Home Blog Page 219

ஸ்ரீநகர் படகு விபத்து: பலத்த காற்றால் கவிழ்ந்த படகு! வைரலாகும் வீடியோ

0

ஸ்ரீநகர் பகுதியில் படகு விபத்து: பலத்த காற்றால் டல் ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து அபிக்கு  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2025 மே 2, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் உள்ள புகழ்பெற்ற டல் ஏரியில், பலத்த காற்றினால் ஒரு சுற்றுலா படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் நீரில் விழுந்தனர். சிலர் நீரில் தத்தளிக்க, சிலர் பாதுகாப்பாக நீந்தி கரை சேர முயன்றனர். சம்பவ இடத்தில் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு விரைந்து, மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாருடன் சேர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் படகில் இருந்த பயணிகள் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை .

இந்த சம்பவத்தின் 17 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், கவிழ்ந்த படகும், நீரில் தத்தளிக்கும் பயணிகளும், கரையில் நின்று உதவிக்குரல் எழுப்பும் பார்வையாளர்களும் காணப்படுகின்றனர்.

வீடியோ லிங்க்:

https://x.com/maroof2221/status/1918304063328010445

இது போன்ற சம்பவங்கள் டல் ஏரியில் புதிதல்ல. 2025 ஏப்ரலில், ராஜஸ்தானில் இருந்து வந்த சுற்றுலா குடும்பம் ஒன்றின் படகு பலத்த காற்றால் கவிழ்ந்தது. அதில், நான்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் படகு ஓட்டுநர் மீட்கப்பட்டனர் . மேலும், 2023 நவம்பரில், ஒரு ஹவுஸ் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் .

டல் ஏரி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா இடமாகும். இந்த பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பலர் சுற்றுலாவிற்கு வருகின்றனர். சுற்றுலா, இந்த ஒன்றிய பிரதேசத்தின் முக்கிய வருமான மூலமாகும்.

இந்த சம்பவம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் படகு ஓட்டுநர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்!.. அடுத்த ஹிட்டு பார்சல்!..

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருந்தார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஒருபக்கம், அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்கிற எதிர்பார்ப்பும் அஜித் ரசிகர்களிடம் இருக்கிறது. சிறுத்தை இயக்கத்தில் 4 படங்களில் நடித்தது போல, ஹெச்.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தது போல சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அஜித் இன்னொரு படம் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ஒருபக்கம் அஜித்தை வைத்து நடிகர் தனுஷும் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவது உறுதியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாம்.

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 முதல் நாள் வசூல் எவ்வளவு?!. வாங்க பார்ப்போம்!…

உழைப்பாளர் மே 1ம் தேதியை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் நேற்று வெளியானது. முதலில் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.

retro
retro

இந்நிலையில்தான் இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 17.5 கோடியும், மற்ற மாநிலங்களில் 2.5 கோடியும் வசூல் என சொல்கிறார்கள். அடுத்து புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கியுள்ள டூரிஸ்ட் படமும் நேற்று வெளியானது.

இலங்கையிலிருந்து முறைகேடாக படகில் தப்பில் சென்னை வந்தும் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையை இப்படம் பேசுகிறது. சிரிப்பும், எமோஷனலும் கலந்த படமாக டூரிஸ்ட் ஃபேலிமிலி உருவாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படம் நேற்று ஒரு நாளில் 2 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தெலுங்கு நடிகர் நானி நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் வெளியாகியுள்ள ஹிட் 3 படம் 40 கோடி வரை செய்து வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.

இயக்குனர் மனதில் நினைத்ததை பாட்டில் எழுதிய வாலி!. அஜித் படத்தில் நடந்த சம்பவம்

0

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி. லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் அஜித்தை முதன் முதலாக எல்லோரும் ‘தல’ என அழைக்கும்படி காட்சிகள் வந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், காதல் வெப்சைட் ஒன்று போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார்.

அதேநேரம் அவர் இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் முருகதாஸுக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. அதன்பின் ஹிந்திக்கு சென்று சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கிற படமும் இயக்கினார். அந்த படமும் ஊத்திகொண்டது. ஒருபக்கம் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தையும் எடுத்து வருகிறார்.

dheena

இந்நிலையில், ஒருமுறை தீனா படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் வாலி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ முருகதாஸ் அப்போது அறிமுக இயக்குனார். என்னை பாட்டு எழுத அழைத்தார்கள் போனேன். கதைப்படி கதாநாயகன் ஒரு ரவுடி. அவன் பாடுவது போல ஒரு பாடல் என சொன்னார் முருகதாஸ். டியூனை சொல்ல ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில’ என எழுதினேன்.

எதுவுமே சொல்லாமல் முருகதாஸ் என்னையே பார்த்துகொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது ‘இதான்யா புது டைரக்டருக்கு எல்லாம் நான் பாட்டு எழுது மாட்டேன்னு சொல்றது. பிடிக்கலனா சொல்லு,, வேற எழுதி தரேன். இப்படி எதுவுமே சொல்லாம அமைதியா இருந்தா எப்படி?’ என கேட்க, அவரோ ‘இல்ல சார். இந்த படத்தில் அஜித் வாயில் வத்திகுச்சி வச்சிக்கிட்டு வர மாதிரி காட்சிகள் இருக்கு. அதை நான் உங்களிடம் சொல்லாமலேயே நீங்க அதை பாடல் வரியில கொண்டு வந்துட்டீங்க’ என ஆச்சர்யமாக சொன்னார். இப்படி சில சமயம் நடக்கும்’ என வாலி சொல்லியிருந்தார்.

ரிட்டயர்ட் ஆவது எப்போது?!.. ஏகே சொன்ன பதிலை பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் அஜித்குமார் அஜித்குமார். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. சமீபத்தில் பத்மபூஷன் விருதை ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித். 20 வருடங்களுக்கு முன்பு நிறைய பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார் அஜித். அதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் நிறைய அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அஜித்குமார் ‘எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துகொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு தத்துவம் பேச வில்லை’ என பேசியிருக்கிறார்.

பைக் ரேஸுக்கு போறேன்னு சொன்னதும் என் அப்பா இதைத்தான் சொன்னார்!.. அஜித் சொல்லும் பிளாஷ்பேக்!…

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் ஏகே எனும் அஜித்குமார். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. சமீபத்தில் பத்மபூஷன் விருதை ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித். 20 வருடங்களுக்கு முன்பு நிறைய பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார் அஜித். அதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் நிறைய அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

ajith bike

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அஜித்குமார் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என என் அப்பா சொன்னார். நான் உனக்கு நிதியுதவி செய்ய முடியாது. ஆனால், நான் உன்னை தடுக்க மாட்டேன். நீ மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேல எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் என சொன்னார்.

விதியை பாருங்கள். நான் ரேஸ் டிராக்கில் இருந்தபோது ஒரு மாடல் ஒருங்கிணைப்பாளர் என்னை அணுகி ஒரு விசிடிங் கார்ட் ஒன்றை கொடுத்து ‘மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என சொன்னார். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தேன். இது எனக்கு புரிவதற்குள் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பிரிண்ட் விளம்பரங்கள், டிவி விளம்பரங்கள், மாடலிங் மூலமாக சம்பாதித்த பணம் அனைத்தையும் என் ரேஸிங்குக்காக செலவு செய்தேன்’ என பேசியிருக்கிறார்.

என்னை சீரியஸான நடிகனாக காட்டியது அந்த படம்தான்!.. அஜித் ஓப்பன் பேட்டி!…

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. சமீபத்தில் பத்மபூஷன் விருதை ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.

vali

அதன்பின் ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் ‘வாலி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான படம். என்னை அந்த படத்தில்தான் சீரியஸ் நடிகராக மக்கள் பார்க்க துவங்கினார்கள் என நம்புகிறேன். அதற்கு முன்பும் எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. ஆனால், எனக்கு பல கதவுகளை வாலி திறந்தது’ என பேசியிருக்கிறார். அஜித்தின் படங்கள் சரியாக போகாத நிலையில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து உருவான இப்படம் 1999ம் வருடம் வெளியானது. இந்த படத்தில்தான் ஜோதிகா அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் வகுப்பு 8ம் வகுப்புகளில் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது!.. அன்பில் மகேஷ் எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி என்பது நடைமுறையில் இருக்கிறது. 8ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் இருக்கும் மாணவர்களை மதிப்பைண்ணை காரணம் காட்டி ஃபெயில் ஆக்கினார் அது அவர்களின் மனநிலையை பாதிப்போடு, கற்றல் திறனையும் பாதிக்கும் என்பதாலேயே அரசு இதை கடைபிடித்து வருகிறார்.

ஆனால், பாஜாக அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் இதை மாற்ற நினைக்கிறது. அந்த கொள்கை படி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு ஆகியவற்றில் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவர்களை தோல்வி அடைந்தவர்களாக காட்டி ஃபெயில் ஆக்கிவிடுவார்கள். அதோடு, வேறு சில விஷயங்களையும் தேசிய கல்விக் கொள்கையில் திணிக்க பாஜக அரசு திட்டமிடுகிறது.

இதற்கு ஏற்கனவே கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா கூட இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு இமெயில் அனுப்புங்கள் என கோரிக்கை வைத்தார். தற்போது எப்படியாவது இந்த தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரவேண்டும் என பாஜக அரசு நினைக்கிறது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் ‘5,8ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் ஆக்குக்ம் சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இப்படி பெயில் ஆக்கினால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு பெற்றோர்கள் கையெழுத்து போடாமல் கேள்வி கேட்க வேண்டும்’ என பேசியிருக்கிறார்.

வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில், இரண்டு நாடுகளும் எல்லைகளில் சண்டை போட துவங்கிவிட்டார்கள். ஒருபக்கம், பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பஹல்கம் தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ஊடகங்களிடம் பேசியிருக்கிறார். வினய் நர்வாலின் பிறந்தநாளை ஒட்டி நேற்று நடத்தப்பட்ட இரத்த தான முகாமில் கலந்துகொண்ட அவர் ‘பகல்காம் தாக்குதலுக்கு பின் காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை நாங்கள் விரும்புகிறோம். கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டுக்கு சேவை ஆற்றுவேன்’ என பேசியிருக்கிறார். திருமணமான ஒரு வாரத்தில் பகல்காமுக்கு தேனிலவு வந்து ஹிமான்ஷி தனது கணவரை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இந்தியாவில் தீவிரவாதிகள் நுழைவதை தவிர்ப்பதற்காகவும் போலி பாஸ்போர்ட் களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையக் கூடியவர்களினை முழுவதுமாக தடுக்கவும் மத்திய அரசு முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.

 

அதன்படி, தற்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்போர்ட் முழுவதுமாக மாற்றி இ பாஸ்போர்ட் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் இவற்றை முழுக்க முழுக்க சீப் அடிப்படையிலான இ பாஸ்போர்ட்டுகளாக உருவாக்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த இ பாஸ்போர்ட்டுகள் இந்த மாதம் முதலே புழக்கத்திற்கு வந்து விடும் என்றும் இதன் மூலம் போலி பாஸ்போர்ட்டுகளை முழுவதுமாக தடுக்க முடியும் என்றும் பயண பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் குடியுரிமை செயல்முறைகளை நவீனமாக இந்த பாஸ்போர்ட் ஆனது உதவும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிப் பொருத்தப்பட்டு இருப்பதால் இந்த இ பாஸ்போர்ட்டை போலியாக உருவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

 

இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவிற்குள் ஒருவர் கூட போலி பாஸ்போர்ட் மூலமாக நுழைய முடியாத என்றும் இதனால் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் சட்ட விரோதமாக நுழைப்பவர்களை முழுவதுமாக தடுத்துவிட முடியும் என்று மோடி அரசு தெரிவித்ததோடு இது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.