தமிழகத்தில் புதிதாக 5528 பேருக்கு கொரோனா; 64 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5528 பேருக்கு கொரோனா; 64 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 64 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,185 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை திரும்பப் பெற்றுத்தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகார் மனுவில் சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு சூப்பர் ஹீரோ உடன் இணையும் அவதார் படக்குழு! அந்த ஹீரோ யார் தெரியுமா?

ஒரு சூப்பர் ஹீரோ உடன் இணையும் அவதார் படக்குழு! அந்த ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் திரைப்பட வரலாற்றில் 3D  தொழில்நுட்பம் பொருந்திய திரைப்படங்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த 3D  தொழில்நுட்பம் ஆனது பெருமளவில் உபயோக படுத்தப்படுகிறது. இந்த 3D தொழில்நுட்பத்தில் பிரபலமான நிறுவனங்களான மார்வெல்,  டிசி போன்ற நிறுவனங்கள் ஹாலிவுட் திரைப்படங்களை மிகவும் அற்புதமாக இயக்கி வருகின்றனர். பெரும்பாலும் இந்த 3D  தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் டெக்னீஷியன்கள் இந்திய திரைப்படங்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவதார் பட 3D தொழில்நுட்ப டெக்னீஷியன்கள் … Read more

பிரதமர் மகிந்த ராஜபக்சே எடுக்க போகும் அதிரடி முடிவு

பிரதமர் மகிந்த ராஜபக்சே எடுக்க போகும் அதிரடி முடிவு

பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவிக்கையில், “பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என, புத்த மத மறுமலர்ச்சி பிக்ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்” … Read more

கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:?

கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:?

கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:? கனமழை காரணமாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் நடந்துவரும் 6- ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது.அகல்வாராய்ச்சி பணிகளில் ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டமாக நடைபெற்று வருகின்றன. … Read more

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ … Read more

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதே போல் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி … Read more

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. … Read more

அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

அமீரகத்தில் தற்போது செயல்பட்டு வரும் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடு வரை மொத்தம் 1,200 கி.மீ. தொலைவு கொண்ட போக்குவரத்து பாதையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த துபாய்- புஜேரா ரெயில்வே தடத்தில் 35 பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் அந்த மலைப்பகுதியில் தொடங்கியுள்ளது. பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு மலையை குடைந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. … Read more