Home Blog Page 203

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

உங்கள் மூளை செயல்பாட்டை அதிகரிக்க,ஞாபக திறனை மேம்படுத்த வல்லாரை கீரை உள்ளிட்ட சில பொருட்களை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.வல்லாரை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற செய்முறை விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)துளசி பொடி – ஒரு தேக்கரண்டி
3)சந்தனப் பொடி – அரை தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
6)குங்குமப் பூ – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.இவை அனைத்துக் நாட்டு மருந்து கடையில் பொடியாக கிடைக்கும்.அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு தாயரித்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி நன்றாக காய்ச்ச வேண்டும்.

இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.இந்த பாலை தினமும் பருகி வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

படிக்கும் பிள்ளைகளுக்கு இந்த பாலை தினமும் செய்து கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.

தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.

தண்ணீரை சரியான நேரத்தில் பருகினால் உடலுக்கு அதிக ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.அந்தவகையில் தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

1)செரிமானம்

காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.

2)உடல் எடை

தினமும் காலை நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

3)சருமம் பொலிவு

உங்கள் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீர் பருக வேண்டும்.காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் முகத்தில் பருக்கள்,கருப்பு புள்ளிகள் மறையும்.

4)உடல் கழிவு வெளியேறுதல்

காலை நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.உடலில் படியும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் பருகலாம்.

5)உடல் ஆற்றல்

தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.உடல் சுறுசுறுப்பாக இயங்க தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் பருக வேண்டும்.

6)இரத்த ஓட்டம்

உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க காலையில் எழுந்ததும் தண்ணீர் பருக வேண்டும்.

7)நீர்ச்சத்து குறைபாடு

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் காலையில் தண்ணீர் பருக வேண்டும்.இப்படி பருகும் நீரில் எலுமிச்சை சாறு,சீரகம்,வெந்தயம் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு இன்னும் அதிக பலன் கிடைக்கும்.தினமும் காலை நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

ரொட்டி மாவை பேக் செய்து தயாரிக்கப்படும் ரஸ்க் இந்தியாவில் பேமஸான டீ ஸ்னாக்ஸாக உள்ளது.இந்த ரஸ்க் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் இதில் குறைவான அளவே ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.இந்த ரஸ்கில் அதிகளவு கலோரி இருப்பதால் இதை அடிக்கடி உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.

நாம் சாப்பிடும் ரஸ்கில் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த ரஸ்க்கை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.அடிக்கடி ரஸ்க் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.

ரஸ்கில் குறைவான அளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதை சாப்பிடும் பொழுது செரிமானப் பிரச்சனை,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.தினமும் ரஸ்க் சாப்பிட்டால் இரத்தக் குழாயில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.

அளவிற்கு அதிகமாக ரஸ்க் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.அதேபோல் உடலில் அதிகளவு கெட்ட கழிவுகள் தேங்கிவிடும்.அளவிற்கு அதிகமாக ரஸ்க் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் தினமும் ரஸ்க் சாப்பிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்ந்துவிடும்.

ரஸ்க் ஒரு பதப்படுத்தப்படும் உணவு என்பதால் அதை உட்கொள்ளும் பொழுது நமது எந்த ஊட்டசத்துக்களும் கிடைக்காது.காலை நேரத்தில் ரஸ்க் போன்ற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட்டால் வயிறு உப்பசம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சில ரஸ்கில் ஏலக்காய்,பால் போன்றவை சேர்க்கப்படுகிறது.இதுபோன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் ரஸ்க் ஒரு ஆரோக்கியம் இல்லாத உணவுப் பொருளாகவே கருதப்படுகிறது.ஆகவே இனி அடிக்கடி ரஸ்க் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

இன்று எங்கு பார்த்தாலும் செல்போன் மையமாக இருந்து வருகிறது.காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செல்போன் கையுமாகவே பலரும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இந்த தலைமுறையினர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள்.ஆனால் மொபைல் இல்லாமல் மட்டும் ஒரு நிமிடம் இருக்க மாட்டார்கள்.அந்தளவிற்கு மொபைலுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

சிலர் தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.தலையணை அருகில் மொபைலை வைத்துவிட்டு உறங்குவதை 90% பேர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது மிகவும் தவறான பழக்கம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.தூங்கும் போது மொபைலை அருகில் வைத்து தூங்குவது தவறான செயல்.

மொபைலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.மொபைலில் இருந்து கதிர்வீச்சு நமது தூக்கத்தின் தரத்தை குறைத்துவிடும்.தூங்கும் பொழுது தொடர்ந்து செல்போனை அருகில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் நிச்சயம் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

மூளையில் கட்டிகள் உருவாக இந்த பழக்கம் காரணமாகிவிடும்.மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகளுக்கு காரணமாகிவிடும்.எனவே இனி தூங்குவதற்கு முன் மொபைல் போனை தூரமாக வைத்துவிடுவது நல்லது.

தூங்கச் செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பிளைட் மோடில் போட்டால் போனில் இருந்து குறைவான அளவு மின் காந்த கதிர்வீச்சு வெளிப்படும்.தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்தால் நமக்கு தலைவலி,தலைபாரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தலைக்கு பக்கத்தில் மொபைல் போன் வைத்தால் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தலையணைக்கு அருகில் மொபைல் போன் வைத்து படுத்தால் கருவில் வளரும் குழந்தையின் மூளை சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

அதேபோல் தூங்குவதற்கு முன்னர் உடையில் மொபைல் போன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் மொபைலில் இருக்கின்ற கதிர்வீச்சு தோலுக்கு எளிதில் ஊடுருவி புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அவசியம் அனுபவிக்க வேண்டும்.தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

நம் வாழ்வில் தூக்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்படி இருக்கையில் நாம் தூக்க நிலையில் இருக்கும் பொழுது பல்வேறு செயல்களை நம்மை அறியாமலேயே செய்கின்றோம்.குறட்டை விடுதல்,ஜொள்ளு விட்டு தூங்குதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்கின்றனர்.அதேபோல் சிலர் வாய் திறந்த நிலையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

வாயை திறந்த நிலையில் தூங்குபவர்கள் சரியாக மூச்சுவிட சிரமப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாசி வழியாக மூச்சு காற்றை வெளியேறுவதற்கு பதில் வாய் வழியாக வெளியேற்றுகின்றனர்.

நாம் வாய் திறந்து தூங்கினால் நமது பல் ஆரோக்கியம் மோசமாகிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாயை திறந்த நிலையில் வைத்திருந்தால் பாக்டீரியாக்கள்,கிருமிகள் எளிதில் நுழைந்து பல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

வாய் திறந்த நிலையில் தூங்குபவர்களுக்கு குறட்டை பாதிப்பு ஏற்படலாம்.வாய் திறந்த நிலையில் தூங்குபவர்களுக்கு இருமல்,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.தூங்கும் பொழுது வாய் திறந்த நிலையில் இருந்தால் எளிதில் பாக்டீரியாக்கள் வாய்க்குள் நுழைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

மல்லாக்க படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு ஒருபக்கம் சாய்ந்த நிலையில் படுத்து உறங்கும் பொழுது வாய் திறப்பது கட்டுப்படும்.எனவே இனி வாய் திறந்த நிலையில் தூங்குவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

0

நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் குரு மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது.

ரிஷப ராசியில் இருந்து குருபகவான் இரண்டாம் இடமான மைத்துனர் ராசிக்கு செல்ல உள்ளார்.ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.அதே சமயம் ரிஷப ராசியினர் தங்கள் வார்த்தையில் கவனத்தை செலுத்த வேண்டும்.அதேபோல் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

குரு பகவானின் ஜென்ம ராசி மிதுனம்.வருகின்ற மே 14 அன்று மிதுன ராசிக்கு குரு பகவான் வருகிறார்.இந்த ராசியினர் அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.கடகத்தில் குரு பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்திற்கு நகர்கிறார்.இந்த ராசியினர் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியம்.

சிம்ம ராசியில் 10 ஆம் இடத்தில் இருந்து குருபகவான் குரு பெயர்ச்சி காரணமாக 11 ஆம் இடத்திற்கு நகர்கிறார்.குருப்பெயர்ச்சி இந்த ராசியினர் நிதானமாக செயல்பட வேண்டியது முக்கியம்.கன்னி ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார்.இந்த ராசியினருக்கு நிதானம் இருந்தால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு குருபகவான் வருகிறார்.இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும்.விருச்சிக ராசியில் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்கு வருகிறார்.குருப் பெயர்ச்சி காரணமாக இந்த ராசியினருக்கு வீண் பயம் குறையும்.உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குருவானது 6 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக்காரர்களுக்கு நிதானம் தேவை.மகர ராசிக்கார்களுக்கு 5 ஆம் இடத்தில் இருந்து குருபகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக் காரர்களுக்கு உடல் நலத்தில் அக்கறை தேவைப்படுகிறது.

கும்ப ராசியில் 4 ஆம் இடத்தில் இருந்த குருபகவன் குருப்பெயர்ச்சி காரணமாக ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக்காரர்கள் வீண் ரோஷத்தை தவிர்க்க வேண்டும்.குருவானது மீன ராசியில் 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இவர்களுக்கு வார்த்தையிலும்,செயலினும் நிதானம் தேவைப்படுகிறது.

என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை சந்திக்காமல் இருக்க அமைச்சரவையிலிருந்து இவர்களை வெளியேற்றியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் பெரும்வாரியாக வெற்றி பெற முடிந்தாலும், கொங்கு மண்டலத்தில் இவர்களின் பாட்ஷா எடுபடவில்லை. 67 தொகுதிகளில் திமுக கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றியை கண்டது. அதிலும் கோயம்புத்தூர் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக தான் மெஜாரிட்டியாக இருந்தது. இம்முறை அதனை மாற்றியமைக்க அதிகார தன்மையுடன் உள்ள ஒருவரை இறக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை திட்டம் தீட்டியுள்ளது. அதற்கு சரியான ஆள் உதயநிதி ஸ்டாலின் தான் என்று ஸ்டாலினிடம் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கும் அது தான் சரி என எண்ணியுள்ளார். இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டல பொறுப்பாளராக உதயநிதியை அமர்த்தப்படலாம். கடந்த மக்களவைத் தேர்தல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என அனைத்திலும் களத்தில் இறங்கி திமுக கூட்டணியில் செந்தில் பாலாஜி நன்றாக வேலை புரிந்தார். இதனால் அதன் வெற்றியையும் பார்க்க முடிந்தது. ஆனால் இம்முறை இவர்களின் வழக்கால் மீண்டும் அமைச்சரவைக்குள் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் உதயநிதியை நிறுத்தலாம் என்று ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சி அதிருப்தியாளர்கள், தேர்தல் வியூகம் கணக்கெடுத்து நடைமுறைப்படுத்துவது வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது பல சவால்களை உதயநிதி சந்திக்க நேரிடும். இதை வைத்தே அவரது அரசியல் வழிநடத்தும்  முறையை கண்டு கொள்ளலாம்.

Operation Sindoor: 7 தீவீரவாதிகள் அடுத்தடுத்து பலி.. அதிரடி காட்டிய இந்திய இராணுவம்!!

0

Operation Sindoor: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சித்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு முதல் பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்து வான்வழி ட்ரோன்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. இதனை இந்திய ராணுவ படை லாவகமாக கையாளுகிறது.

அதேபோல இந்திய எல்லை சுற்றி ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி ஏதேனும் தீவிரவாதிகள் உள் நுழைகிறார்களா என்று கண்காணித்தும்  வருகின்றனர். இப்படி தீவிர கண்காணிப்பில் இருக்கும் போதே ஜம்மு காஷ்மீரில் சம்பா என்ற இடத்தில் 7 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த ஏழு பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவத்தினர் சுட்டுக் வீழ்த்தியுள்ளனர்.

மேற்கொண்டு இதைப்போல் யாரேனும் உள்ளார்களா என்று விசாரணை செய்தும்  வருகின்றனர். இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானையே முழுமையாக எச்சரித்துள்ளனர். வரும் நாட்களில் போர் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் சண்டிகர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் , அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுள்ளது.

ஆர்த்தியை கழட்டி விட இதுதான் காரணம்!! கல்யாண ஜோடி போல் வந்த ஜெயம்ரவி கெனிஷா!!

0

CINEMA: தமிழ் திரையுலகில் சமீப காலமாக தொடர் விவாகரத்து நடைபெற்று வருகிறது. முதலில் தனுஷ் ஐஸ்வர்யா என்றிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி வி சைந்தவி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட அனைவரும் விவாகரத்து பற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயம் ரவியும் உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியானது, விவாகரத்து பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து தர மாட்டேன் என்று கூறி வருகிறார்.

இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக ஜெயம் ரவியின் ஹீலர் தோழி கெனிஷா இருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஜெயம் ரவி இதனை முற்றிலும் தவிர்த்து வந்தார். அவர் எனது தோழி எனது ஹீலிங் காக மிகவும் உதவியவர் எனக் கூறினார். இதனையடுத்து ஜெயம் ரவி கெனிஷா உடைய காரில் சென்று கோவா காவல்துறையிடம் சிக்கியது என அடுத்தடுத்து பல பரபரப்பு செய்திகள் வெளியாகியது. அப்போதும் ஜெயம் ரவி கெனிஷா எனது தோழி என்றே குறிப்பிட்டு வந்தார்.

தற்சமயம் இவர்களின் விவாகரத்து பேச்சாளர்கள் ஓய்ந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் மேட்சிங் ஆடை அணிந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் ப்ரீத்தா கல்யாணத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேற்கொண்டு அங்கிருந்த புகைப்படம் எடுப்பவர்களுக்கும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்துள்ளனர். இந்த காரணத்தினால் தான் ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்று மீண்டும் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது.

பாகிஸ்தான் எதிர் தாக்குதல்.. சண்டிகர் மக்களுக்கு அலர்ட் செய்த இந்திய ராணுவம்!!

0

சண்டிகர்: சண்டிகரில் இன்று காலை விமானப்படை தளத்திலிருந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்தது .நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

வியாழக்கிழமை இரவு சண்டிகர் முழுவதும் அவசர மின் தடை அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது, விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இரவு 9.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. RWA மற்றும் சந்தை சங்கங்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு வீட்டிற்குள் இருப்பதன் மூலம் சைரன்களுக்கு விரைவாக பதிலளிக்குமாறு DC குடிமக்களை வலியுறுத்தியது.

“வெளியே அல்லது கூரைகளில் ஏற வேண்டாம்” என்று ஆலோசகர் கூறினார்.பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இணங்கினாலும், பல தெருவிளக்குகளும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளும் கணிசமான நேரம் எரிந்தன. மின்தடை எச்சரிக்கையை மீறி வாகனங்கள் தொடர்ந்து ஹெட்லைட்களை எரியவிட்டபடி நகர்ந்தன.வியாழக்கிழமை முன்னதாக, அவசரநிலைகளை எதிர்பார்த்து, நிர்வாகம் சிவில் பாதுகாப்பு அமைப்புகளை அதிகரித்தது. விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் எண்ணிக்கை 20 லிருந்து 50 ஆக அதிகரிக்கப்படும் என்று யூனியன் பிரதேச செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்பு முறிவுகள் ஏற்பட்டால் செயற்கைக்கோள் தொலைபேசிகள் பயன்படுத்தப்படும். சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார். நள்ளிரவுக்குப் பிறகு மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது, ஆனால் குடியிருப்பாளர்கள் தன்னார்வ மின் தடையை தொடர்ந்து கவனிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

மொஹாலியில் எல்லையில் இரவு 9.30 மணியளவில் இரண்டு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோமல் மிட்டல் தெரிவித்தார். குடியிருப்பாளர்கள் அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற விளக்குகளையும் அணைக்கவும், வெளியே நடமாட்டத்தை குறைக்கவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். “இது பொது பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று அவர் கூறினார்.

தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல் மின்தடை தொடங்கியதால் பஞ்ச்குலாவில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. சரியான சைரன் அமைப்பு இல்லாததால், எச்சரிக்கையை மீறி பல வீடுகள் மற்றும் தெருவிளக்குகள் எரிந்தன. சமூக ஊடகங்கள் மற்றும் சுற்றுப்புற செய்திகள் மூலம் தகவல் பரவியதால், அதிகமான குடியிருப்பாளர்கள் படிப்படியாக தங்கள் விளக்குகளை அணைத்தனர். இரவு முழுவதும் மின்தடை நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.