மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் அக்‌. 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த வழக்கு ஒன்றில், கடற்கரைகளில் … Read more

27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள, மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் … Read more

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவர் முறைகேடு குறித்து விசாரிக்க  ஊராட்சி பகுதிக்கு  … Read more

நீங்க கேன் தண்ணீர் வாங்குறீங்களா..?? கேன் தண்ணீர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

நீங்க கேன் தண்ணீர் வாங்குறீங்களா..?? கேன் தண்ணீர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல இடங்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நம்பி கேன்களிலும், பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் இந்த குடிநீர் சுகாதாரமானதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளிடம் இருந்து தண்ணீர் … Read more

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் … Read more

ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே சேவையானது சரியாக இயக்கப்படவில்லை. தற்பொழுது மத்திய,மாநில அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் , ரயில்களும் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரயில் நிலையத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் தீபாவளி , தசரா, கிறிஸ்மஸ், பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதினால் பயணிகள் சேவையை அதிக அளவில் இருப்பதினால் அவற்றை … Read more

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் , ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் நடக்கவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள், ஊரடங்கு காரணமாக நடத்த இயலாமல் போனது .இதனை நடத்தும் முடிவில் மத்திய அரசும் தேர்வு முகாமையும் முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்தது. அதில் நடந்த ஜே.இ.இ தேர்வு ,செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா முழுவதும் … Read more

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு (வயது 34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவிற்கும் காதலி சௌந்தர்யாவிற்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு… அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு... அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இன்று முதல் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இந்த ரயிலில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 903 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,737 … Read more