ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இன்று நடைபெறும் முக்கிய ஆட்டம்!

0
228

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா, இலங்கை, அணிகள் சந்தித்தனர். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நேற்றைய தின போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் ஆருரங்களிலும் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறி அதிர்ச்சியை வழங்கினர். சூரியகுமார்யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளை சந்தித்து 72 ரன்களை சேர்த்தார்.

சூரியகுமார் யாதவ் 34 ரன்கள் ஆட்டம் இருந்து விவிலியின் திரும்பினார் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காத காரணத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த நிலையில் இலங்கை அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தொடக்க ஆட்டக்காரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குஷல் மெண்டிஸ் உள்ளிட்டோர் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர்.பாத்தும் நிஸ்ஸங்க 52 எங்களும் குசல் மெண்டிஸ் 57 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து போட்டி பரபரப்பாக சென்றது இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணைகளை வீழ்த்தியதன் மூலமாக ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான், அணிகள் தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன் படத்தைப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!!
Next articleதனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here