தேர்தல் நேரம் நெருங்குவதால் போலீசார் இதை செய்ய வேண்டாம்! காவல்துறைக்கு தமிழக அரசு கொடுத்துள்ள அறிவுரை!
வருகிற 2026ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அனுதினமும் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சர்ச்சையில் மாட்டிக்கொள்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக அதிமுக, தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன.
அனுதினமும் திமுக நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோர் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றனர். அதேநேரத்தில் காவல்துறையும் தங்கள் பங்குக்கு எதாவது ஒன்றை செய்து திமுக அரசை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது. குறிப்பாக சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை லைசென்ஸ் இருக்கா, ஹெல்மெட் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என்று சோதனை செய்து மக்களுக்கு பிரச்சனையை கிளப்புகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி போலீசார் மக்களை தொந்தரவு செய்தால் அது வெறும் காவல் துறையை மட்டும் பாதிக்காது. மாறாக தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியையும் வெகுவாக பாதிக்கும். எனவே தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு ஆளும்கட்சி கடிவாளம் விதித்துள்ளது.
மாறாக போக்குவரத்து மிதிமீறல்களில் ஈடுபடும் பொதுமக்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அமரவைத்து போக்குவரத்து விதிமீறல்களை நீங்கள் மீறுவதால் எந் மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதை பாடமாக எடுக்கும்படி அரசு காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இனி நிறைய இடங்களில் காவலர்கள் பொதுமக்களை ஹெல்மெட் போடவில்லை,வண்டிக்கு லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லை என்று தொல்லை படுத்தும் நிகழ்வு அதிகம் நடக்காது என்றும் சொல்லப்படுகிறது.
“காப்பாத்துங்க”.. விஜய்யிடம் ஓடும் இபிஎஸ் காங்கிரஸ்!!டீலில் தள்ளப்படும் பாஜக மற்றும் திமுக!!
TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சியில் மாற்றம் உண்டாகும் என்பது தற்போது உள்ள நிலையை வைத்து கணிக்க முடிகிறது. திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கூறி வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் உடன் இருந்த நல்லுறவை முடிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் சமரசம் உண்டாகவில்லை. எடப்பாடி எங்கள் தலைமையில் தான் கூட்டணி என கூறி வருகிறார்.
ஆனால் பாஜக இலை மீது தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி என்கின்றனர். இதிலேயே இரு கட்சிகளுக்கிடையே விரிசல் உண்டாகியுள்ளது. இதனால் எடப்பாடி பிரம்மாண்ட கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்குள் வரப்போவதாகவும் எடப்பாடி கூறுகிறார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கையில் முடிச்சு போடும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் தான் உள்ளது. திமுகவுடன் காங்கிரஸும் பாஜகவுடன் அதிமுகவும் வெளியேறி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்.
இவர்களுடன் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய உள்ளது. அதிலும் பாமக வானது, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு விஜய் தான் காரணமாம். அரசியலுக்குள் நுழைந்த உடன், எங்களுடன் கூட்டு வைப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் எனக் கூறியது விஜய் தான். இவரைத் தவிர மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என கூறவில்லை. இதை வைத்துப் பார்க்கையில் பாமக கூறுவது விஜய்யின் கூட்டணி தான்.
அதாவது வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக அதிமுக காங்கிரஸ் பாமக தேமுதிக என அனைவரும் விஜய்யுடன் கூட்டு வைக்க போகிறார்கள்.
இந்த சாரையாவது கைது செய்யுமா திமுக அரசு? வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரபலம்!
நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். போலீஸ், நீதிமன்றம் எதற்கும் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற ரீதியில் செயல்படுவார்கள். குறிப்பாக தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த மாதிரியான அதிகார துஸ்பிரயோக செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திமுக கட்சியின் மேடைப் பேச்சாளர். பிரச்சார நேரங்களிலும், திமுக மேடைகளிலும் இவர் திமுகவிற்கு ஆதரவாக மேடை பேச்சுக்களை பதிவு செய்வார். இவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர் கிட்னி திருட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணத்தேவை இருக்கும் ஏழை எளிய மக்களை அணுகி அவர்களிடம் பேரம் பேசி தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்து சென்று கிட்னி விற்கும் வேலையை இவர் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவருக்கு இன்னொரு பேர் இருக்கு, புரோக்கர் ஆனந்தன். இந்த கிட்னி திருட்டு சம்பவத்தில் இவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா, அல்லது இன்னும் யாரேனும் முக்கிய பிரபலங்களும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்று தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய நெட்ஒர்க் என்றும், பல ஆளும்கட்சி புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இந்த திமுக சார் ஆனந்தன் மீதாவது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்ல, எப்பவும் போல இதையும் கண்டு கொள்ளாமல் போய்விடுமா என்று எதிர்க்கட்சியினர் திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
வம்படியாக வாயை கொடுத்து எடப்பாடியிடம் வசமாக மாட்டிக்கொண்ட முதல்வர்!
2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பழனிசாமி அவர்கள் பேருந்தில் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பயணம் செய்யும் பேருந்து சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் டப்பா பஸ்ஸை போல இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிண்டல் செய்தார். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நான் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போன்ற ஒரு பேருந்தில் வருவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நான் ஒரு விவசாயி, என்னால் இந்த மாதிரி பேருந்தில் தான் வரமுடியும். நான் உங்களின் தந்தையை போன்ற ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் இல்லை. நான் பேருந்தில் வந்து மக்களை சந்திப்பதை எல்லோருக்கும் பிரபலப்படுத்தியத்திற்கு நன்றி. நாட்டு நடப்பை பற்றி பேச சொன்னால் நான் பஸ்ஸில் வருவதை பற்றி முதல்வர் பேசுகிறார்.
இந்த பஸ்ஸை பற்றிய கவலையை விடுங்கள், தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பேருந்துகளும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போலத்தான் ஓடுகின்றன. பாதி வழியில் டயர் கழண்டு செல்வதையும், அரசு பேருந்தின் மேற்க்கூரை பறந்து செல்வதையும், மழை நேரத்தில் பேருந்துக்குள் அமர்ந்து செல்லும் மக்கள் குடை பிடித்துக்கொண்டு செல்வதையும் மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்கிறாங்க என்று முதல்வர் ஸ்டாலினை வசைபாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ்ஸின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்! கோபத்தில் பள்ளி பேருந்தை கொளுத்திய உறவினர்கள்!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 7 ஜூலை 2025 அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை திட்டி நாளை நீ பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வா என்று மிரட்டியுள்ளார்.
பெற்றோரை அழைத்து வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தான். பின்னர் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர்.
17 ஜூலை 2025 அன்று அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி மீதும், அந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த தனியார் மருத்துவமனை இருந்த ரோட்டில்(நெல்லை பாபநாசம் சாலையில்) 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் மாணவரின் உறவினர்களை சமாதானப்படுத்தி நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் தனியார் பள்ளிக்கு சென்று நள்ளிரவில் இரண்டு பள்ளி பேருந்துகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இரண்டு பேருந்துகளும் தீயில் முழுமையாக கருகி சேதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்! சிலைக்கு பெயிண்ட் ஊற்றியவரை பிடிக்க தனிப்படை! பாலியல் குற்றவாளிக்கு..?
திருவள்ளூர் மாவட்டம் சாலையில் நடந்து சென்ற 4 வயது பிஞ்சு குழந்தையை ஒரு காமக்கொடூரன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அங்கிள் என்ன விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க, என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு அந்த பொண்ணு அழுதுருக்கு.
இதை எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம் கத்தியை காட்டி அந்த சிறுமியை மிரட்டி சத்தம் போடாதே என்று சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு அந்த பிஞ்சுக்குழந்தையை ஆளாக்கி இருக்கிறான். பிள்ளையை அடிச்சு வாயெல்லாம் ரத்தம் வரவச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த கொடூரன். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த கொடூரனை காவல்துறை கைது செய்யவில்லை.
ஆனால் சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய 77 வயதுமிக்க முதியவரை ஒரே நாளில் காவல் துறை கைது செய்துள்ளது. 77 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒரு மருத்துவர். அவர் பெயர் விஸ்வநாதன். காரில் சென்று கருணாநிதி சிலைக்கு கருப்பு பெயிண்ட் ஊற்றிவிட்டு சென்றிருக்கிறார். தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கார் என்னை வைத்து விஸ்வநாதனை ஒரே நாளில் மடக்கி பிடித்துள்ளனர்.
கருணாநிதி சிலைக்கு பெயிண்ட் ஊற்றிய முதியவரை தனிப்படை அமைத்து ஒரே நாளில் பிடிக்க தெரிந்த திமுக அரசுக்கு பிஞ்சு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனை பிடிக்க தான் நேரம் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் திமுக அரசை மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்:
மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர் , “நாங்கள் புதிய மாவட்டம் அறிவித்ததால் தான் இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. அதையும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கைப்பற்ற முயல்கிறது” என்றும் தெரிவித்தார்.
மன்னர் ஆட்சி – வாரிசு அரசியல் விமர்சனம்
“மக்கள் ஆதரவு குறைந்ததால், ஸ்டாலின் முதல்வர் பதவியை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறார்” என்றும், “திமுக அரசின் அடிப்படையே வாரிசு அரசியல், அதில் ஜனநாயகத்திற்கே இடமில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி உரையில் விமர்சித்தார்.
பிறக்கும் குழந்தைமேல் கூட கடன்
திமுக ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டதாகவும், இன்று பிறக்கும் குழந்தை மேல் கூட ரூ.1.5 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
தந்தையின் அடையாளம்
“நான் ஏர் ஒட்டிய கை. கோட் சூட் போட்டுக் காட்சி அளிக்கத் தெரியாது. தந்தையின் அடையாளத்தில் நான் வரவில்லை; உழைத்து வந்தவன்” என்று ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து, தான் வந்த வழி வேறுபட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
பொய்களை விற்று ஆட்சி பிடித்த அரசு
ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் 10% கூட செயல்படுத்தப்படவில்லை என பழனிசாமி சாடினார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியதையும் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் அதை மீண்டும் செயல்படுத்துவோம் என உறுதியளித்தார்.
தேர்தல் விழிப்புணர்வு
“முயற்சியால் வந்த அரசியல்வாதிகளுக்கு மதிப்பு இருக்காத திமுக அரசை மாற்ற, வரும் தேர்தலில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். திமுக வாரிசு ஆட்சிக்கு விடை கூற வேண்டிய தருணம் இது” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது.
அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு
கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தக் கோர விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா சார்ந்த ஒரு பிரபல இதழ், விமானி தான் இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அதில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை விமானியே தவறுதலாக ஆஃப் செய்ததாக, அதுதான் விமானம் உயரம் இழந்து விழ காரணமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
AAIB தரப்பு மறுப்பு மற்றும் எச்சரிக்கை
இது தொடர்பாக AAIB இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகாந்தர் கூறியதாவது:
“அமெரிக்க ஊடகங்களில் வெளிவரும் இத்தகைய முழுமையற்ற மற்றும் தவறான தகவல்கள், விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது. தற்போதைய அறிக்கைகள் அனைத்தும் மூல விசாரணை முடிவடையாத நிலையில் உள்ளன. ஆகையால், முழுவதுமான விசாரணை முடிவடையும் வரை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஊகங்களிலோ அல்லது விவாதங்களிலோ ஈடுபட வேண்டாம்.”
விமானிகள் சங்கம் கண்டனம்
அமெரிக்க ஊடகம் விமானியை குற்றம் சாட்டியது தொடர்பாக, இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. AAIB-ன் முதற்கட்ட அறிக்கையிலும் எந்த விமானியையும் நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்பதை சங்கம் வலியுறுத்தியது.
முதற்கட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
-
விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஒரே நேரத்தில் ‘கட் ஆஃப்’ நிலையிற்குச் சென்றதை AAIB குறிப்பிடுகிறது.
-
கருப்புப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடலில், ஒரு விமானி “நீ ஏன் கட் ஆஃப் செய்தாய்?” எனக் கேட்டதற்கு மற்றொருவர், “நான் செய்யவில்லை” என பதிலளித்துள்ளார்.
-
இதன் அடிப்படையில் விபத்துக்கான காரணங்கள் பற்றி இன்னும் தெளிவாகவும், தொழில்நுட்பமாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விமானி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல: விசாரணை முடிவை காத்திருக்க வேண்டுமென்று AAIB வலியுறுத்தல்
AAIB சுட்டிக்காட்டியது போல, விசாரணையின் இறுதிக் கட்ட அறிக்கையே விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தும். தற்போதைய சூழலில் விமானி மீது நேரடியாக குற்றம் சாட்டுவது குறைக்கூடியது அல்ல.
குறிப்பாக, அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி நேரடியாகக் காரணம் என கூறும் சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகள், இந்திய அதிகாரப்பூர்வ அமைப்புகளால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி கொடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய்க்கு சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை. யார் அவருக்கு எழுதி கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள், யார் சொல்லி இப்படி விஜய் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றும் தெரியவில்லை. அமித் ஷாவின் பின்னால் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய்யின் தாயார் ஒரு கிறிஸ்துவர், சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதற்காகத்தான் அவரை அமித் ஷா களத்தில் இறக்கி இருப்பதாகவும் தோன்றுகிறது என்று அய்யாவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார். தாயின் மதம் பற்றி பேசி திமுக ஒரு கரை வேட்டி கட்டிய சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? விஜய்யின் தாயார் சோபா ஒரு இந்து. அவர் ஒரு கிருஸ்துவராகவே இருந்தாலும் அதிலென்ன தவறு இருக்கிறது? மனிதரை மனிதராக பார்க்காமல் கிறிஸ்துவராக பார்ப்பது சிறுபான்மை விரோத சிந்தனை அல்லவா என்று சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார் TVK ராஜ்மோகன்.
