சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

0
134
#image_title

கம்மாளப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம். இதன் காரணமாக காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம்.

தமிழகம் முழுவதும் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 385 கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் கம்மாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கமாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கிராமசபை அதிகாரிகள், காவல்துறை ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்து நல்ல முறையில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்த கடன் சங்கத்தில் பல்வேறு சமூகத்தினரை சேர்ந்த சுமார் 2200 உறுப்பினர்கள் சேர்ந்து பல கடன்களைப் பெற்றும், முறையாக கடனை திருப்பி செலுத்தியும் அரசின் நலத்திட்டங்களை பெற்று வருவதாக கூறியுள்ளனர்.

இந்த சங்கத்தில் மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 130 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள 2200 உறுப்பினர்கள் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

தற்போது இந்த கூட்டுறவு சங்கத்தை மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு சங்கமாக மாற்றும்போது மற்ற சமூகத்தை சேர்ந்த மக்கள் உறுப்பினராக சேர்ந்து கடன் பெற முடியாத சுழல் ஏற்படும் என்றும் அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்கள் பெரும் பல்நோக்கு மையத்தை வேறு இடத்திலோ, தற்போது இயங்கி வரும் கூட்டுறவு சங்க வளாகத்திலோ அமைத்து செயல்படுத்தவும் மற்றும் கம்மாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் அனுமதிக்குமாறு இன்று நடைபெற்ற என்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஊர் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் கிராம சபை கூட்ட அதிகாரிகள் தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிராம சபை கூட்டத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Savitha