கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவர் ராமதாஸ் கூறும் தீர்வு

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் விதமாக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவு!

AIADMK meeting

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஓ.பி.எஸ் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் … Read more

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு

Edappadi Palanisamy and MK Stalin

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து … Read more

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு தற்போது வயது 74. கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு … Read more

இந்தியாவுடனான முக்கிய சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா

Saudi Arabia

இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்து சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரையில் 56 லட்சத்து 46 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், தினமும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு என்ற நிலையை இந்தியா தற்போது சந்தித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா … Read more

அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! தீவிர விசாரணையில் காவல்துறை

Minister Assistant Kidnapped in Tirupur-News4 Tamil Online Tamil News

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளராக கர்ணன் என்ற கனகராஜ் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தின் போது உடுமலை சட்டமன்ற மன்ற அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் போட்டு அவரை … Read more

பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு

Police case Against Madurai Salon Shop Owner Mohan

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு பணத்தை அருகில்  இருந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி நாடு முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து தேசிய அளவில் இவர்களது குடும்பம் பிரபலமானது. குறிப்பாக பிரதமர் மோடி கூட டெல்லியில் … Read more

இந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிரடி யோகம்! இன்றைய ராசிபலன் 23.09.2020

Rasipalan Today

இன்றைய ராசிபலன் (23/9/2020) இன்றைய ராசிபலன் 23.09.2020 புரட்டாசி-7 புதன் கிழமை மேஷம் மேஷம்: மேஷ ராசிகாரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் அவ்வப்போது சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். மேலும் குடும்பத்தில் பல பிரச்சனைகளை நீங்களே சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள் உங்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வேலைக்கு செல்வோர் உங்கள் உத்தியோகத்தில் அவ்வப்போது சிறுசிறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். மொத்தத்தில் இன்று உங்களுக்கு மிகவும் பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் … Read more

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

சமீபகாலமாக துருக்கி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக தெரிகிறது. பாகிஸ்தானும் துருக்கியும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறுகின்றன. பாகிஸ்தானுக்கு வெடிமருந்துகள் மட்டுமல்லாது போர்க்கப்பல்களையும் கொடுத்து உதவுகிறது துருக்கி. இப்போது துருக்கி ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான சொற்றொடர்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. “இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்” என்ற சொற்றொடர்தான் அது. இந்த சொற்றொடரை பாகிஸ்தான் ஊடகங்கள் தான் எப்போது பயன்படுத்தும். இந்த சொற்றொடரை முன்னமே ஒருமுறை  பாகிஸ்தான் அழுத்தத்தினால் துருக்கி அரசினால நடத்தப்படும் அனடோலு என்ற நீயுஸ் ஏஜென்ஸி பயன்படுத்திய … Read more

இடிந்து விழுந்தது 5 மாடி கட்டிடம். மகாராஷ்டிராவில் பரிதாபம்

இடிந்து விழுந்தது 5 மாடி கட்டிடம். மகாராஷ்டிராவில் பரிதாபம்

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் கஜல்பூர் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து மீட்பு படையினர் மற்றும் காவல் துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 15 க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் 50 மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.   உயிரழப்பு எதுவும் இல்லையென்றும், அதிக மழைபொழிவு காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.   தேசிய … Read more