Home Blog Page 223

ராஜ்யசபா ஆசனமின்றி வைகோ.. கேள்வி குறியாகப்போகும் திமுக கூட்டணி?! துரை வைகோ பளிச் பதில்!!

MDMK DMK: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக அமர வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியது: “திமுக ஆட்சி சவால்களுக்கிடையே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக திமுக அரசு முயற்சி செய்கிறது,” என்றார்.

அதே நேரத்தில், வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா பதவி வழங்கப்படும் என துல்லியமாக எதையும் சொல்ல முடியாது, அதனால் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று துரை வைகோ உறுதி செய்தார். அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான செயல்திட்டம் குறித்தும் அவர் பேசினார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மதிமுக வலுவான தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தொழிலாளர்களுக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மே 1 ஆம் தேதியின் வரலாறையும் அவர் பகிர்ந்தார். அந்தவகையில் “1990-ஆம் ஆண்டு, ராஜ்யசபாவில் மே தினத்தை ஊதியத்துடன் கூடிய தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வைகோ முன்மொழிந்ததை அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங் ஏற்றார். அதன் பின்னரே அந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது,” என்று பெருமிதத்துடன் பகிர்ந்தார்.

மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரே நோக்கத்தில் – தொழிலாளர் நலனுக்காக போராடும் இயக்கம் என தெரிவித்தார். இவர் பேட்டியளித்ததன் மூலம் இவர்கள் கூட்டணி உறுதியாக உள்ளதை வெளிப்படை தன்மையுடன் காட்டுகிறது.

100 நாள் வேலை திட்டம்.. எல்லார் அக்கவுண்டுக்கும் வரும் பணம்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0

Central Government: கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தற்போது தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.2999 கோடி  நிதியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்த கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) 2005ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும் இந்த திட்டத்தில், விவசாயிகள், பெண்கள் மற்றும் பல்வேறு கிராமப்புற மக்கள் உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியம் வழங்குகிறது.

மத்திய அரசு நிதி வழங்கப்படாததை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருந்தனர். கடிதம் அனுப்பியதன் பேரில் தற்போது ரூ.2999 கோடி நிதியானது விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையாக ரூ.1246 கோடியை  கூடுதலாக வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்குவதாகவும், பாஜக அல்லாத மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் திமுக கடும் குற்றச்சாட்டு முன் வைக்கிறது.

இந்த நிதி விடுவிப்பு தமிழக கிராமப்புற மக்களுக்கு ஓர் நிம்மதியாக அமைந்துள்ளது. வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இந்த திட்டம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.

ரோலக்ஸ் படம் எப்போது?… செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது.

அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் மூலம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார்.

அடுத்து கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் சுப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்கிற கேமியோ வேடத்தில் சூர்யா அசத்தலாக நடித்திருந்தார். இந்த வேடம் சூர்யாவுக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. எனவே, ரோலக்ஸ் வேடத்தை தனியாக வைத்து ஒரு படத்தை லோகேஷ் இயக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் அப்போதிலிருந்தே கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ரெட்ரோ படம் ரிலீஸை தொடர்ந்து இது தொடர்பான ஒரு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் ‘அடுத்து கைதி 2 படம் இருக்கிறது. ரோலக்ஸ் படம் கண்டிப்பாக செய்வேன். செய்துதான் ஆக வேண்டும். கூலி படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது’ என தெரிவித்திருக்கிறார்.

பள்ளிகளை திறப்பது எப்போது?!.. புது தகவலை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!…

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் முழு ஆண்டு தேர்வு முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைந்து 25.04.2026 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2026 எனவும். 2025-2026ம் கல்வியாண்டில் 02:06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகளை வழங்குமாறு அணைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், ஜூன் முதல் வாரம் தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘வெயிலின் தாக்கத்தை பொறுத்து முதல்வரின் அறிவுறுத்தலில் பள்ளிகள் திறக்கப்படும்’ என கூறினார். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் குடலில் புழுக்கள் உருவாகி பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.குடற்புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

குடற்புழு அறிகுறிகள்:-

1)வயிற்று வலி
2)மலத்தில் புழு வெளியேறுதல்
3)வயிற்றுப்போக்கு
4)மலம் கழிப்பதில் சிரமம்
5)ஆசனவாய் பகுதியில் குடைச்சல்
6)வயிறு பிடிப்பு

குடற்புழுக்கான காரணங்கள்:-

1)ஆரோக்கியம் இல்லாத உணவு
2)தரமற்ற குடிநீர்
3)ஊட்டச்சத்து குறைபாடு
4)இனிப்பு உணவுகள்

குடற்புழுக்களை வெளியேற்ற வீட்டு வைத்தியங்கள்:

1.பப்பாளி இலை
2.தண்ணீர்

முதலில் ஒரு பப்பாளி இலையை பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பப்பாளி இலை ஜூஸை கிளாஸிற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பப்பாளி ஜூஸை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இவ்வாறு செய்தால் குடல் புழு அழிந்துவிடும்.

1.வேப்பிலை
2.தண்ணீர்

சிறிதளவு வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த வேப்பிலை சாறை பருகி வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.

1.பாகல் இலை
2.தண்ணீர்

இரண்டு அல்லது மூன்று பாகல் இலையை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த பாகல் இலை ஜூஸை வடிகட்டி பருகினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

உங்களுக்கு பைல்ஸ் பாதிப்பு இருந்தால் துத்தி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பைல்ஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)துத்தி இலை – இரண்டு
2)மோர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு துத்தி கீரை இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வதக்கிய துத்தி கீரையை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த மோரை குடித்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துத்தி கீரை – இரண்டு
2)பூண்டு பல் – ஒன்று
3)சின்ன வெங்காயம் – நான்கு
4)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கிவிட வேண்டும்.

அதன் பிறகு இரண்டு துத்தி கீரையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பூண்டு பல் மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் துத்தி கீரையை அதில் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.அதன் பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த துத்தி கீரையை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போதும்!! எப்பேர்ப்பட்ட குடல்புண்களும் மாயமாகிவிடும்!!

உங்கள் குடல் பகுதியில் உள்ள புண்களை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

**வெள்ளைக்கரு
**பால்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பின்னர் இந்த பாலை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் ஆகியற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி பருக வேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் குடல் புண் பாதிப்பு முழுமையாக குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

**தேங்காய் பால்
**வெந்தயம்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதனை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடித்து தேங்காய் பாலில் கலந்து குடித்தால் குடல் புண் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

**மோர்
**வெந்தயம்

செய்முறை விளக்கம்:-

முதலில் சிறிதளவு வெந்தயத்தை லேசாக வறுத்து பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரைத்த வெந்தயப் பொடியை போட்டு குடித்தால் குடல்புண் பாதிப்பு குணமாகும்.

ஓயாமல் இரும்பிகிட்டே இருக்கீங்களா? அப்போ இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

எப்பொழுதும் இருமல் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருப்பவர்களுக்கு அருமையான கை மருந்து இங்கு தரப்பட்டுள்ளது.இதை முயற்சி செய்து வந்தால் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தீர்வு 01:

கடுகு பொடி – ஐந்து கிராம்
தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் கால் தேக்கரண்டி அளவு கடுகு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணம் ஒன்றில் கடுகு பொடி 5 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இதை சாப்பிட்டால் இருமல் பிரச்சனை முழுமையாக குணமாகிவிடும்.

தீர்வு 02:

துளசி இலை – பத்து
தேன் – சிறிதளவு

முதலில் பத்து துளசி இலைகளை சுத்தப்படுத்திவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த துளசி சாறில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 03:

ஆடாதோடை இலை – ஒன்று
தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் ஒரு ஆடாதோடை இலையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணத்தில் இந்த ஆடாதோடை இலை சாறு சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

பருவநிலை மாற்றம்,சளி,இருமல் போன்ற காரணங்களால் தொண்டை பகுதியில் கிருமி தொற்றுகள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.தொண்டை பகுதியில் அதிக வலி இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தீர்வு 01:

உப்பு கலந்த வெந்நீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

மஞ்சள் தூள் கலந்த வெந்நீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும்.

தீர்வு 03:

தூதுவளை இலை சாறு மற்றும் தேன்

நான்கு அல்லது ஐந்து தூதுவளை இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தொண்டை வலி பிரச்சனை முழுமையாக குணமாகவிடும்.

தீர்வு 04:

பூண்டு மற்றும் தேன்

முதலில் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட வேண்டும்.பின்னர் இதை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.பிறகு இதை மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தொண்டை வலி குணமாகிவிடும்.

தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை நீங்க.. இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்கள்!!

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஆடாதோடை இலை என்ற அபூர்வ மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது.கசப்பு சுவை நிறைந்த ஆடாதோடை இலை சளி,இருமலை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.இந்த ஆடாதோடை இலைக்கு ஆயுள் காக்கும் மூலிகை என்ற பெயரும் இருக்கிறது.

இந்த ஆடாதோடை இலையை ஆடுகள் தீண்டாது என்பதால் இதை ஆடு தீண்டா பாலை என்று அழைக்கின்றோம்.இந்த ஆடாதோடை இலை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக ஆடாதோடை இலை திகழ்கிறது.

ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்:

1.இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

2.ஆஸ்துமா,சைனஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள ஆடாதோடை இலை சாறை பருகலாம்.சளி பாதிப்பு இருப்பவர்கள் ஆடாதோடை இலையில் கசாயம் செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.

3.காய்ச்சல் குணமாக ஆடாதோடை இலையின் சாறை பருகலாம்.குடைச்சல்,நரம்பு இழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.

4.ஆடாதோடை இலையை உலர்த்தி பொடித்து பாலில் கலந்து குடித்தால் வாந்தி,குமட்டல் பாதிப்பு குணமாகும்.

5.தினமும் ஒரு ஆடாதோடை இலையை ஆவியில் வேகவைத்து சாறு எடுத்து பருகினால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

6.ஆடாதோடை இலையுடன் வேப்ப இலையை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் பாதிப்பு குணமாகும்.

7.ஆடாதோடை இலையுடன் குப்பைமேனி இலையை அரைத்து காயம் பட்ட இடங்களில் பூசினால் வலி தானாக குறையும்.