உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

Photo of author

By Divya

உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

Divya

நம் உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் பித்தம் சரியாக இருந்தால் தான் உட்கொள்ளும் உணவு செரிமானமாகும்.இப்படி இருக்கையில் பித்த அளவு அதிகரித்துவிட்டால் அதை பாட்டி வைத்தியம் மூலம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

பித்தம் அதிகரிக்க என்ன காரணம்:

*தூக்கமின்மை
*டீ,காபி அதிகம் குடித்தல்
*உடல் சூடு
*மோசமான உணவுமுறை

பித்த அறிகுறிகள்:

*நெஞ்செரிச்சல்
*செரிமானக் கோளாறு
*தண்ணீர் தாகம்
*பசி உணர்வு
*வாய் கசப்பு
*சரும அரிப்பு

பித்தம் அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை:

கசப்பு தன்மை கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் பித்தம் குறையும்.வெள்ளரி,தர்பூசணி,தேங்காய்,பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொண்டால் பித்தம் குறையும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பித்தத்தை குறைக்க வைத்தியம்

1)இஞ்சி துண்டு
2)தேன்

ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கண்ணாடி கிண்ணத்தில் இஞ்சி துண்டுகளை போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இந்த கலவையை நாள் முழுவதும் ஊறவைத்த பின்னர் சாப்பிடுங்கள்.இஞ்சி தேன் கலவையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பித்த அளவு குறையும்.

1)சுக்கு துண்டு
2)சீரகம்
3)நெல்லிக்காய்

முதலில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் வாட்டி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடியை வாங்கிக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் நெல்லிக்காய் வற்றலை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி சுக்கு தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பின்னர் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கலக்கி பருகினால் பித்தம் குணமாகும்.

1)எலுமிச்சை இலை – இரண்டு
2)மோர் – ஒரு கிளாஸ்

சுத்தமான பசு மோரில் இரண்டு எலுமிச்சை இலையை கைகளால் நசுக்கி போட்டு கலந்து பருகி வந்தால் பித்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.பாக்கெட் மோருக்கு பதில் பசு மோர் பயன்படுத்தினால் நல்லது.

1)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிண்ணம் ஒன்றில் பிழிந்து விடுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இனிப்பு சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகுங்கள்.இந்த எலுமிச்சை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உடலில் பித்தம் குறையும்.

1)உலர் திராட்சை – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஐந்து உலர் திராட்சை போட்டு கொதிக்க வைத்து பருகுங்கள்.இதை தினமும் காலை நேரத்தில் செய்தால் உடலில் பித்தம் அதிகரிப்பது கட்டுப்படும்.

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

இந்த பெருஞ்சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் பித்தம் குறையும்.

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

வெந்தயத்தை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பிறகு அரைத்த வெந்தயப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.