உறக்கத்தை நாம் கழிக்கின்றோம்.
அந்தவகையில் நம்மில் பலருக்கு கோரைப்பாயில் உறங்குவது என்பது மிகவும் பிடிக்கும். இந்த கோரை பாயை நாணல் பாய் என்றும் அழைக்கப்படுகின்றோம். நம் இந்தியர்கள் கோரைப்பாய் உறங்குவதை அதிகம் விரும்புகின்றனர். இந்த பாய் கோரை எனப்படும் ஒரு வகை புல்லின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த கோரைப்பாயில் தூங்குவதன் மூலம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கோரைப்பாயில் தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-
*தினமும் கோரைப்பாயில் தூங்குவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். கோரைப்பாயில் உள்ள இயற்கையான வடிவமைப்பு உடலில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். அதேபோல் இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த கோரைப்பாய் உறக்கம் சிறந்த தீர்வாக இருக்கும்.
*இந்த கோரைப்பாயில் உறங்குவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்.
*கோரைப்பாயில் உறங்குவதால் ஒவ்வாமை(அலர்ஜி) பிரச்சனை வராது. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.
*கோரை பாய்களுக்கு மனித உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்கள் கோரைப்பாயில் உறங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
*கோரைப்பாயில் உறங்குவதால் மன அமைதி, நிம்மதி உண்டாகும்.