Home Blog Page 241

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

0

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

ஐபிஎல் 2025 தொடரின் 43 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் ஷெய்க் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அயூஷ் பத்ரானா 30 ரன்கள், டிவால்ட் பிரெவிஸ் 28 ரன்கள், சிவம் துபே 17 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 15 ரன்கள், சாம் கரன் 14 ரன்கள் எடுத்தனர்.

தோனி 6 ரன்கள் மட்டுமே எடுத்துத் திரும்பினார். ஹூடா 12 ரன்கள் சேர்த்தார். இதனால் சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹைதராபாத் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள், முகமது ஷமி, உனட்கட் மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த போட்டி எம்எஸ் தோனியின் 400வது டி20 போட்டியாக இருந்ததால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 155 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் தற்போது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

நடிகை தேவயானி இளையராஜாவிடம் பேசிய விதம்!! என் அக்காவின் மறுமுகம் இதுதான்.. நகுல் தெரிவித்த உண்மை!!

0

தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் தற்பொழுது சினிமா துறையில் புதிய பரிணாமத்தை எட்டி இருக்கிறார். 90 காலகட்டங்களில் ஆபாசமான காட்சிகள் இன்றி குடும்ப பங்கான காட்சிகள் நடித்து வெற்றி கண்ட நடிகையாக நடிகை தேவயானி பார்க்கப்படுகிறார்.

இவருடைய திருமணம் அன்று சினிமா காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலாகவே இருந்தது. திருமணத்திற்கு பின் திரையுலகில் நடிப்பதை விட்ட நடிகை தேவயானி அவர்கள் சமீப காலமாக மீண்டும் திரையில் தோன்றி பல படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் நடித்த நிழற்குடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருடன் இவருடைய தம்பியான நகுல் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இவர் தன்னுடைய அக்கா தேவயானி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் நகுல் தேவயானி குறித்து பேசி இருப்பதாவது :-

என் அம்மாவிற்கு பிறகு எனக்கு அனைத்துமே என் அக்கா தான் என்றும் அவரை தன்னுடைய அம்மா ஸ்தானத்தில் வைத்து தான் எப்பொழுதும் பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடைய அக்காவிற்கு நடிகை என்ற முகத்தை தாண்டி மற்றொரு முகம் இருப்பதாகவும் அதை யாரும் பெரிதளவில் கண்டதில்லை என நடிகர் நகுல் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதாவது, தனக்கு உறவுக்கார பையன் ஒருவனுக்காக பிரசாத் ஸ்டுடியோவில் கோர்ஸ் ஒன்றில் சேர்த்துவிடும் படி கேட்டதாகவும் அப்பொழுது தன்னுடைய அக்கா அங்கு சென்று தனக்கும் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை அதற்கான கோசில் இணைந்து 3 மாதங்கள் படித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதன்பின் கைக்குட்டை என்ற திரைப்படத்திற்கு இயக்குனராக தன்னுடைய அக்கா மாறிவிட்டார் என்றும் இது குறும்படமாக இருப்பினும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பட்சத்தில் அவரிடம் சென்று உங்களுக்கு இந்த படம் பிடித்திருந்தால் மட்டும் இதற்கு இசை அமைத்து தர முடியுமா என தன்மையாக கேட்டதாகவும் நகுல் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்னதான் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் தனக்கென தனி ரசிகர் படை இருந்தாலும் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஒருவரிடம் பணிவாக நடந்து கொள்வது தான் மிகப்பெரிய உயர்வு என்பதை தேவயானி மதித்து நடக்கிறார் என்றும் அவர் இளையராஜாவிடம் பேசிய மற்றும் நடந்து கொண்ட விதம்தான் தேவயானி உடைய மறுமுகம் என சுட்டிக்காட்டி இருக்கிறார் அவரின் தம்பி நடிகர் நகுல்.

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! Indian oil வெளியிட்ட வெடிக்காத சிலிண்டர்.. இனி தீப்பற்றினாலும் பயம் இல்லை!!

0

கூட்டு எரிவாயு சிலிண்டர் என்ற புதிய விதமான சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனமானது உருவாக்கியிருக்கிறது. இதனால் வீடுகளில் தீப்பற்றினால் கூட சிலிண்டர் வெடிக்கும் அபாயமானது கிடையாது என்றும் சிலிண்டரின் எடை குறைவாக இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கூட்டு எரிவாயு சிலிண்டரின் பயன்கள் :-

✓ வீடுகளில் தீப்பற்றினால் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் வெடிக்காது. அதற்கு மாறாக சிலிண்டர் முழுவதுமாக தானே எரிந்து போய்விடும்.

✓ எந்த சூழ்நிலையிலும் தீப்பிடிக்காத அளவு பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

✓ இந்த சிலிண்டர் துருப்பிடிக்காமலும் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதால் சமையலறையின் அழகை அதிகரித்து காட்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

✓ சாதாரண எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் 30 கிலோ வரை இருக்கும் நிலையில் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் 15.5 கிலோ வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் இதனை எளிதாக கையாள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் சாதாரண எரிவாயு சிலிண்டர்கள் உள்ளது என்றால் அதனை உடனடியாக உங்களுடைய விண்ணப்பதாரர்களிடம் அல்லது விநியோகஸ்தர்களிடம் சொல்லி விண்ணப்பங்கள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண எரிவாயு சிலிண்டர்களுக்கு 2200 முன்பணம் கட்டுவது போல இந்த எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலாக 800 ரூபாய் சேர்த்து 3000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

0

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ்.
தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளியில் வடிவேலு பி.டி ஆசிரியராக இருக்க அங்கு சுந்தர்.சியும் பி.டி.ஆசிரியராக வருகிறார். அந்த பள்ளியில் படித்த ஒரு சிறுமி காணாமல் போக ஆசிரியை புகார் கொடுக்க அதுபற்றிய விசாரணையும் துவங்குகிறது. அங்கு ரவுடிசம் செய்து கொண்டிருக்கும் குரூப்பை பார்த்து சுந்தர்.சி பொங்க என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!...

வில்லனிடம் இருக்கும் 150 கோடி பணத்தை வடிவேலு உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க நினைக்கிறார் சுந்தர்.சி. இது தொடர்பாக நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம். இந்நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளில் இப்படம் 60 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு ‘எங்களுக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. அந்தளவுக்கு படத்துக்கு வரவேற்பு இருக்கு. இந்த சம்மருக்கு நீங்க எங்கேயும் டூர்லாம் போக தேவையில்லை. இந்த படத்தை பார்த்தாலே போதும். குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லோரும் மனசு விட்டு சிரிக்கலாம். சிரிப்பு மட்டுமில்ல. இதுல நல்ல கதையும் இருக்கு’ என பேசியிருக்கிறார்.

ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

0

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவுல இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சுய தொழிலை தொடங்குவதற்கும் அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மட்டுமல்லாது பெண்களினுடைய வாழ்வை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயமாகவே தங்களுக்கு அறிந்த கலையான சமையல் கலை மூலம் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வழிவகையை திட்டம் உருவாக்கி இருக்கிறது.

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா :-

✓ இத்திட்டத்தில் பயன்பெற நினைக்கும் பெண்கள் 18 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்.

✓ பெண் தொழில் முனைவோர்களை ஆதரிக்கும் விதமாக இடத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரை கடந்ததவி வழங்கப்பட்டு வருகிறது.

✓ 50,000 ரூபாய் பணத்தினை பயன்படுத்தி சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், சமையல் கருவிகள், குளிர்சாதனப்பெட்டி, உணவுப் பொருட்கள், உணவு மேஜை போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

✓ இந்த திட்டத்தில் பயனடைய நினைப்பவர்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ இதற்கு முன் கடன் பெற்றவராக இருந்தால் அந்த கடனை சரிவர திருப்பி செலுத்தி வராக இருத்தல் வேண்டும். அதேபோன்று நல்ல சிபில் ஸ்கோர் இருப்பது அவசியம்.

✓ ஏற்கனவே நடத்தப்படக்கூடிய பதிலாக இருந்தால் அது தனியாகவோ அல்லது கூட்டு துணையாகவும் இருந்தால் கட்டாயமாக 1 வருடம் வரை கடையை நடத்தி இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நினைக்கும் சுய தொழில் செய்ய முன்வரும் பெண்கள் அருகில் இருக்கக்கூடிய SBI வங்கி கிளைகளை நேரில் சென்று இத்திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணியவாதி போல் நடிக்கும் ஹீரோக்கள்!! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மாளவிகா மோகனன்!!

0

கேரளாவை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனன் சமீப காலமாகவே தன்னுடைய சர்ச்சை கருத்துக்களால் பிரபலம் ஆகிறது. ஏற்கனவே தென்னிந்திய திரை உலகில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் நடிகைகளின் தொப்புள்களை காட்ட விரும்புவதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்து மூலம் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசியிருப்பதாவது :-

வெளியுலகிற்கு பெண்ணியவாதிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் ஹீரோக்கள் உண்மையில் ஆணாதிக்க வாதிகள் என்றும் வெளியில் மட்டுமே அது போன்று நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதாவது, திரைப்படத்துறையில் இருக்கக்கூடிய இந்த சமத்துவமின்மை எந்த காலத்திலும் முடிவுக்கு வராது என்றும் பெண்களை சமமாக பார்க்கக் கூடியவர் மிகவும் முன்னோக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார் என்றும் பெண்ணியவாதி போல நடந்து கொள்ளக் கூடியவர்கள் என்னென்ன வார்த்தைகளை சொல்ல வேண்டும் என வெளியுலகத்திற்காக யோசித்து பேசுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் யாரும் இல்லாத இடத்தில் அவர்கள் எப்படி பெண் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு திரையுலகில் உள்ள நடிகர்களின் கோபத்தையும் பெற்று வருகிறது.

சொல்லாம கூட்டிட்டு போய்ட்டாங்க!.. பகல்ஹாம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதில்!..

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சொல்லாம கூட்டிட்டு போய்ட்டாங்க!.. பகல்ஹாம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதில்!..

இந்நிலையில், பகல்காமில் தாக்குதல் நடந்தபோது அங்கு ராணுவ வீரர்கள் இல்லாது ஏன் என்கிற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது. ராஜ்நாத் சிங், அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலாவது:

உள்ளூர் நிர்வாகத்துக்கு முறையாக தகவல் அளிக்காமல் சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை அங்கு அழைத்து சென்றுவிட்டனர். ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையின் போது ஜூன் மாத துவக்கத்தில் பகல்காம் பகுதியில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்துவது வழக்கம். உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் ஏப்ரல் 20ம் தேதியே சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்து சென்றுள்ளனர். சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது கூட இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதற்காகத்தான். நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் அழுத்தமான செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்திருக்கிறோம்’ என பதிலளித்திருக்கிறார்கள்.

காரை நிறுத்தி கோவிலுக்கு அழைத்த குருக்கள்!! சற்று யோசிக்காமல் ரஜினி செய்த செயல்!!

0

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீப காலமாக ஜெயிலர் 2 மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைபடத்தின் பணிகள் ஓரளவு முடிந்திருக்கும் நிலையில் சமீப காலமாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லும் போது திடீரென அவருடைய காரை குருக்கள் வழி மறைத்து அழைப்பவே சற்று யோசிக்காமல் ரஜினி என்ன செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்தின் கார் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு காத்திருந்த மாதேஸ்வரன் கோவில் குருக்கள் காரை வழிமறித்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே நடிக்க ரஜினிகாந்த் அவர்கள் சற்றும் யோசிக்காமல் காரை நிறுத்தும்படி கூறி பட்டென இறங்கி மாதேஸ்வரனை தரிசனம் செய்ய வந்துவிட்டார். கோவில் குருகளும் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை மற்றும் பூஜை செய்து அவருக்கு நெற்றியில் திருநீறு பூசி விட்டார்.

இந்த வீடியோ காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்கள் பலரும் எவ்வளவு எளிமையான மனிதனாக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அரசியலுக்கு செல்லலாம் என முடிவு செய்த ரஜினிகாந்த் அவர்கள் கிடைத்த பெருத்தாடியால் இனி அரசியல் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என முடிவெடுத்து தற்போது தமிழ் சினிமா துறையில் மிகவும் பிசியாக நடித்து வரக்கூடிய நடிகராக விளங்கி வருகிறார். மேலும் ஒரு சாதாரண கோவில் குருக்கள் அழைத்ததற்காக சற்றும் யோசிக்காமல் அவருடைய அழைப்பை ஏற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யக்கூடிய அளவு மென்மையான மனிதராகவும் இவர் இருக்கிறார் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

IPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!

0

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை களம் இறக்க CSK அணி முடிவு செய்து இருக்கிறது.

21 வயது நிறைவடைந்த தென்னாப்பிரிக்கா இளம் கிரிக்கெட் வீரரான டிவால்ட் பிரெவிஸ் என்பவரை இன்றைய ஆட்டத்தில் களமிறக்க சென்னை அணி முடிவு செய்திருக்கிறது. இவர் பிரபல தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியம்ஸ் போன்று பேட்டிங் செய்வதால் இவரை பேபி ஏபி என அனைவரும் அழைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது குறைந்த ஸ்ட்ரைக் ரைட்டில் 81 டி20 மேட்ச் களில் இதுவரை 1700 க்கும் மேற்பட்ட ரன்களை குறித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த காரணங்களுக்காக மட்டும் சென்னை அணி இவரை விளையாட அனுமதிக்க வில்லையாம்.

நேற்று சென்னை அணி ப்ராக்டிஸ் மேட்ச் விளையாடிக் கொண்டிருந்த பொழுது டிவால்ட் பிரெவிஸ் பேட்டிங் பிடித்திருக்கிறார். அப்பொழுது இவருடைய ஆட்டத்தை சென்னை அணியின் தலைமை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாது கேப்டன் தோனி அவர்களும் உற்று நோக்கியதாகவும் ஒத்திகை ஆட்டத்தில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை இளம் வீரர் வெளி காட்டியதால் இந்த முடிவை தோனி அவர்கள் எடுத்திருப்பதாகவும் இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த இளம் வீரரை களம் இறக்குவது மூலம் சென்னை அணி வெற்றி அடையும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

0

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 26 :-

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 அன்று பொது விடுமுறை.

ஏப்ரல் 27 :-

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை காரணமாக அன்று வங்கிகளுக்கு எப்பொழுதும் போல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28 :-

இன்றைய தினத்தில் எந்த ஒரு சிறப்பு விழாக்களும் நிகழ்ச்சிகளும் இல்லாததால் எப்பொழுதும் போல் அனைத்து வங்கிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 :-

இன்றைய தினத்தில் பரசுராமர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 30 :-

பசவ ஜெயந்தி மற்றும் அக்ஷய திருப்தியை முன்னிட்டு கர்நாடகாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிக் கொள்ளும் உள்ளூரில் விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மாநிலங்களை தவிர இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றும் மாநிலங்களில் வங்கிகள் எப்பொழுதும் போல் செயல்படும் என இந்தியன் பிரசவ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.