Home Blog Page 204

அரசியலுக்கு விஜய் செட் ஆக மாட்டாரா.. சிம்ரன் சொன்ன பரபர தகவல்!!

0

TVK Vijay: நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் ஹிட் அடித்தவை தான். தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்ததையடுத்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டன் சென்று விட்டு டெல்லி திரும்பிய சிம்ரனிடம் இது ரீதியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்,

விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் அவர் தாக்குப் பிடிப்பாரா என்று கேள்வி கேட்டுள்ளனர்?? இது ரீதியாக சிம்ரன் அளித்த கூறியதாவது, சிம்ரன் அரசியலுக்கு வந்ததற்கு ஆல் தி பெஸ்ட் மற்றும் குட் லக். மேற்கொண்டு அவர் தாக்குப் பிடிப்பாரா என்பதை சரியான நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தற்போது நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றியடைந்ததையடுத்து அதி ரீதியாகவும் பேசியுள்ளார்.

தற்போது டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றியடைந்துள்ளது இது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இதேபோல குட் பேட் அக்லி படமும் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது. தற்போது சினிமா பார்க்கும் ஆடியன்ஸ் ஓப்பன் மைண்டாக உள்ளார்கள். இந்த காலகட்டத்தில் நல்ல கதை அம்சம் இருக்கும் பட்சத்தில் பெண்களே கதாநாயகிகள் அமைத்து படம் தயாரிக்கலாம். ஆனால் இதற்கு மிகவும் முக்கியமான ஒன்று நல்ல கதை அம்சம் தான்.

மேற்கொண்டு இந்தியா பாகிஸ்தான் போர் குறித்தும் கூறினார், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றமான சூழலில் இருந்தாலும் மனிதநேயம் கட்டாயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

0

India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது.

அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவை நம் இந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு வழங்கிய நீதி என்று சமூக வலைத்தளம் எங்கும் கூறினர்.

பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது ரீதியாக பகிரங்க வீடியோவையும் வெளியிட்டது. அதில் நீங்கள் எங்கு இருந்தாலும் நாங்கள் உங்களை கண்டுபிடித்து அழிப்போம் என்ற பாணியில் தான் அது அமைந்தது. மேற்கொண்டு இந்தியாவின் சினிமா துறை மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையில் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வான் வழியிலேயே தடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது பஞ்சாப் வரை இதன் தாக்கம் நீட்டித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களை குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்டவற்றை டார்கெட் செய்துள்ளதாம். அதனால் இந்த பகுதிகளை சுற்றி பெரிய அளவில் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களெல்லாம் இனி கட்சிக்கு செட் ஆகாது.. விரட்டியடிக்கும் ஸ்டாலின்!! மீண்டும் அமைச்சராக வாய்ப்பே இல்லை!!

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தனது சார் அதிருப்தி நிலையை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் பெருகிவிட்டது குறிப்பாக அமைச்சர்கள் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டனர் என்ற பேச்சு அடிப்பட தொடங்கியது. இதன் விளைவாக ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளனர்.

தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் தற்பொழுது அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளனர். அதுமட்டுமின்றி திமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கும் துரைமுருகனையும் ஓரம் கட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்ப கட்டத்திலிருந்து துரைமுருகனுக்கும் ஸ்டாலின் மகனுக்கும் பொருந்தாமலே இருந்து வருகிறது.

குறிப்பாக வாரிசை முன்னிலைப்படுத்தி துணை முதலமைச்சராக்கியதில் துரைமுருகனுக்கு பெரிதாக விருப்பமில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இருவரும் மாறி மாறி இது ரீதியாக கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை வைத்தே இவரின் இலக்கா-வானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சரவையில் முக்கியமாக பார்க்கப்படும் கனிம வளத்தில் இவரின் சுரண்டல் அதிகமாக உள்ளதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இதனால் இந்த முக்கிய இலக்காவை ரகுபதிக்கு மாற்றியமைத்து, அவரின் சட்டத்துறை இலக்கா இவருக்கு கொடுத்துள்ளனர். தேர்தல் வரும் சமயத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் சற்று கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேற்கொண்டு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்றே பல்வேறு நடவடிக்கைகளை திமுக அவசர அவசரமாக செய்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் போர்.. 3 நாட்கள் தொடர் விடுப்பு!! திடீர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!

0

Operation Sindoor: காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா சிந்தூர் ஆப்ரேஷனை கையில் எடுத்தது. இந்த சிந்தூர் ஆப்ரேஷனில் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் எட்டு இடங்களை தரைமட்டமாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி போருக்கு முன்பே பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதிலும் தடை செய்துள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவிற்கு எதிராக போர் நடத்தப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இவ்வாறு பாகிஸ்தான் கூறியதையடுத்து இந்தியாவில் நாடு தழுவிய போர் ஒத்திகை பயிற்சியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தினங்களாக பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப்பை குறி வைத்துள்ளதால் மாநில அரசானது தொடர் மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

இது ரீதியாக பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பேசுகையில், தற்பொழுது போர்க்கால அடிப்படையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பணிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப்பை தவிர்த்து பாகிஸ்தான் எல்லையிலிருக்கும் அனைத்து இடங்களிலும் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுவரை நம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் அனுப்பும் ஏவுகணைகளை வான் வழியிலேயே அழித்து வருகின்றனர்.

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

தற்பொழுது பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை.எனவே குழந்தைகள் நன்றாக சாப்பிட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பத்து ஏலக்காய்
2)ஒரு துண்டு சுக்கு
3)அரை தேக்கரண்டி சீரகம்
4)கால் தேக்கரண்டி மிளகு
5)இரண்டு திப்பிலி
6)ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை
7)அரை தேக்கரண்டி தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஏலக்காய்,சீரகம்,கருப்பு மிளகு,திப்பிலி ஆகியவற்றை அதில் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு வறுத்த பொருட்களை ஆறவைக்க வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் சுக்கு மற்றும் வறுத்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து தயாரித்து வைத்துள்ள பொடி அரை தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு பருக கொடுக்க வேண்டும்.தினமும் இந்த பானம் குடிக்கும் குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்கும்.

தயாரித்து வைத்துள்ள பொடி ஐந்து கிராம் அளவிற்கு எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொடியை மிக்ஸ் செய்து கொடுக்கலாம்.

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

மகிழம் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏகப்பட்டது நிறைந்து காணப்படுகிறது.இந்த மகிழம் மரத்தின் விதை ஆண்களின் விந்து பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நீர்த்த விந்து,மலட்டு தன்மை,குறைவான விந்து,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை மகிழம் விதை வைத்து குணப்படுத்தலாம்.இது தவிர உடலில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு மகிழம் விதை தீர்வாக திகழ்கிறது.

காய்ச்சல்,தலைவலியில் இருந்து மீள மகிழம் விதையை சாப்பிடலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மகிழம் விதை சாப்பிடலாம்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாக மகிழம் விதை பொடியை சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணையில் மகிழம் விதை பொடியை கலந்து தலைக்கு தடவி குளித்தால் பேன்,பொடுகு தொல்லை ஒழியும்.மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த மகிழம் விதை பொடியை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிடலாம்.

நீர்த்த விந்து கெட்டியாக மலட்டு தன்மை நீங்க எளிய வீட்டு வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:-

1)மகிழம் விதை – இரண்டு
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு மகிழம் விதை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வந்த பின்னர் அரைத்த மகிழம் விதை பேஸ்டை அதில் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது மீண்டும் ஒரு நிமிடத்திற்கு பாலை கொதிக்க வைக்க வேண்டும்.இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

நமது மத்திய அரசுக்கு கீழ பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள்,துறைகள் இயங்கி கொண்டிருக்கின்றது.இதில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.அந்தவகையில் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை:

மத்திய அரசு வேலை

நிறுவனம்:

தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனம்(எம்.பி.ஆர்.ஐ)

பணி:

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 09
ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 03
டெக்னீசியன் 18

இந்த மூன்று பணிகளுக்கு மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வித் தகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதேபோல் பி,எஸ்சி,ஐ.டி.ஐ போன்ற படிப்பில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு
டிரேடு தேர்வு

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

ஜூன் 02 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

பணி குறித்த கூடுதல் விவரங்கள் அறிய nbri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி இந்நிறுவனத்தில் Junior Overman மற்றும் Mining Sirdar பணிக்கு மொத்தம் 171 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை:

மத்திய அரசு வேலை

நிறுவனம்:

NLC இந்தியா லிமிடெட்

பணி:

Junior Overman(Trainee) பணிக்கு மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Mining Sirdar(Selection Grade – 2) பணிக்கு மொத்தம் 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பணிகளுக்கு மொத்தம் 171 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வித் தகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.அதன்படி ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

மே 14 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

இதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!

0

உடல் உள்ளுறுப்புகளில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.உடலில் தேங்கும் கழிவுகள் சிறுநீரகம்(கிட்னி) வழியாக திரவ வடிவில் வெளியேற்றப்படுகிறது.

இந்த சிறுநீரகம் பழுதடைந்தால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கிவிடும்.இதனால் கல்லடைப்பு,யூரிக் அமில பாதிப்பு,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.

சிறுநீரக கழிவுகளை வெளயேற்ற உதவும் பழங்கள்:

1)ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் ஆரஞ்சு பழம் சிறுநீரக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.அதேபோல் எலுமிச்சம் பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.

2)கருப்பு திராட்சை

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கழிவுகள் கற்கள் படியாமல் இருக்கும்.கருப்பு திராட்சை பழத்தை விதையுடன் சாப்பிட்டால் முழு பலன் பெறலாம்.

3)தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.சிறுநீரகத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற தர்பூசணி சாறு பருகலாம்.

4)பெர்ரிஸ்

கிரான் பெர்ரிஸ் சிறுநீரக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.அதேபோல் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5)மாதுளை

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் அதிகரிக்கும்.அதேபோல் வெள்ளரி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.

30 நாளில் 10 கிலோ எடை குறைய.. காலை முதல் இரவு வரை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உடல் எடையை குறைக்க கடினமான டயட் முறையை பாலோ செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.நாம் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடும் உடல் எடையை குறைக்கலாம்.உடலில் தொப்பை,தொடை போன்ற பகுதிகளில் அதிகளவு கொழுப்பு படிகிறது.இதை குறைக்க நாம் எந்தமாதிரி உணவுமுறை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது.

உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பழக்கங்கள்:

காலை 6 மணி

வெதுவெதுப்பான தண்ணீர்
க்ரீன் டீ
லெமன் டீ

நீங்கள் காலையில் எழுந்ததும் வெது வெதுப்பான த்ண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.சர்க்கரை நிறைந்த டீ,காபிக்கு பதில் க்ரீன் டீ,லெமன் டீ போன்றவை செய்து பருகலாம்.

காலை 7 மணி

பால்
ஓட்ஸ்
வேகவைத்த முட்டை

புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயலுங்கள்.அதேபோல் பால்,ஓட்ஸ் கஞ்சி செய்து குடித்து உடல் எடையை குறைக்கலாம்.

காலை 8 மணிக்கு

வண்ண உணவு

கீரை,கூட்டு,பொரியல்,சாதம் போன்ற வண்ண உணவுகளை சாப்பிடலாம்.எண்ணெய் உணவுகள்,வறுத்த உணவுகளை தவிர்த்துவிட்டு எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

காலை 10 மணி

ஆரஞ்சு,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம்.பழச்சாறு செய்து பருகலாம்.காய்கறிகள்,முளைக்கட்டிய பயறுகளை கொண்டு சலாட் செய்து சாப்பிடலாம்.

மதிய நேரம்

சப்பாத்தி
ராகி களி
தயிர் சாதம்

மதிய நேரத்தில் கோதுமை உணவுகள்,ராகி உணவுகள்,தயிர் உணவுகளை சாப்பிடலாம்.உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.

மாலை 4 மணி

மூலிகை காபி அல்லது க்ரீன் டீ

வேலை முடிந்து வந்த பிறகு சர்க்கரை பானங்கள் பருகுவதை தவிர்த்துவிட்டு மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து குடிக்கலாம்.

இரவு 7 – 8 மணி

கோதுமை ரொட்டி,காய்கறி சாலட் போன்ற எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிடலாம்.குறைவான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு 9 மணி

இரவு உணவு உட்கொண்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆன பின்னர் உறங்க வேண்டும்.குறைந்தது 8 மணி நேரம் இரவு உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.