தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

0
203
#image_title

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 முனை போட்டி நடக்கிறது. இந்நிலையில் இத்தேர்தலில் அதிமுக கட்சியானது தேமுதிக, எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி தேமுதிக கட்சியினருக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை, திருச்சி, கடலூர் 5 உள்ளிட்ட தொகுதிகள் அதிமுக கட்சியினரால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவரையடுத்து, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். எனினும், இதுவரை தேமுதிக சார்பிலான வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

விருதுநகர் தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்பி.மாணிக்கம் தாக்கூர் உள்ள நிலையில், அவர் அத்தொகுதியில் 4,70,883 வாக்குகள் பெற்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். இதேபகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16,329 வாக்குகள் பெற்றிருந்துள்ளார். இதனை வைத்து பார்க்கையில் அத்தொகுதியில் தேமுதிக கட்சிக்கு அதிகளவு வாக்குகள் கிடைக்கும் என்பதால் அங்கு தேமுதிக சார்பில் இம்முறை விஜய பிரபாகரன் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.