முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை. கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியை நடத்துமாறு கட்சி மேலிடம் கேட்டால் தான் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியிருப்பது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு இவரும் ஆசைப்படுகிறார் என்பதை காட்டி இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து என்னை … Read more

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் அறிவிதுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் எனவும் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறையும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும் எனவும் ‘குப்பையில்லா … Read more

கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!

கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் இறந்த நிலையில் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவ முறையில் அனுமதி. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், தாமரசர்லா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 23 பேர் ஒரே ஷேர் ஆட்டோவில் ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டத்திலுள்ள குரஜாலா பகுதியில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். குண்டுகல … Read more

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!! நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. பஞ்சர் கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் சேதம். மர்ம நபர்கள் யார்? யார் மீது வீசுவதற்காக அவர்கள் வந்தனர் என்பது … Read more

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ். இவரது தொழில், விலை நிலங்களின் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பது. இந்நிலையில் தற்போது இதில் வருமானம் இல்லாததால் பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து … Read more

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு – 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானதில் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த ச்மபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலை … Read more

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. சுள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். … Read more

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 108.14 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை … Read more