நம்புங்க.. இதை குடித்தால் 1 மணி நேரத்தில் ‘கிட்னி ஸ்டோன்’ முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

நம்புங்க.. இதை குடித்தால் 1 மணி நேரத்தில் ‘கிட்னி ஸ்டோன்’ முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் நோய் தொற்று, ஸ்டோன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அவை உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கி விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முயற்சி செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண நினைத்தால் இன்னும் சிறப்பு. அந்த வகையில் சிறுநீரகத்தில் எத்தனை கற்கள் இருந்தாலும் அதை சில மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் தன்மை பூளைப்பூ செடிக்கு இருக்கிறது.

இவை வரப்பு ஓரங்களில் செழிப்பாக வளரக் கூடிய ஒரு மூலிகை தாவரம் ஆகும். இந்த பூளைப்பூ செடி செடியை அரைத்து பாலில் கலந்து பருகினால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*பூளைப்பூ செடி – 1/4 கைப்பிடி அளவு

*பசும் பால் – 1/2 டம்ளர்(காய்ச்சியது)

*நாட்டு சர்க்கரை – சிறிதளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பூளைப்பூ செடியின் பூ, இலைகள் மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய அதன் வேர் உள்ளிட்ட அனைத்தியும் போட்டு சுத்தமான தண்ணீர் கொண்டு அலசிக் கொள்ளவும். அடுத்து ஒரு உரலில் சுத்தம் செய்த அனைத்தையும் போட்டு அரைக்கவும்.

பிறகு 1/2 டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சிறுநீரக கல் அனைத்தும் விரைவில் கரைந்து வெளியேறி விடும்.