Home Blog Page 183

கருப்பு உதடு நல்ல சிவப்பாக மாற.. வெண்ணெய் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0

உங்கள் உதடுகளின் கருமை நிறம் போக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் வெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை நன்றாக கலந்து உதடுகளில் தடவி மசாஜ் செய்தால் கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதை நன்றாக கலந்து உதடுகளில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் உதட்டு கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)தக்காளி பழச்சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் தக்காளி பழச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதை உதடுகள் மீது தடவி நன்கு தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் உதட்டு கருமை நீங்கும்.

நம்புங்க.. வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் இனி ஒரு முடி கூட உதிராது!!

0

தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர நெல்லிக்காய் ஜூஸ்,வெந்தய பானம் போன்றவற்றை சாப்பிடலாம்.அடிக்கடி முடி கொட்டல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வைத்திய முறைகளை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு அல்லது மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜூஸை வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஆறு அல்லது ஏழு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இந்த ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

உடலில் இம்யனிட்டி பவர் அதிகரிக்க.. குடிக்க வேண்டிய எனர்ஜி ட்ரிங்க் இதோ!!

0

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸில் ஊற்றி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மஞ்சள் கலந்த பாலை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலைகள் – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் பத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு துளசி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மசாலா உதிராத.. தள்ளுவண்டி கடை மீன் ப்ரை ரெசிபி உங்களுக்காக!!

0

அசைவ பிரியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மீன்தான்.நீங்கள் எந்த மீன் வாங்கினாலும் இங்கு சொல்லப்பட்டுள்ள செய்முறைபடி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மீன் – ஒரு கிலோ
2)பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
3)வெங்காய பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
4)மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
6)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
7)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
8)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு
10)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த வெங்காயம் மற்றும் பூண்டு பேஸ்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி மிளகுத் தூளை அதில் போட்டு கலக்க வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் ஆகியற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு எலுமிச்சை சாறை அதில் பிழிந்து நன்றாக கலக்க வேண்டும்.இந்த பேஸ்டை மீன் துண்டுகள் மீது தடவி சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.

இந்த மீனை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.எண்ணெய் நன்றாக சூடானதும் மசாலாவில் ஊறவைத்த மீனை போட்டு பொரிக்க வேண்டும்.

மீன் நன்றாக பொரிந்து வந்த பிறகு அதனை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இது போன்று மீன் பொரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இப்படி மசாலா தயாரித்து மீன் பொரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

யூரிக் அமில அளவு கண்ட்ரோலாக குடிக்க வேண்டிய 3 மூலிகை பானங்கள்!!

0

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரும்.கை,காலில் வலி வீக்கம் ஏற்பட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள்.

தீர்வு 01:

வெள்ளரிக்காய் – ஒன்று
தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெள்ளரிக்காய் ஜூஸை அடிக்கடி குடித்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தீர்வு 02:

தர்பூசணி கீற்று – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு

முதலில் ஒரு கீற்று தர்பூசணி பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த தர்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடித்து பருகி வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

தீர்வு 03:

இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வையுங்கள்.

இந்த இஞ்சி நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிங்க.இப்படி வாரத்தில் மூன்று நாட்களுக்கு இஞ்சி பானம் செய்து குடித்தால் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

வாந்தி கட்டுப்பட.. இந்த கஷாயம் வச்சி குடிங்க!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

0

உங்களுக்கு அடிக்கடி வாந்தி,குமட்டல் பிரச்சனை இருந்தால் அதில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
2)பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த கொத்தமல்லி விதையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து பனங்கற்கண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வைத்து வடித்து பருகினால் வாந்தி நிற்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு தட்டிய இஞ்சை அதில் சேருங்கள்.

பிறகு இந்த இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வாந்தி நிற்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் எலுமிச்சை சாறு ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் வாந்தி,குமட்டல் கட்டுப்படும்.

இளநரைக்கு டை அடிக்கவே வேண்டாம்!! இந்த ஒரு சாப்பாட்டை சாப்பிட்டே கருப்பாக்கலாம்!!

0

கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மூலிகை இல்லையாகும்.இந்த கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் தலைமுடி கருமையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – நான்கு கொத்து
2)வெள்ளை உளுந்து பருப்பு – இரண்டு தேக்கரண்டி
3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)வர மிளகாய் – இரண்டு
5)உப்பு – தேவையான அளவு
6)புளி – ஒரு துண்டு
7)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
8)வெள்ளை சாதம் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்குங்கள்.அடுத்து மூன்று கறிவேப்பிலை கொத்துக்களை உருவி வாணலியில் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் வெள்ளை உளுந்து,கடலை பருப்பு,வர மிளகாய் ஆகியவற்றை அதில் போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு ஒரு துண்டு புளி போட்டு ஒருமுறை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் கடுகு போட்டு பொரிவிட வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த கறிவேப்பிலை கலவையை அதில் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிட வேண்டும்.

அதன் பிறகு சூடான சாதத்தை அதில் கொட்டி கிளற வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளலாம்.இந்த கறிவேப்பிலை சாதத்தை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

0

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க பிரண்டையை வைத்து சுவையான துவையல் செய்து சாப்பிடலாம்.இந்த துவையல் மூட்டு பலத்தை அதிகரிப்பதோடு,எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)எண்ணெய்
3)உளுந்து பருப்பு
4)பூண்டு பல்
5)வர மிளகாய்
6)வெங்காயம்
7)தக்காளி
8)தேங்காய்
9)கடுகு
10)எண்ணெய்
11)கறிவேப்பிலை
12)உப்பு
13)கொத்தமல்லி விதை
14)கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து இதை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.

அடுத்து இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் கொத்தமல்லி,தக்காளி,வெங்காயம்,பூண்டு,வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

பின்னர் இதை தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு எண்ணெய்,கடுகு போட்டு பொரிய விடுங்கள்.அதன் பிறகு அரைத்த விழுதை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த துவையலுக்கு தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.இதை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை பன்மடங்கு அதிகரிக்கும்.

அதேபோல் பிரண்டையில் சூப் பெய்து சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.பிரண்டை தோசை,பிரண்டை சட்னி செய்து சாப்பிட்டு வந்தாலும் மூட்டு எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

மத்திய அரசுத் துறையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.56,000 ஊதியம் பெற ரெடியா இருங்க!!

0

நம் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மத்திய அரசு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை

பதவி:

Seaman – 04
Greaser – 07
Traadesman – 03

காலிப்பணியிடங்கள்: இந்த பணிக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தேர்வு முறை:

**எழுத்து தேர்வு
**சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.cbic.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

10/06/2025

ஜூன் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் புயல்! முன்பக்க சேதமடைந்த நிலையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

0

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் (விமான எண் 6E2142), வானில் கடுமையான ஆலங்கட்டி புயலை சந்தித்து, விமானத்தின் முன்பகுதியில் (மூக்கு கோன்) மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மாலை நேரத்தில் பறந்து வந்த இந்த விமானம் ஸ்ரீநகருக்கு அருகில் வந்தபோது ஆலங்கட்டி புயல் ஏற்பட்டு, பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து விமானத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. விமானிகள் சீராக செயல்பட்டு, விமானத்தை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கியனர்.

விமானத்தில் உள்ள ஒருவர் எடுத்த வீடியோவில், ஆலங்கட்டிகள் விமானத்தின் மேற்பரப்பை கடுமையாக தாக்கியது காட்டப்படுகிறது. அதன் தாக்கம் காரணமாக விமானத்தின் உள்ளே பயணிகள் பயத்தில் கத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடியோ லிங்க்:


 

விமான தரையிறங்கியதும், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் விமானம் பலத்த சேதம் அடைந்ததால், “Aircraft on Ground” (AOG) என அறிவிக்கப்பட்டு, உடனடி பழுதுபார்வைக்காக தரையில் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“இண்டிகோ 6E2142 விமானம், டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணித்த போது, மோசமான வானிலை (ஆலங்கட்டி புயல்) ஏற்பட்டது. பைலட் ATC-க்கு அவசரநிலை அறிவித்தார். 227 பயணிகளும், விமான பணியாளர்களும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.”

இண்டிகோ நிறுவனமும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு, விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தது. அதில் கூறியுள்ளதாவது.
“டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குப் புறப்பட்ட 6E2142 இண்டிகோ விமானம் திடீரென ஆலங்கட்டி புயலை சந்தித்தது. விமான மற்றும் கேபின் பணியாளர்கள் நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானம் தரையிறங்கியதும், பயணிகளின் நலன் மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, எங்கள் அணியினர் அவர்களை முறையாக கவனித்தனர். தேவையான பரிசோதனை மற்றும் பராமரிப்புக்கு பின் விமானம் மீண்டும் சேவைக்கு விடப்படும்.”

மேலும், இந்த புயலால் உருவான வானிலை மாற்றம் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உருவான சூழ்நிலைச் சுழற்சி மற்றும் கிழக்கு-மேற்கு திசையில் பரவியுள்ள தாழ் அடுக்கிலான வாயுக்களால் இந்த வானிலை உருவானது.

இந்த வானிலை காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுவதோடு, பல விமானங்கள் திசை மாற்றப்பட்டன.