மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!! மும்பை மாநகரின் தென் மும்பையிலுள்ள கல்பாதேவி என்னும் பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பாதேவி கோவில். இக்கோவிலானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இக்கோவிலுக்கு தசரா போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளே நுழையும் பாதையானது மிக குறுகலாக இருக்கும். இதனால் பக்தர்கள் உள்ளே வந்து வெளியே செல்ல சிரமமாகவுள்ளது. இதன் காரணமாக … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச்.,20) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் … Read more

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ? உத்தரப்பிரேதேச மாநிலம், அம்பேத்கார் நகர் பீட்டி என்னும் எல்லைக்குட்பட்ட பகுதி தான் கஜூரி பஜார். இப்பகுதியினை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள வேகனார் காரினை தனது சகோதரரோடு இணைந்து சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைப்பினை மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த சகோதரர்கள் செய்துள்ள இந்த பிரத்யேக ‘ஹெலிகாப்டர் கார்’ குறித்த செய்திகள் இணையத்தில் … Read more

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!! சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் ஓர் புதிய கிளையினை துவங்கியுள்ளது காவேரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் உரையாற்றியுள்ளார். அதில், ‘நான் கடந்த 25 வருஷமா எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களில் கலந்துக்கொள்வதில்லை. ஏனெனில், உடனே அதில் எனக்கு பங்கு இருக்கு, நான் அதில் பார்ட்னர் என்று கூறிவிடுவார்கள். ஒரு … Read more

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 … Read more

மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!!

மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!! கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் அதில் தோல்வியினை தழுவிய நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அப்போது அம்மாநில முதல்வராக இருந்த சந்திர சேகர ராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, தமிழிசை சௌந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக … Read more

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!! ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டின் ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பெரும் விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக அவரால் 2023ம் ஆண்டின் ஐபிஎல் … Read more

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜ்மல் அமீர், யோகிபாபு, பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்காக விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரிகிறது. … Read more

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!! உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உத்தரப்பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு கல்வித்துறையினை சேர்ந்த ஓர் குழு வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த குழுவில் ஆசிரியர் தர்மேந்திரக்குமார் உடன் மற்றொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்த குழுவோடு வாரணாசி பகுதியை சேர்ந்த போலீஸ் குழுவும் இணைந்து சென்றுள்ளனர். இவர்கள் சென்றப்பொழுது கல்லூரியின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் வாசலுக்கு வெளியே வாகனத்தில் … Read more