Home Blog Page 224

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

உங்கள் கழுத்து பகுதியில் இருக்கின்ற கருமை நீங்க கருவளையம் மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.தேன் மெழுகு உருகி வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவிட வேண்டும்.பின்னர் இதை ஒரு டப்பாவில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை கழுத்து கருமை,கருவளையம்,அக்குள் கருமை மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மிக்ஸ் செய்து கழுத்து கருமை,அக்குள்,கண் கருவளையம் உள்ள இடத்தில் பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
2)கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் கடலை மாவு ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு தேக்கரண்டி அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை கழுத்து கருமை,கருவளையம் போன்றவை மீது பூசி ஸ்க்ரப் செய்தால் கருமை தானாக நீங்கிவிடும்.

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

0

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை மீறுவதாக கண்டனம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கைகள், ஏப்ரல் 22-இல் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்றுள்ளன. அத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், இதில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலா பயணிகள்.

இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஏப்ரல் 26-27 மற்றும் 27-28 இரவுகளில் குப்வாரா, பூஞ்ச், துட்மாரி களி மற்றும் ராம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் பதிலடி அளித்தது.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அம்சங்களை கவனித்து வருகிறது. இந்திய ராணுவத்திற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் எதிர்வினையாக இந்தியா தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

உலக நாடுகள் இருவரும் அமைதியுடன் இருப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுத்து வருகிறது.

 

புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தவெகவினர்!. வீடியோ போட்டு திட்டும் புளூசட்ட மாறன்!…

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் கோவை வந்தார். எனவே, எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்களும் தவெக கட்சியினரும் விமான நிலையத்தில் திரண்டனர். பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது. அதோடு, விமான நிலையமே களேபரமானது. விஜய் வந்த பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோது விஜய் ரசிகர்கள் பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர்.

bussy

ஒருஇடத்தில் நின்று விஜய் வேனில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்துக்கொண்டிருந்த போது எதுவழியாகவோ ஏறி சில ஆர்வக்கோளாறு விஜய் ரசிகர்கள் வேனின் மீது குதித்தனர். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சியடைந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என அன்பு கட்டளையும் இட்டிருக்கிறார்.

இந்நிலையில், தவெகவினர் சிலர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழும் வீடியோவை பகிர்ந்து ‘இவர்கள் தவெக கொத்தடிமைகள். நடுரோட்ல புஸ்ஸி ஆனந்த் காலில் வரிசையா விழறானுங்க. அவரும் அதை ரசிக்கறாரு. இந்த லட்சணத்துல மத்தவங்களை கொத்தடிமைன்னு கமண்ட் பண்ணி நொட்டிட்டு இருக்கானுங்க’ என கோபப்பட்டிருக்கிறார்.

அவங்களுக்கு ஆதரவா பேசினா பாகிஸ்தானுக்கே போயிடுங்க!.. கொந்தளித்த பவன் கல்யாண்!…

0

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில், இரண்டு நாடுகளும் எல்லைகளில் சண்டை போட துவங்கிவிட்டார்கள். ஒருபக்கம், பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

ஒருபக்கம், இந்தியாவில் வசிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். இதில் கோபமடைந்துள்ள நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ‘பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்பவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கே போய்விடுங்கள். இந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இங்கு கூட நாங்கள் வெளியே செல்லக்கூடாது என்றால் எப்படி?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்ப இருக்க இளைஞர்கள் அறிவே இல்லாம இத செய்றாங்க!. கோபப்பட்ட சூப்பர்ஸ்டார்..

0

கோலிவுட்டில் முக்கியமான நடிகர் மட்டுமில்லை. சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு பல வருடங்களாகவே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் 40 வருடங்களுக்கு முன்பே ராகவேந்திரா எனும் படத்தில் நடித்தார்.

அப்போதே அவர் சினிமாவிலிருந்து விலகி முழுக்க முழுக்க ஆன்மிகத்திற்கு சென்றுவிடவும் முடிவு செய்தார். ஆனால், அவரின் முடிவை மாற்றியது இயக்குனர் பாலச்சந்தர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் ரஜினி இந்நேரம் இமயமலையில் ஒரு சாமியாராகி இருப்பார். ரஜினி எந்த மேடைகளில் பேசினாலும் ஆன்மிக தத்துவம் கொண்ட ஒரு குட்டிக் கதையை சொல்வார். அதுதான் அவர் டிரேட் மார்க். அதில் மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை இருக்கும்.

அரசியல், ஆன்மிகம் இரண்டிலும் ஆர்வம் கொண்ட ரஜினி தமிழகத்தில் ஆன்மிக அரசியலை கொண்டு வரவும் திட்டமிட்டார். ஆனால், அவர் நினைத்தது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில்தான் ஒரு விழாவில் பேசியுள்ள ரஜினி இப்போதுள்ள இளைஞர்களுக்கு கலாச்சார வகுப்பு எடுத்திருக்கிறார்.

இப்போதுள்ள செல்போன் யுகத்தில் நமது இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். நமது நாட்டின் கலாச்சார பெருமை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என சொல்லி இந்தியா வந்து நமது கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு வாழ ஆசைப்படுகிறர்கள்.. ஆனால், நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதன் பெருமை பற்றி ஒன்றும் தெரியவில்லை. நமது நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்’ என அறிவுரை செய்திருக்கிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்!.. ஏகே-வுக்கு என்னாச்சி?…

0

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது நேற்று ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.

விருது வாங்கிய பின் விமானம் மூலம் அவர் சென்னை வந்தபோது அவரை வரவேற்க அங்கே கூட்டம் கூடியது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட அஜித் மீதும் சிலர் மோதினார்கள். சிலர் அவருக்கு சால்வை போட வந்தார்கள். அவர்களையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து அஜித் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்டது. அதற்காக அஜித்துக்கு பிசியோதரபி சிகிச்சை செய்யப்படுவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

0

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார்.

அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி கோபம் காட்டி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் அதிமுக, திமுக இரண்டையுமே கடுமையாக விமர்சித்து வந்தார். உடல்நிலை பாதிப்பால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயகாந்த் 2023ம் வருடம் டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

அவர் மறைந்து ஒன்றரை வருடம் கழித்து தேமுதிக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பே தேமுதிக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பிரேமலதாவின் சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான சதீஷ் தேமுதிக பொருளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைமையின் இந்த அறிவிப்பு தேமுதிகவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

அதோடு, சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வக்பு சட்டத்தால் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

டிவிட்டரில் வைத்த கோரிக்கை!. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!…

0

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் தூய தமிழில் பெயர் வைப்பது இல்லை. தூய தமிழ் பெயர்களை பெற்றோர்களே கீழாக நினைக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை விட்டுவிட்டு வட இந்திய பெயர்களை இணையத்தில் தேடிப்பிடித்து வாயில் நுழைய முடியாத படி ஒரு பெயரை வைக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாய் மொழி தமிழ் மீது யாருக்கும் பற்றும், மரியாதையும் இல்லாமல் போய்விட்டதே இதற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மயிலை வேலு இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட போது ‘உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என மணப்பெண் மற்றும் மணமகனுக்கு கோரிக்க வைத்தார்’ இதைதொடர்ந்து ‘குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே’ என ஒருவர் டிவிட்டரில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, தம்பியின் கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்’ என ஸ்டாலின் டிவிட்டரிலேயே பதில் கூறியிருக்கிறார். இதையடுத்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

ப்ளீஸ் ஃபாலோ பண்ணுங்க!.. செய்வீங்க.. செய்றீங்க!.. ஓகே!. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்!…

0

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தபோது அவரது வேன் மீது சில ரசிகர்கள் ஏறி அவருக்கு முன் குதித்தார்கள். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.

நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க… இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்… உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்… அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்…
ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்… எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…

fans

நீங்கதான் எனக்கு முக்கியம்s… இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல… உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100 சதவீதம் சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்…

இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்… செய்வீங்க… செய்றீங்க…ஓகே?…’ என அதில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவுக்குள்ள சினிமா காட்டுறாங்களே!.. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் வீடியோ!…

0

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு கை கொடுத்த தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலாதான் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களுமே ஹிட். இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பேய்கள் கொடுக்கும் கேமை சரியாக விளையாடி முடிக்க வேண்டும் என்கிற கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இந்த படமும் ஹிட்.

இப்போது அதே இயக்குனரின் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கவுதம் மேனன், கிங்ஸ்லி, கீத்திகா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சந்தானத்தின் நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படமும் பக்கா ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யா போல், கவுதம் மேனனும் உயிரின் உயிரே பாடலுக்கு நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் புதிய திரைப்படங்களை யுடியூப்பில் விமர்சனம் செய்பவராக சந்தானம் நடித்திருக்கிறார். அவரின் ரிவ்யூவை பார்த்து கோபப்படும் ஒரு பேய் சந்தானத்தை ஒரு சினிமாவுக்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை. இப்படம் வருகிற மே 16ம் தேதி ரிலீஸாகவுள்ளது.