இத்தனை பில்லியன் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையா?

இத்தனை பில்லியன் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையா?

சுவிட்ஸர்லந்து அதன் Ceneri Base சுரங்க ரயில் பாதையை அதிகாரபூர்வமாக நேற்று திறந்து வைத்தது. அதனைக் கட்டிமுடிக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்தன; 25 பில்லியன் டாலர் செலவானது. செங்குத்தான உயரம் அதிகம் கொண்ட பாதைக்குப் பதிலாக அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. புதிய சுரங்கப் பாதை, ரோட்டர்டாமிலிருந்து (Rotterdam) ஜினோவாவரை (Genoa) மலைகளின் அடியில் சுமார் 1,400 கிலோமீட்டருக்குத் தடையின்றி பயணம் மேற்கொள்ள வகைசெய்யும். சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனப் பயணங்களைக் குறைக்கலாம் – … Read more

உக்ரேனில் நடந்த வினோத சம்பவம்

உக்ரேனில் நடந்த வினோத சம்பவம்

பலரின் வாயைப் பிளக்க வைத்த அந்தச் சம்பவம் உக்ரேன் தலைநகர் கீவ் நகரின் போரிஸ்பில் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்தது. சில சமயம், விமானம் தரை இறங்கிய பின், விமானக் கதவுகள் திறக்கச் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், உக்ரேனில்  காத்திருக்க மறுத்த ஒரு பெண் தானாகவே விமானத்தின் அவசரக் கதவுகளைத் திறந்து விமானத்தின் இறக்கையில் நடந்தார். மிகவும் புழுக்கமாக இருந்ததால் அவ்வாறு செய்ததாக கூறினார். அவர் அவ்வாறு செய்ததால், Ukraine International ஏர்லைன்ஸ் தனது … Read more

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 61 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,859 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

இத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்

இத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் நியூஸிலாந்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவரபட்டது.இந்த நிலையில் அங்கு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிருமித்தொற்றுப் பாதிப்புக்கு ஆளான 50 வயது ஆண் இறந்தார். அவர் சென்ற மாதம், ஆக்லாந்து நகரில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் தொடங்கியபோது பாதிக்கப்பட்டார்.

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்த சக்தியதான் அளிக்கிறதா?

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்த சக்தியதான் அளிக்கிறதா?

ரஷியா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் முதல் இரண்டு கட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து இருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பு … Read more

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார். … Read more

மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை வெள்ளிக்கிழமையே வெளியாகும் … Read more

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ? உத்தரபிரதேசத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை வசித்து வந்த ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா , தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவரும் மொபைல் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் வேலையில் இழந்து வீட்டில் … Read more

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்த காலம் 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் பார்சிலோனா கிளப்பை விட்டு வெளியேற விரும்பினார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் விடுவிக்கும்படி பார்சிலோனா கிளப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை, ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்று பார்சிலோனா தரப்பில் சொல்லப்பட்டது. மெஸ்சியின் தந்தை நேரில் … Read more

இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  கூறுகையில், ‘விளையாட்டு ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது … Read more