தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

0
254
#image_title

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு வென்ற பாலபாரதி மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பபடும் என தெரிகிறது.

திண்டுக்கல் மக்கள் பாலபாரதிக்கு அமோக வரவேற்பு அளித்து வரும் நிலையில், மீண்டும் களம் கண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Previous articleவிருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
Next articleமத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!