Home Blog Page 196

எச்சரிக்கை.. இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆயுளை அடியோடு குறைத்துவிடும்!!

நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் மட்டுமே.நாம் செய்யும் சிறு தவறுகள் நம் சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாழாக்கும் பழக்கங்கள்:

1)சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

2)உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவில்லை என்றால் நிச்சயம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

3)அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.பாக்கட்டில் அடைக்கப்பட்ட உப்பு நிறைந்த தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் உப்பு நிறைந்த உணவுகள் இரத்த அழுத்த பாதிப்பை அதிகரித்துவிடும்.

4)யூரிக் அமில அளவு உடலில் அதிகமானால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

5)அதிக வலி நிவாரணி மாத்திரை அல்லது மருந்துகளை சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

6)உடல் உழைப்பு இல்லாத சோம்பல் வாழ்க்கை முறையை பின்பற்றினால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாகும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:-

**வாழைத்தண்டு
**சீரகம்
**எலுமிச்சை சாறு
**தண்ணீர்

வாழைத்தண்டு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நறுக்கிய வாழைத்தண்டை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த வாழைத்தண்டு சூப் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த சூப்பை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த சூப்பை பருகி வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகுமா? உண்மை தகவல் இதோ!!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சிலவகை உணவுகள் கருச்சிதைவிற்கு வழிவகுத்துவிடும்.கர்ப்ப காலங்களில் பெண்கள் தங்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள்.

பப்பாளி பழம்,எள் உணவுகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.பப்பாளி,அன்னாசிப்பழம் உடல் சூட்டை அதிகரித்து கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.ஆனால் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

அதேபோல் வேக வைக்காத இறைச்சி உணவுகள்,சமைக்கப்படாத ஆட்டு மூளை,காய்ச்சாத பால் போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பாதரச மீன்களை கர்ப்பிணிகள் தவிர்த்துவிடுவது நல்லது.

மேலும் காபி,டீ போன்றவற்றை அதிகளவு பருகினால் கருச்சிதைவு பாதிப்பு ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு பழுத்த பப்பாளி பழம் சிறு துண்டளவு சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் பழுக்காத பப்பாளி,அன்னாசி போன்றவற்றை சாப்பிட்டால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:-

1)ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

2)மாதுளை,ஆப்பிள் போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும்.தேங்காய் பால்,பசும் பால் போன்றவற்றை செய்து பருகலாம்.

3)சூடான உணவுகள்,டீ காபி போன்ற ஆரோக்கியம் இல்லாத பானங்களை தவிர்க்க வேண்டும்.

4)கர்ப்பிணி பெண்கள் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

5)போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.இரும்புச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை சாப்பிட வேண்டும்.

வீட்டுக்கு AC வாங்கப்போறீங்களா? நீண்ட நாள் உழைக்க இதையெல்லாம் பார்த்துட்டு வாங்குங்க!!

0

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி காற்று உதவுகிறது.இன்றைய சூழலில் ஏசி இல்லாத வீட்டில் வாழ்வது கடினமான விஷயமாக உள்ளது.

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏசி உள்ளது.ஏசி வாங்குவது முக்கியம் அன்று.அதை முறையாக பழுதுபார்த்து பராமரித்தால் மட்டுமே அவை நீண்ட காலம் உழைக்கும்.ஆனால் இன்று அவரச காலத்திற்கு வெயிலில் இருந்து மீள உடனடியாக ஒரு ஏசி வாங்கி வீட்டில் மாட்டி விடுகின்றனர்.ஆனால் ஏசி வாங்கும் முன் நாம் சில விஷயங்களை அவசியம் பார்க்க வேண்டும்.

ஏசியில் ஸ்மார்ட் இணைப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.அதேபோல் ரிமோட் கண்ட்ரோல் போன்றவை உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.இதுபோன்ற அம்சங்கள் இருக்கிறதா என்பதை அவசியம் கவனிக்க வேண்டும்.

ஏசி வாங்கும் முன் அந்த பிராண்ட் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.அதேபோல் ஏசி வாங்கும் முன் அதை பழுது பார்க்கும் சேவைகள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

ஏசியில் வேகமான குளிர்ச்சி அம்சங்கள் இருக்கின்றதா என்பது குறித்து கவனியுங்கள்.அதேபோல் வீட்டில் எவ்விடத்தில் ஏசி மாற்ற வேண்டும் என்பது குறித்த சரியான தேர்வு இருக்க வேண்டும்.அதேபோல் உங்கள் வீட்டு அறையின் பரப்பளவிற்கு ஏற்ற ஏசி வாங்க வேண்டும்.

அதேபோல் உங்கள் வீட்டின் மாடி,தரைத்தளம் எவ்விடத்தில் ஏசி மாட்ட போகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஏசி வாங்கலாம்.அதேபோல் நீங்கள் வாங்கும் ஏசி உங்கள் பட்ஜெட்டிற்குள் இருக்கின்றதா என்பதை அறிய வேண்டும்.வாங்கும் ஏசி 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்டிருக்க வேண்டும்.இந்த ஏசி வாங்கினால் மினசார பயன்பாடு முழுமையாக குறையும்.

UPI செயலி அடிக்கடி முடங்கிவிடுகிறதா? கலக்கம் வேண்டாம்.. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

0

இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை பணத்தாள் அல்லாமல் ஆன்லைன் ட்ரான்ஸாக்சனாக உள்ளது.பெட்டி கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடங்களில் UPI செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போன் பே,கூகுள் பே,பேடிஎம் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளை இந்திய மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தற்பொழுது UPI செயலிகளில் சில நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத அளவிற்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் UPI செயலி நம்பி வெளியில் செல்பவர்களுக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது.இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க நீங்கள் சில விஷ்யங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

1)மொபைலில் ஒரு UPI செயலி மட்டும் வைத்திருக்காமல் இரண்டு அல்லது மூன்று வைத்திருந்தால் ஒன்று செய்லபடவில்லை என்றாலும் மற்றொன்றை வைத்து பரிவர்த்தனை செய்யலாம்.

2)அதேபோல் UPI செயலி போன்று நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பரிவர்த்தனை செய்யலாம்.

3)UPI செயலி வேலை செய்யாத போது க்ரெடிட் கார்டு,டெப்டிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம் .

4)அதேபோல் UPI செயலி செயல்படாத போது நெட் பேக்கிங் பயன்படுத்தலாம்.இந்த வசதியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து உரிய நேரத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யலாம்.

5)அதேபோல் இந்த ஆன்லைன் பரிவர்த்தனையை மட்டும் நம்பி இருக்காமல் எப்பொழுதும் கையில் சிறிய தொகை வைத்திருந்தால் அவரச காலத்தில் கைகொடுக்கும்.

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

0

நம் தந்தை வழியில் இறந்து போன முன்னோர்களை பித்துருக்கள் என்று அழைக்கின்றோம்.நம் பித்ருக்கள் கோபம் அடைந்தால் நமக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள்.

நம் முன்னோர்கள் அளிக்கும் சாபம் நாம் வணங்கும் தெய்வத்தின் அருளையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதன் காரணமாகவே பித்ருக்களின் சாபம் மற்றும் கோபத்தை வாங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஜாதகத்தில் வலிமையான தோஷமாக உள்ள பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்கள் செய்யலாம்.

பித்ரு தோஷங்கள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை செய்தால் முழு பலனை பெறலாம்.பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு அவை நீங்கும் வரை எந்த ஒரு பலனும் வாழ்வில் கிடைக்காது.இந்த பித்ரு தோஷம் நீங்கிய பிறகே வாழ்வில் ஒரு சந்தோஷமும் ஏற்படும்.

ஒருவர் அவரின் முன்னோர் சாபத்தை பெற்றால் நிச்சயம் முன்னோரின் புண்ணியத்தையும் பெற வேண்டியது முக்கியம்.அதேபோல் நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும் நமக்கு பித்ரு தோஷம் ஏற்படும்.

அதேபோல் பித்ரு தோஷம் இருந்தால் நிச்சயம் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் தடைபடும்.குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.இந்த பித்ரு தோஷம் தலைமுறை தாண்டியும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.இந்த பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு அரிசி,கோதுமை போன்வற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம்.அதேபோல் பித்ரு தோஷத்தில் இருந்து மீள பூஜை பரிகாரம் செய்யலாம்.

அதேபோல் பித்ரு தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட வேண்டும்.சிவபெருமானுக்கு கருப்பு எள்ளை நெய்வேத்தியமாக படைத்து வழிபட்டால் முன்னோரர்களின் பித்ரு சாபம் நீங்கும்.சிவபெருமானுக்கு வில்வ இலை,தேன்,பால் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைப்பது போல் கருப்பு எள்ளை நெய்வேத்தியம்
படைத்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

0

இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம்.

துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி செடியை வியாழக் கிழமை நாட்டல் நல்ல பலன்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

துளசி செடிக்கு அருகில் மண் விளக்கில் தீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டால் கோடி புண்ணியம் வந்து சேரும்.துளசி செடியை நடவு செய்வதற்கு முன் அதை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது பற்றி அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

துளசி செடியை வடகிழக்கு திசையை நோக்கியவாறு வைத்தல் சிறப்பு.சிலர் வீடுகளில் அதிகமான துளசி செடிகளை வைத்திருப்பார்கள்.ஆனால் உண்மையில் துளசி செடி வைப்பதில் எண்ணிக்கை அவசியமான ஒன்று.அதன்படி துளசி செடி வைக்கும் போது ஒன்று,மூன்று,ஐந்து என்ற ஒற்றை எண்ணிக்கையில் வளர்க்க வேண்டும்.

துளசி செடி வளர்ப்பவர்கள் அதற்கு அருகில் குப்பை,காலணிகள் போன்றவற்றை வைப்பதை தவிர்க்க வேண்டும்.காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு அதன் அருகில் மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும்.அதேபோல் துளசி செடியை மண்ணில் வளர்ப்பதைவிட கொள்கலனில் வளர்ப்பது இன்னும் நல்லது.

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

0

நமது கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதார ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆய்வகநுட்புநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த ஆய்வக நுட்புநர் பணிக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: பொது சுகாதார ஆய்வகம்

இடம்: கோயம்பத்தூர்

பதவி: ஆய்வக நுட்புநர்

காலிப்பணியிடங்கள்:

ஆய்வக நுட்புநர் பணிக்கு மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள்: ஆய்வக நுட்புநர் பணிக்கென்று மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் Diploma in Medical laboratory Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வயது வரம்பு 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தபால் முகவரி:

மாநகரநல அலுவலர்,பொது சுகாதாரப்பிரிவு,மாநகராட்சி பிரதான அலுவலகம்(டவுன்ஹால்),கோயம்புத்தூர் மாநகராட்சி,1109,பெரிய கடைவீதி,கோயம்புத்தூர் – 641001.இந்த முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி போட்ட ஸ்கெட்ச்.. சீனியர்கள் கொட்டத்தை அடக்க பலே திட்டம்!! OK சொன்ன அப்பா!!

0

ADMK DMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஒவ்வொரு கட்சியும் களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதிக்கு இரு மாவட்ட செயலாளர்கள் என்றவாறு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுகவும் அதனையே பின்பற்றலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு பின்னணியில் இருப்பது உதயநிதி தான். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களை தொகுதிக்குள் கொண்டு வந்து மக்களை இணக்கமாக வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார்.

ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக சீனியர்களை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு மண்டல தலைவர் பதவி ஒன்று அமைத்து அமர்த்தி விடலாம் அப்போது ஒரு தொகுதிக்கு இரண்டு மாவட்ட செயலாளர்கள் அமைப்பதை ஏற்றுக் கொள்வார்கள் என அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்கிறார்களாம். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலைமை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

திமுக தன் கட்சி நிர்வாகிகளை சமாளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தடுத்து திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் அதிமுக அந்த பக்கம் கூட திரும்பி பார்க்க முடியவில்லை. யாரை எதிர்த்தாலும் கேள்வி கேட்டாலும் வெளியே செல்வதாக கூறுவதால் எடப்பாடி சற்று மௌனம் காத்து வருகிறார். ஆனால் கட்சி ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் சட்டமன்றத் தேர்தலை கைப்பற்ற முடியாது என அவர் சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை!! பஹல்காம் தாக்குதல் தலைவர் சுட்டு பலி!!

0

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தலைவரான ஷாஹித் குட்டாய், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ ஆபரேஷன் கெல்லர் ‘ நடவடிக்கையின் போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

மே 13, 2025 அன்று, ஷோபியானின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, நடவடிக்கையை அழித்தது. இந்த நடவடிக்கையின் போது, ​​பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று இந்திய ராணுவம் X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 08, 2024 அன்று டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குட்டாய் ஈடுபட்டிருந்தார், இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளும் ஒரு ஓட்டுநர் காயமடைந்தனர். மே 18, 2024 அன்று ஷோபியனின் ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் கொலையில் அவருக்கு தொடர்பு இருந்தது . இதனால் பிப்ரவரி 03, 2025 அன்று குல்காமின் பெஹிபாக் என்ற இடத்தில் டிஏ பணியாளர்கள் கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஷுக்ரூ கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பயங்கரவாதிகள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கை மோதலாக மாறியது. மேற்கொண்டு தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கணக்கெடுப்பில் வந்த பகீர் தகவல்.. விஜய்க்கு கிடைத்த சப்போர்ட்!! ஆடிப்போன எடப்பாடி மற்றும் ஸ்டாலின்!!

0

TVK : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சி பிடிக்க போகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக உள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டு வைத்துக் கொண்டது. மேற்கொண்டு திமுக கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. இப்படி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை வாய்ந்த கட்சி ஆதரவு ஏதுமில்லை.

ஆனால் அதிமுக, பாஜகவுடன் திமுகவை வீழ்த்துவதற்கு மட்டுமே தான் கூட்டணி வைத்துள்ளோம், கொள்கை அடிப்படையில் வேறு தான் எனக் கூறுகின்றனர். இதனை காரணமாக வைத்து தனி அணி அமைத்து திமுக அதிருப்தி நிறைந்த கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளார். அதேபோல மும்பை தனியார் நிறுவனம் ஒன்று வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து கணக்கெடுத்துள்ளது.

இதில் பெரும்பான்மையாக விஜய்-க்கு தான் ஓட்டு விழுந்து உள்ளதாம். இந்த முடிவானது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுக அதிமுக என யாருக்கும் பெரும்பான்மையான ஆதரவு இந்த சர்வேவில் கிடைக்கவில்லையாம். அதுமட்டுமின்றி வன்னியர் சமூகத்தினர் பாமக மீதே ஆதரவு கொடுக்க விரும்பவில்லையாம். அவர்களின் ஆதரவு முழுவதும் விஜய்-யை நோக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இதனை முழுவதுமாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மறுக்கிறதாம். எப்படி சாதியவாரிய கட்சி தங்களின் அங்கீகாரத்தை மதிக்காமல் போகும் என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்?? இவ்வாறு இருக்கையில் தற்போது இந்த சர்வே வெளியானதையடுத்து எடப்பாடி தீவிர ஆலோசனை செய்துள்ளார். எப்படியாவது தனி அணி மூலம் விஜய்யை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளாராம். இதற்காக பாஜக ஆதரவு இல்லாத பொது முகங்கள் கொண்டு தவெக மூத்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.