Home Blog Page 206

பாமக – வின் சித்திரை முழு நிலவு மாநாடு ரத்து.. நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

PMK: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்குரிய அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு முன்பு மாநாட்டில் நடந்த அசம்பாவிதத்தை வைத்து தவிர்த்து வந்தது. ஆனால் இந்த வருடம் 42 கோட்பாடுகளின் கீழ் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் முழு நிலவு மாநாடு நடத்தும் பஞ்சாயத்தான வட நெமிலி மக்களுக்கு பாதிப்பு உண்டாகக்கூடும் எனவே இந்த மாநாட்டை ரத்து செய்யும் படி நீதிமன்றத்தின் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவானது சிறப்பு நீதிபதி முன்னிலையில் அமர்வுக்கு வந்தது, மேற்கொண்டு இந்த வழக்கையொட்டி தமிழக அரசு சார்பாக பேசிய வழக்கறிஞர், கிட்டத்தட்ட பாமக நடத்த போகும் மாநாட்டிற்கு 42 நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. அதன் கீழ் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு இருக்கையில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி அனுமதி வழங்கிய பிறகு அதனை ரத்து செய்ய முடியாது எனக் கூறி உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் சாதியல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு பட்டியலின மக்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறையும் இதே போல் ஏதேனும் களேபரம் உண்டாகும் என வடநெமிலி பஞ்சாயத்து ரீதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மனு கொடுத்தது தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக- வுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுமா.. எடப்பாடி கொடுத்த பளீச் பதில்!!

ADMK DMDK: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அச்சமயத்தில் இவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடாவிட்டாலும் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.

இது ரீதியாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் எம்.பி சீட் தருவதாக கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். எடப்பாடி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி வந்தனர். ஆனால் இதனை அதிமுக மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. பிரேமலதா விடம் பேசி சமாதானம் செய்து வைத்திருந்தனர். நாளடைவில் தேமுதிக பொருளாளர் எம் கே சுத்தீஷும், ராஜ்ய  சபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியது உண்மை, நேரம் வரும்போது இது ரீதியாக பேசுவேன் என கூறினார்.

இப்படி தேமுதிக, அதிமுக மீது அதிருப்தி நிலையில் உள்ளது நேரடியாகவே தெரிவித்து வந்தது. தேமுதிக பொருளாளர் இவ்வாறு கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி இடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர், ஆனால் அவர் சரியான பதிலளிக்காமல் மலுப்பியுள்ளார். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கி தற்போது தான் பாஜகவுடன் இணைந்துள்ளோம்.

மேற்கொண்டு மாற்று கட்சியினரும் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இனி வரும் நாட்களில் தான் எம்பி சீட் தேமுதிகவிற்கு வழங்குவது குறித்து தெளிவாக ஊடகத்திற்கு தெரிவிப்போம் என கூறினார். தேமுதிக நேரடியாக எம் பி சீட் வழங்குவது குறித்து பேசி உள்ள போது தற்போது எடப்பாடி மறுக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிக்குள் அதிருப்தி நிலை உண்டாகியுள்ளது.

ஒரே போடாய் போட்ட எடப்பாடி.. டக்கென மாறிய அமைச்சர் பதவி!! ஸ்டாலின் பரபர உத்தரவு!!

ADMK DMK: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த ரகுபதி குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக ரகுபதி தான் எடப்பாடி க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்தியாவிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான்.

அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் பெண்களும் மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகளவில் காணப்படுகின்றனர். இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியாது. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் தட்டி எழுப்பி அவரிடம் இதைப் பற்றி கூறுங்கள் என்று விமர்சித்திருந்தார். ரகுபதி இப்படி விமர்சித்ததற்கு எடப்பாடி நேரடியாகவே தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அதில், நான் தூங்குவதாக ரகுபதி கூறுகிறார்.

ஆனால் நான் விழித்துக் கொண்டிருப்பதால் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதை பொறுக்க முடியாமல் தான் ரகுபதி இப்படி கூறுகிறார். நமது தமிழ்நாட்டின் முதல்வர் என தொடங்கி, காவல் அதிகாரிகள், அரசு உள்ளிட்ட அனைவரும் தூங்கி தான் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கும்பகர்ண தூக்கம் என்றால் அது ரகுபதி தான். தற்போது வரை திமுகவின் கொத்தடிமைகளில் ஒருவர் ரகுபதி உள்ளார். அவரை முதன்முதலாக அமைச்சராக்கி பார்த்ததே அதிமுகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் நான்.

அந்த நன்றியை மறந்து விட்டு தற்போது திமுகவிற்கு அடிபணிந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டது தொடர்ந்து கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் தான் அதிகரிக்கின்றன. இப்படி கொத்தடிமை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்ன ஒரு சில கணமே அவரது இலக்கா மாற்றமடைந்துவிட்டது என்ற செய்தி வெளியானது. அதாவது துரைமுருகன் பொறுப்பிலிருந்த கனிம வளத்துறை தற்போது ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரகுபதி பார்த்து வந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு சென்றுள்ளது. இதே போல செந்தில் பாலாஜியின் மின்சார துறையானது அமைச்சர் சிவசங்கரிடமும், மேலும் அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை முத்துசாமிக்கும் மாற்றியுள்ளனர். அதேபோல அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த துறையும், மனோ தங்கராஜுக்கு ராஜ கண்ணப்பிடமிருந்த பால் வளத்துறையும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்க அப்பாக்கெல்லாம் பாராட்டு விழா ஒரு கேடு.. மறுத்த உதயநிதி!! வெடிக்கும் உட்கட்சி பூசல்!!

DMK : திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் தனது வாரிசை முன்னிறுத்த ஒருபோதும் தயங்கவில்லை. இளைஞரணி தலைவரிலிருந்து தற்பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்ந்துள்ளார். இருப்பினும் உதயநிதி கூறினால் தான் கட்சியில் வேலை நடக்கும் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சர் தான் என்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதனை வெளிக்கொண்டு வராமல் கட்சிக்குள்ளையே முரண்பாடு காணப்பட்டது.

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரது பொதுச்செயலாளர் பதவியானது பறிக்க நேரிட்டது. தற்போது அந்த பதவிக்காக மூத்த நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு காத்துள்ளனர். ஆனால் உதயநிதி ஆதவாளர்கள் அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். அரசியலில் வந்து பல ஆண்டுகள் கழித்த பிறகுதான் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும்.

ஆனால் உதயநிதிக்கு உடனடியாக சிம்மாசனத்தில் அமர வாய்ப்பு கிடைத்து விட்டது மீண்டும் இந்த பதவி கொடுத்தால் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக உதயநிதி தனது அப்பாவிற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு கூட செல்லவில்லை. மேற்கொண்டு கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர். தற்போது இந்த உட்கட்சி கோஷ்டி மோதலால் அப்பா மகன் இருவருக்கும் புகைச்சல்  உண்டாகியுள்ளது.

இவர்களின் மோதல் போக்கு வெளிவட்டாரத்திற்கு வராமல் கட்சிக்குள்ளேயே நடந்து வருகிறது. தற்போது அரசியலுக்குள் வந்துவிட்டு மூத்த நிர்வாகிகளுக்கு கிடைக்க வேண்டிய இலக்காக்களை ஒதுக்காமல் தனக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கும் உதயநிதி மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்த்தியில் உள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னணியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 8) பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்தார்.

இந்த நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள் மற்றும் ஸ்கால்ப், ஹாமர் போன்ற நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், மியூசஃபராபாத் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம், பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளார். அதே போல மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில், 2025 ஏப்ரல் 22 அன்று இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 ஹிந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளது. இந்த தாக்குதலில், குறிப்பாக ஹிந்து ஆண்கள் குறிவைக்கப்பட்டதால், அவர்களின் மனைவிகள் விதவைகளாகியுள்ளனர். இதனை நினைவுகூர்ந்து, இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

 

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

0

உங்கள் பிறந்த நாளை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமையும் தனித்துவமானவையாக இருக்கின்றது.அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிறந்த கிழமை தனித்துவமானதாக இருக்கிறது.ஜோதிட சாஸ்திரப்படி பிறந்த கிழமை பொறுத்து அவர்களின் சிறப்பு அறியலாம்.பிறந்த நட்சத்திரம்,ராசி எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் நாம் பிறந்த கிழமையும் முக்கியம்.

பிறந்த கிழமையும் உங்கள் குணாதிசயமும் இதோ:

1)ஞாயிற்றுக்கிழமை

இந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.இவர்களிடம் அதிக நம்பிக்கை இருக்கும்.இவர்களிடம் அதிக நேர்மறை எண்ணங்கள் இருக்கும்.

2)திங்கட்கிழமை

இந்த தினத்தில் பிறந்தவர்களிடம் பொறுமை என்பது அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.திங்கட்கிழமை பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

3)செவ்வாய் கிழமை

இந்த கிழமையில் பிறந்தவர்கள் துரோகத்தை பெருங்குற்றமாக நினைப்பார்கள்.நியாயம் மற்றும் நீதிக்கு கட்டுப்பட்டவர்களாக செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

4)புதன்கிழமை

புத்திசாலிகள் புதன் கிழமையில்தான் பிறப்பார்கள்.இவர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவார்கள்.செய்லகளில் இறங்கும் முன் நன்றாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

5)வியாழக்கிழமை

இந்த கிழமையில் பிறந்தவர்கள் நன்னெறியுடன் வாழ்வார்கள்.இவர்கள் ஒழுக்கம் தவறாமல் வாழ்பவர்கள்.

6)வெள்ளிக்கிழமை

இந்நாளில் பிறந்தவர்கள் எந்த கஷ்டமும் இன்றி சகல சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள்.அனைத்து சுகங்களையும் இவர்கள் அனுபபிப்பார்கள்.

7)சனிக்கிழமை

நீங்கள் சனிக்கிழமை நாளில் பிறந்தவர் என்றால் உங்களிடம் பொறுமை என்பது குறைவாகவே இருக்கும்.

நீங்கள் பணத்தில் புரள கோடீஸ்வர யோகம் உண்டாக.. உங்கள் பீரோவை இந்த திசை பார்த்தவாறு வையுங்கள்!!

0

நம் வீட்டை எப்படி வாஸ்து பார்த்து காட்டுகின்றோம் அதேபோல் தான் வீட்டில் இருக்கின்ற பொருட்களும் உரிய திசை பார்த்தவாறு அமைந்திருக்க வேண்டும்.குறிப்பாக பணம் வைக்கும் பொருட்களை எப்பொழுதும் உரிய திசை பார்த்தவாறு மட்டுமே வைத்து புழங்க வேண்டும்.

வாஸ்து குறை உள்ள வீட்டில் பொருட்கள் வைத்தால் பணக் கஷ்டங்கள் அதிகமாக வரும்.எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.அதேபோல் வீட்டில் பணம் வைக்கும் பீரோ எந்த திசை பார்த்தவாறு இருக்க வேண்டும் எந்த திசை பார்த்தவாறு இருக்க கூடாது என்பதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் வீட்டில் வடக்கு திசை பார்த்தவாறு பீரோ,பணப் பெட்டி,நகைப்பெட்டி போன்றவை இருந்தால் செல்வ செழிப்புடன் வாழலாம்.வடக்கு திசை குபேரருக்கு உகந்த திசையாகும்.இந்த திசை பார்த்தவாறு பீரோ வைத்தால் பணக் கஷ்டம் வராமல் இருக்கும்.

வீண் விரையம் ஆகாமல் இருக்க வடக்கு திசை நோக்கியவாறு பீரோவை வைக்கலாம்.வடக்கு திசையில் பீரோவை வைக்க முடியாதவர்கள் இதற்கு அடுத்து கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கியவாறு பீரோ வைக்கலாம்.இந்த திசைகளில் பீரோ வைத்தால் பணக் கஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.

ஆனால் தப்பி தவறியும் தெற்கு திசை பார்த்தவாறு மட்டும் பீரோவை வைத்துவிடாதீர்கள்.தெற்கு திசை நோக்கி பணம் வைக்கும் பெட்டி,பீரோ போன்றவற்றை வைத்தால் பணக் கஷ்டம் ஏற்படும்.தெற்கு திசை நோக்கியவாறு செல்வங்களை வைத்தால் அவை வீண் விரையமாகிவிடும்.எனவே தெற்கு திசை நோக்கியவாறு பீரோ,பணப்பெட்டி போன்றவற்றை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இது தெரியுமா? நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம் கால் விரல்கள் சொல்லும்!!

0

நம் நாட்டில் ஜோதிடம் நம்பிக்கைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.கை ரேகை ஜோதிடம் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.அதேபோல் கால் விரல்களை வைத்து நாம் எப்படி பட்டவர்கள் என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

கால் கட்டை விரல் மற்றும் பக்கத்தில் இருக்கும் நான்கு விரல்களின் அளவை வைத்து நாம் யார் நம் எதிர்காலம் எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள முடியும்.

நம் கால் விரல் சொல்லும் எதிர்கால பலன்கள்:

கால் கட்டை விரல் மற்றும் அதற்கு பக்கத்தில் இருக்கும் இரு விரல்கள் ஒரே அளவில் இருந்தால் பயணங்களை அதிகமாக விரும்புவார்கள் என்று அர்த்தம்.இப்படி விரல் அமைப்பு கொண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் என்று அர்த்தம்.

கால் கட்டை விரல் மட்டும் பெரியதாகவும் அதற்கு அடுத்து இருக்கும் நான்கு விரல்களும் சிறியதாகவும் இருப்பவர்கள் எளிமையாக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.கலைதிறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.இயற்கை சார்ந்த சூழலை அதிகமாக விரும்புவார்கள்.

கால் கட்டை விரலுக்கு அருகில் இருக்கின்ற விரல் மட்டும் பெரியதாகவும் கட்டை விரல் மற்றும் மூன்றாவது விரல் ஒரே அளவிலும் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபபிப்பார்கள் என்று அர்த்தம்.தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.

காலில் இரண்டாவது விரல் பெரியதாகவும் கால் கட்டை விரல் மற்றும் மூன்று,நான்கு,ஐந்து ஆகிய நான்கு விரல் சிறியதாகவும் இருந்தால் அதாவது கால் கட்டை விரல் மற்றும் அருகில் இருக்கின்ற விரல் ஏறு முகத்திலும் மற்ற விரல்கள் இறங்கு முகத்திலும் இருந்தால் அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று அர்த்தம்.

தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

0

வாரத்தில் உள்ள ஏழு தினங்களில் எந்த கிழமையில் எந்த நிறத்தில் ஆடை அணியக் கூடாது என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

1)ஞாயிற்று கிழமை

வாரத்தில் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தக் கூடாது.ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தினால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும்.

2)திங்கட்கிழமை

பள்ளி,அலுவலகம் செல்லும் முதல் நாளான திங்கட்கிழமையில் சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.திங்கட்கிழமை சிவப்பு நிற ஆடை அணிவது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.

3)செவ்வாய் கிழமை

இந்த கிழமையில் பச்சை நிறத்தில் இருக்கும் ஆடையை தவிர்க்க வேண்டும்.இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் நாள் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்குமென்று அர்த்தம்.எனவே செவ்வாய் கிழமையில் பச்சை நிற ஆடை உடுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

4)புதன் கிழமை

சுப நாளான புதன் அன்று வெள்ளை நிறத்தில் இருக்கின்ற ஆடை அணிய வேண்டாம்.இந்த நாளில் மங்களகரமான நிறத்தில் இருக்கின்ற ஆடை அணியலாம்.

5)வியாழக் கிழமை

ஞாயிற்று கிழமை போல் வியாழக்கிழமையிலும் கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்த நாளில் கருப்பு நிற ஆடை அணிந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக தோன்றும்.வியாழக் கிழமை கருப்பு நிற ஆடை அணிந்தால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

6)வெள்ளிக் கிழமை

மங்களகரமான நாளாக பார்க்கப்படும் வெள்ளிக்கிழமையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்ற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்நாளில் மஞ்சள்,சிவப்பு போன்ற நிறத்தில் ஆடை அணியலாம்.

7)சனிக்கிழமை

வாரத்தின் கடைசி நாளாக உள்ள சனிக்கிழமையில் வெள்ளை நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக நடக்கும்.

பிரபல வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! 10 வது பாஸ் போதும்!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி.இந்த வங்கியின் கிளை அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.தற்பொழுது இந்த வங்கியில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: BANK OF BARODA (பேங்க் ஆஃப் பரோடா)

பணி: அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின்படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.bankofbaroda.in/career/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

தேர்வு எழுதவுள்ள மையங்கள்:

சென்னை
சேலம்
திருச்சி
வேலூர்
திருநெல்வேலி
மதுரை

தேர்வு கட்டணம்:

SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.மற்றவர்களுக்கு ரூ.600 விண்ணப்பக்கட்டணமாகும்.