10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை!

10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை!

10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை. மகாராஷ்டிரா மாநிலம் புனையில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பங்கு பெற்ற இசைக்கச்சேரிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரின் இசை கச்சேரியை காண்பதற்கு ஏராளமான அவரது ரசிகர்கள் திரண்டு இருந்தனர். புனே காவல்துறையை சார்ந்த ஏராளமான மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அந்த இசைக் கச்சேரியில் … Read more

மதிமுக தனி நபர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக போராடும் இயக்கம் அல்ல!! தமிழக நலனுக்காக பாடுபடும் இயக்கம்!

மதிமுக தனி நபர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக போராடும் இயக்கம் அல்ல!! தமிழக நலனுக்காக பாடுபடும் இயக்கம்!

மதிமுக தனிப்பட்ட வைகோ விற்கும் அவருடைய குடும்பத்திற்கும் பாடுபடும் இயக்கமல்ல ; தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் இயக்கம். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற துரைசாமியின் கடிதத்தை மதிமுக அலட்சியப்படுத்தி வருகிறது. மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ,மதிமுக முக்கிய … Read more

மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி!! திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு!!

மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி!! திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு!!

மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் சிறு தொழில் செய்ய வாய்ப்பளிப்பதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்த திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் மகாதேவ் பிரசாத். திமுகவில் பொறுப்பில் இருந்து வருபவரான மகாதேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து அப்பகுதியை சேர்ந்த இல்லத்தரசிகளிடம் சிறு தொழில் செய்ய வாய்ப்பு வழங்குவதாக கூறி தலா 25ஆயிரம் ரூபாய் முன்பணமாக … Read more

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக … Read more

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் … Read more

திமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !

திமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !

திமுக ஆட்சி அமைந்த பிறகு திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியளவு குறைந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து,  திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டில் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அந்த நிதியிலிருந்து இன்னோவா , ஸ்கார்பியோ என 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு , கோயில் இணை ஆணையர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரமேஸ் என்கிற நபர் சமூக வலைதளங்களில் தொடர் குற்றச்சாட்டுகளை … Read more

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர் செல்வம்!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும், யாராலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். திருச்சி மாநாடு தமிழ்நாடு முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; அடுத்த கட்ட மண்டல மாநாடு குறித்தும் , மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் … Read more

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவ்வாறு  மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியதாவது,என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு … Read more

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

கம்மாளப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம். இதன் காரணமாக காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம். தமிழகம் முழுவதும் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 385 கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கம்மாளப்பட்டி … Read more

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை! தலைநகர் டெல்லியில் கோடை காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயல் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக 500 சதுர கி.மீ க்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்றும் பயிர் கழிவுகள் எரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை கண்காணிக்க ரோந்து குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று … Read more