விவாகரத்திற்கு பிறகு கோயில், கோயிலாக சுற்றும் சமந்தா காரணம் இதுதானா.!!

விவாகரத்திற்கு பிறகு கோயில், கோயிலாக சுற்றும் சமந்தா காரணம் இதுதானா.!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவருடைய விவாகரத்துக்கு பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என … Read more

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் கடைசி பாடல் நாளை வெளியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான … Read more

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த அயல்நாட்டு படப்பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார். கூழாங்கல் திரைப்படம் ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு … Read more

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் … Read more

Breaking: அரசு பேருந்தில் பயணிகளுடன் ஏறி ஆய்வு செய்த தமிழக முதல்வர்.!!

Breaking: அரசு பேருந்தில் பயணிகளுடன் ஏறி ஆய்வு செய்த தமிழக முதல்வர்.!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசுப் பேருந்தில் பயணிகளுடன் ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகர் வரை செல்லும் அரசுப் பேருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பயணிகளிடம் முகக்கவசம் அணிய சொல்லியும், சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லியும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமுக்கு தமிழக … Read more

நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டமாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் … Read more

மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சலுகை.!!

மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சலுகை.!!

மட்டன் பிரியாணிக்காக பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை வழியில் உறவினர்களோடு சந்திக்க அனுமதித்தற்காக 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் இளம் பெண்களை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அருளானந்தம் உட்பட 4 … Read more

தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ஒரு வாரத்திற்குத் தேவையான மது வகைகள் மட்டுமே இருப்பு வைக்கப்படும். ஆனால், பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை … Read more

இன்று முதல் ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை சூப்பர்-12 போட்டிகள்.!!

இன்று முதல் ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை சூப்பர்-12 போட்டிகள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

தீபாவளி கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.!!

தீபாவளி கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பதா.? … Read more