Home Blog Page 235

என் மகளுக்கு சிகிச்சை இருக்கு.. இந்தியாவில் இருக்க ஹெல்ப் பண்ணுங்க!. கதறும் பாகிஸ்தானி!…

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கும் இந்தியாவில் சிகிச்சை பெறவேண்டியிருப்பதால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்.

இவர் கடந்த சில நாட்களாகவே டெல்லியில் தங்கி தனது மகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை ஒரு கோடி வரை செலவு செய்துவிட்டேன்.  இந்திய அரசு என் விசாவை ரத்து செய்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் என்னை வெளியேற சொல்கிறார்கள். அடுத்த வாரம் தனது 2 குழந்தைகளுக்கும் இருதய அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் மத்திய அரசு என் கோரிக்கையை ஏற்று டெல்லியில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். இதையடுத்து இவருக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு!..

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டது. மருத்துவ விசா தவிர, பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே தனது விசா ரத்து செய்யப்பட்டதஹி எதிர்த்து பாகிஸ்தானிய பெண் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

4 பேர் செஞ்ச தப்புக்காக பாகிஸ்தானை குறை சொல்லக் கூடாது – விஜய் ஆண்டனி

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், நடுநிலையான விசாரணைக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பழிபோடும் விளையாட்டிற்கான மற்றொரு உதாரணமாகி விட்டது. இது முடிவுக்கு வர வேண்டும். ஒரு பொறுப்பான நாடாக இவ்விவகாரம் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு நாங்கள் தயார் என அவர் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி ‘பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது. பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள்தான்’ என பேசியிருக்கிறார்.

தவெக கூட்டணி கதவை மூடிவிட்டேன்!. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!…

0

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை.

மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை ஒழிப்பேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். இதில் திமுகவை மன்னராட்சி என அவர் சொல்வதே பெரும் விவாதங்களை கிளப்பியது. திமுகவில் அப்பா – மகன் – பேரன் என தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வருவது விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவேதான் அவர் அரசியல் கட்சியே துவங்கியதாக பார்க்கப்படுகிறது.

அதோடு, தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். எனவே, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அப்போதே, எனக்கு ஆசை காட்டி திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். எனவே, அதிமுகவுடன் தவெக இணையும். இதைத்தவிர விஜய்க்கும் வேறு வழியில்லை என பலரும் நினைத்தார்கள்.

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, விஜய் தனித்துவிடப்படுவாரா என்கிற எண்ணமும் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயுடன் இணைவார் என தோன்றவில்லை. இந்நிலையில், மேடை ஒன்றில் பேசிய திருமாவளவன் ‘தவெகவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த கதவையும் நான் மூடிவிட்டேன். நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி நான் இல்லை. பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம் பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை’ என பேசியிருக்கிறார்.

விஜயுடன் கூட்டணி போட வேண்டும் என்பதே பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடம் என பிரித்து கொள்வோம் என விஜய் சொன்னதை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் பாஜக பக்கம் போய்விட்டார்’ எனவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கோவை விமான நிலையத்தில் அலப்பறை!.. தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

Covai airport

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். எனவே, எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தவேக கட்சியினர் மற்றும் அவரின் ரசிகர்கள் திரண்டனர். அவரை பார்க்க விமான நிலையத்தில் கூட்டம் நின்றது. பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது.

இந்நிலையில், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததற்காகவும், விமான நிலையத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதற்காகவும் கோவை போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஜோம்பி கூட்டத்தை ஜூவில் அடைக்கணும்!.. விஜய் ரசிகர்களை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

vijay

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். எனவே, எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தவேக கட்சியினர் மற்றும் அவரின் ரசிகர்கள் திரண்டனர். அவரை பர்க்க விமான நிலையத்தில் கூட்டம் நின்றது. பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது. அதோடு, விமான நிலையமே களேபரமானது. விஜய் வந்த பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோது விஜய் ரசிகர்கள் பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில், பிரபல யுடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் இது தொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு தடுப்புகளை சேதப்படுத்திய ஜோம்பி கூட்டம். நேற்று ஒருநாளில் மட்டும் ஏகப்பட்ட குரங்கு சேட்டை. இனியும் இந்நிலை தொடராமல் இருக்க இவைகளை கொத்தாக அள்ளி ஜூவில் அடைப்பதே சரி’ என பதிவிட்டிருக்கிறார்.

 

 

Video courtesy to Thanthi Tv

பின்பக்க மண்டையில் சுள்ளுனு வலிக்குதா? இதற்கு என்ன காரணம்? உரிய தீர்வு இதோ!!

0

நமது தலைக்கு பின் பக்கத்தில் வலி இருந்தால் அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.தலைவலி,ஒருபக்க தலைவலி,டென்ஷன்,தலையில் வீக்கம்,அடிபடுதல்,நீரிழப்பு போன்ற காரணங்களால் பின்பக்க மண்டையில் தலைவலி ஏற்படுகிறது.

இது தவிர தூக்கமின்மை,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை,சைனஸ் தொற்று,காது பகுதியில் வலி மற்றும் கழுத்து பகுதியில் வலி இருந்தால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த பின்பக்க தலைவலி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.நின்றால்,தலையை அசைத்தால் கடுமையான தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த தலைவலி பாதிப்பு அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது.

அதேபோல் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு,வலி ஏற்பட்டால் பின்பக்கத்தில் சுளீரென்று வலி ஏற்படும்.அதிக நேரம் குனிந்தபடி மொபைல் பயன்படுத்துதல்,குனிந்த நிலையில் வேலைபார்த்தல் போன்ற காரணங்களால் பின்பக்க தலையில் சுள்ளென்று வலி ஏற்படுகிறது.

இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ செய்யலாம்.கழுத்து மற்றும் பின்பக்க தலைக்கு இடைப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யலாம்.கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டாலோ அல்லது தசைகள் சோர்வடைந்தாலோ சிறிது நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

பின்பக்க கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைய உடற்பயிற்சி செய்யலாம்.கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டால் குளிர் பேக் அல்லது ஹாட் பேக் கொண்டு அழுத்தம் கொடுக்கலாம்.போதிய தூக்கத்தை அனுபவித்தால் பின்பக்க கழுத்து வலி குணமாகும்.அதிக நேரம் குனிந்த நிலையில் வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி பின்பக்க கழுத்துப் பகுதியை கைகளை கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நினைத்து கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி மற்றும் தசைப்பிடிப்பு நீங்கும்.பின்பக்க தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு இடையில் ஐஸ்பேக் வைத்தால் தலைவலியில் சுளீரென்று வலிப்பது குறையும்.

இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

0

நாம் செய்யும் சில கவனக் குறைவான விஷயத்தால் நமக்கு நோய் பாதிப்பு வருகிறது.இன்று பெரும்பாலானோர் சுத்தத்தை கடைபிடிப்பதில்லை.இன்றைய காலகட்டத்தில் நோய் பாதிப்புகள் உருவாக முதன்மை காரணம் சுத்தமின்மைதான்.

நாம் அசுத்தமாக இருந்தால் உடலில் பாக்டீரியா,கிருமிகள் நுழைந்து நோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.நாம் நோய்வாய்ப்பட சமையலறையும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா.ஆம் நாம் சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நமக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

அழுக்கு படிந்த சமையல் பாத்திரத்தை பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற கிருமிகள் நமது சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும் என்ற தகவல் ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.கிருமித் தொற்று உள்ள பாத்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்
சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.மிக்சர் ஜார் அனைவரும் பயன்படுத்தும் பொருளாகும்.இந்த மிக்சர் ஜாரில் சட்னி,மசாலா போன்றவற்றை அரைக்கின்றோம்.

இதனால் ஜார் முடியின் பெல்ட்டில் கழிவுகள் அப்படியே படிந்துவிடுகிறது.இதை
நாம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற அழுக்கு உடலில் நேரடியாக நுழைந்து பலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதேபோல் குக்கர் மூடி பெல்ட்டையும் நாம் வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ச்,நார் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி மிக்சர் ஜார் மற்றும் அதன் மூடியை போட்டு ஊறாவிட்டால் அழுக்குகள் வந்துவிடும்.அதேபோல் குக்கர் மற்றும் மிக்சர் ஜார் மூடியின் பெல்ட்டை கழற்றிவிட்டு வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்பான்ச்சை சுடுநீரில் போட்டு ஊறவைத்த பிறகு யூஸ் பண்ணலாம்.இப்படி செய்தால் கிருமிகள் எளிதில் நீங்கிவிடும்.

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

0

தினமும் மூன்றுவேளை உணவு சாப்பிடும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம்.காலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் இரவில் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆனால் நாம் உணவு பழக்கத்தையே மாற்றி வருகின்றோம்.நேரம் கடந்து சாப்பிடுதல்,இரவில் தூங்கும் நேரத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுதல் போன்ற தவறான பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.சிலர் இரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர்.இதனால் செரிமான ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

நம் முன்னோர்கள் இரவில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை.ஆனால் இன்று இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சொக்கிவிடுகின்றனர்.இது தூக்கம் இல்லை உண்ட மயக்கம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.உணவு சாப்பிடாமல் உறங்குவதுதான் சிறந்தது என்பதை நம்
முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

இரவில் உணவு உட்கொள்ளாமல் உறங்குவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)நாம் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் படுத்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.இரவில் சாப்பிடாமல் உறங்கும் பொழுது நமது செரிமான அமைப்பிற்கு ஓய்வு கிடைக்கும்.இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

2)இரவில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும்.

3)இரவில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியம் மேம்படும்.இரவு நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

இருப்பினும் பசியை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இரவில் 7 மணிக்குள் உணவு உட்கொள்ளலாம்.சிலருக்கு இரவு உணவு உட்கொள்ளவில்லை என்றால் உடல் சோர்வு,மயக்கம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரவு உணவை தவிர்க்க முடியாதவர்கள் அதை 7 மணிக்குள் உட்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

0

நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.இன்று பெரும்பாலானோர் சோம்பல் வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்த்தால்,நீண்ட நேரம் நின்று கொண்டு வேலைபார்த்தால் போன்ற காரணங்களால் விரைவில் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு வந்தது.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,கால்சியம் பற்றாக்குறை,வைட்டமின் டி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மூட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது.நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் எலும்புகளின் அடர்த்தி குறைந்துவிடும்.எலும்புகளின் வலிமை குறைந்து மிருதுவாக மாறிவிடும்.இதனால் நடக்க,ஓட முடியாத நிலை ஏற்படும்.

நாம் இளமை பருவத்தில் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே முதுமை காலத்தில் படுத்த கிடக்கும் நிலையை சந்திக்க மாட்டோம்.ஆனால் நாம் இளமையில் சோம்பல் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதால் முதுமை காலத்தில் நோய் வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

இளம் வயதில் எலும்பு வலிமையை அதிகரிக்க வழிகள்:-

1)தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2)கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பால்,பால் பொருட்களில் கால்சியம் கொட்டி கிடக்கிறது.

3)தினமும் 10 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டும்.காலை மற்றும் மாலை நேரத்தில் சன் பாத் எடுக்க வேண்டும்.

4)புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எலும்புகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.15 நிமிடங்களுக்கு ஓடு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.