Home Blog Page 265

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி.. இரட்டை இலை மேல் தான் தாமரை!! நயினார் பேச்சால் பரபரப்பு!!

0

BJP ADMK: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை ஆளும் கட்சிக்கு எதிராக களம் இறங்க பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பாஜக நினைக்கிறது. அதனால்தான் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இப்படி கூட்டணி வைத்ததும் பல சர்ச்சைகளுக்குள் அதிமுக பாஜக சிக்கியது. குறிப்பாக கூட்டணி முறையில் ஆட்சி என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். ஆனால் எடப்பாடி கூட்டணி ஆட்சி முறைக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்கையில் பாஜக மற்றும் அதிமுக இரு கட்சி தலைவர்களும் இனி யாரும் கட்சி சார்ந்து விமர்சனம் செய்ய கூடாது என்று கூறினர். இவ்வாறு இருக்கையில் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பேசியது வைரலாக வருகிறது. அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையானது பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதற்காக அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பாஜக தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும், தொண்டர்கள் அயராது கட்சிக்காக உழைக்க வேண்டும். கூட்டணி குறித்து அதிமுகவும் பாஜக நிர்வாகிகளும் பேச வேண்டாம். இது உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. கட்டாயம் தமிழகத்தில் தாமரை மலரும் குறிப்பாக இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் என்று தீர்க்கமாக கூறியிருந்தார்.

இவர் அவ்வாறு கூறியதற்கு கூட்டணி முறையில் தான் ஆட்சி என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போல் உள்ளது. கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது என அதிமுக கூறிவரும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் சூசகமாக தெரிவித்திருப்பது பாஜகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு இது தான் என்பதை உணர்த்துகிறது.

நான் இன்னும் இவ்வளவு திருமணம் செய்ய வேண்டும்!! வெளிப்படையாக பேசிய கமலஹாசன்!!

0

ஸ்டெர்லைட் திரைப்படத்தின் சிங்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமலஹாசன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய தக்கலைப் திரைப்படம் ஆனது வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய நிலையில் நேற்று திரைப்படத்தின் முதல் சிங்கள் வெளியிடப்பட்டது. இந்த பாடலை கமலஹாசனை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ஆகவும் சிங்குச்சா பாடல் மாறி இருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் இடம் மட்டுமல்லாது திரிஷா விடும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என த்ரிஷாவிடம் கேட்டதற்கு த்ரிஷா அவர்கள் திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது நடந்தாலோ அல்லது நடக்காவிட்டாலோ தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

நடிகை திரிஷாவை தொடர்ந்து கமலஹாசனிடம், ” ராமனை கும்பிடும் குடும்பத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய நீங்கள் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் ? ” என எம்பி ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த கமலஹாசன், நான் ராமர் வகையறா அல்ல என்றும் அவருடைய தந்தையின் வகையறா என தெரிவித்ததோடு மட்டுமல்லாது இன்னும் தன்னுடைய வாழ்வில் 49,000 அதிகமான திருமணங்கள் செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

குரூப்-1 தேர்வர்களின் கவனத்திற்கு!! ஏப்ரல் 30 தான் கடைசி தேதி!!

0

குரூப் 1 தேர்வர்களுக்கான விண்ணப்ப தளம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் தேர்வுக்கு தயாராகி வரக்கூடிய பல தேவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே குரூப்-1 தேர்விற்கு பயிற்சி பெற்று கொண்டு இருக்கக்கூடிய தேர்வர்கள் உடனடியாக தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

குரூப் 1 தேர்வுக்கான காலி பணியிடங்கள் :-

✓ துணை ஆட்சியர் பதவி – 28
✓ டிஎஸ்பி – 7
✓ வணிகவரி உதவி ஆணையர் – 19

குரூப் 1A தேர்வுகளுக்கான காலி பணியிடம் :-

✓ குரூப் 1A பிரிவு – 2

குரூப் 1 மற்றும் 1A தேர்வுகளுக்கான காலி பணியிடங்கள் மொத்தமாக 70 உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு வருகிற ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்த தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உடனடியாக அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அப்படி போடு.. youtube சேனல் உருவாக்க அரசு வழங்கும் இலவச பயிற்சி!!

0

தமிழக அரசின் உடைய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமாக பலரை தொழில் முனைவோர் ஆக மாற்றி வெற்றி கண்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இலவசமாக youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என இரு பயனாளிகளும் கலந்து கொள்ளலாம் என்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Youtube சேனல் உருவாக்கும் பயிற்சியானது ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடத்தப்படும் என்றும் இந்த பயிற்சியின் பொழுது youtube சேனலை எப்படி உருவாக்குவது? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ எப்படி உருவாக்குவது ? சமூக ஊடக சந்தைப்படுத்துதல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் அதற்கான விதிகள் என அனைத்தையும் விரிவாக கற்றுத் தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.editn.in என்ற தமிழக அரசின் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைய நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

முகவரி :-

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ டி ஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600032

கைபேசி எண் :-

✓ 8668108141
✓ 8668102600
✓ 7010143022

பெண்களுக்கான சூப்பர் ஆஃபர்!!படிப்பும்.. ரூ.10,000 பணமும் வழங்கும் அரசு பாலிடெக்னிக்!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் படிப்பும்.. படித்து முடித்த பின்பு வேலை வாய்ப்பு வழங்க கூடிய புதிய திட்டத்தினை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

இதனுடைய முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தங்களுடைய கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்காக புதிய மற்றும் பயனுள்ள டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த படிப்பானது ” சம்பாதிக்கும் போதே கற்றுக்கொள் ” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும் TP சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பாடப்பிரிவில் டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி வழங்கப்பட இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பு 3 ஆண்டு கால அளவை கொண்டிருக்கிறது. முதல் 3 மாதங்கள் வகுப்பறையில் பாடமும் அடுத்த 9 மாதங்கள் நேரடியாக தொழிற்சாலையில் பயிற்சி என பிரித்து வழங்கப்பட இருப்பதாகவும் அதன் கூடவே பயிற்சி காலத்தில் மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாண்டு 4000 ரூபாயும் இரண்டாவது ஆண்டு 4250 ரூபாயும் மூன்றாவது ஆண்டு 4500 ரூபாய் என உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் படிக்கும் பொழுதே மாணவிகள் பயன்பெறுவதோடு படித்து முடித்த பின்பும் வேலை வாய்ப்பை உறுதி செய்து தரக்கூடிய சிறந்த திட்டமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த படிப்பு வடிவமைக்கப்பட்ட இருப்பதாகவும் மாணவிகளுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகள் அமையும் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு,

திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக்
தொலைபேசி எண் – 0462 2984564.

நீட் மாணவர்களின் கவனத்திற்கு!! முதுநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

0

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய நீட் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வானது மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய மருத்துவ பட்டம் ஏற்படிப்புகளுக்கான எம் டி எம் எஸ் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்களை பெறுவதற்கான தகுதி தேர்வாக பார்க்கப்படுகிறது. முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மேலே குறிப்பிட்ட கல்லூரிகளில் குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் இணைந்து படிக்க முடியும்.

தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருச்சி மதுரை, கோவை திருப்பூர் என 17 மாவட்டங்கள் மட்டுமல்லாத நாடு முழுவதும் இருக்கக்கூடிய 179 நகரங்களில் முதுநிலை நீட் தேர்வானது வருகிற ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் மே 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதோடு https://natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முதுநிலை நீட் தேர்வு எழுத நினைக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திடீர் திருப்பம்: பாமக விடமிருந்து விசிக- வுக்கு போன அழைப்பிதழ்.. கைக்கொடுத்து திருமா தந்த ரியாக்ஷன்!! கடுப்பில் ஸ்டாலின்!!

0

PMK VSK: பாமகவின் மாநாடானது 12 ஆண்டுகள் கழித்து வரும் மே மாதம் 11-ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சித்திரை முழுநில மாநாடானது பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு நடைபெறுகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவர்களுக்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் பூசலும் உள்ளது.

இதனிடையே பாமக கட்சிக்குள் அப்பா மகள் சண்டை இருக்கும் நிலையில் சித்திரை முழு நிலம் மாநாடு நடக்காமல் தடைபட்டு போகுமா என்ற கேள்வி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் அதனை மாநாட்டில் காட்டாமல் இதற்கு தலைவராக அன்புமணியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். தற்சமயம் இந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற  நோக்கத்தில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த வர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். திருமாவும் அதனை பெற்றுக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கொண்டு மாநாட்டிற்கு திருமாவளவன் செல்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான். கடந்த முறை கட்சி ரீதியாக இல்லாமல் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் திருமாவை கலந்து கொள்ள விடாமல் திமுக அழுத்தம் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்தும் ஒன்று. அப்படி இருக்கையில் கட்டாயம் வன்னியர் சங்கம் நடத்தும் மாநாட்டிற்கு இவர் செல்ல வாய்ப்பே இல்லை என கூறுகின்றனர்.

DMK க்கு அடுத்த நெருக்கடி!! திருமணம் முன்பே தொடர்பு.. அப்போ தான் இந்த மாறி குழந்தை பிறக்கும்!! சர்ச்சையில் சிக்கும் திமுக எம்பி!!

0

DMK: திமுக நிர்வாகிகள் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தத்தை தரும் வகையில் தான் பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி சைவ வைணவ இனத்தை குறிப்பிட்டு விலைமாத பெண்களை வைத்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது சொத்துக்குவிப்பு வழக்கில் கூட இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கையில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட இது ரீதியாக விவாதம் செய்யப்பட்டு அமைச்சர்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் மிகவும் மரியாதையுடன் பேச வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இவர் ஒவ்வொரு முறையும் இதுபோல சர்ச்சை ஏற்படும் போது இத ரீதியாக அறிவுறுத்தும் நிலையில் அதனை அக்கட்சி நிர்வாகிகள் சிறிதும் கூட கண்டு கொள்வதில்லை.

அப்படித்தான் இன்று திமுக எம்பி கல்யாண சுந்தரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் குழந்தை பிறப்பு பற்றி பேசி உள்ளார். அதிலும் குழந்தை வேண்டுமென்றால் 10 மாதம் பொறுத்துதான் ஆக வேண்டும், உடனே கிடைக்க வேண்டும் என்றால் வேறு முறையில் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டுமே திருமணம் அன்று குழந்தையை பெற்றெடுக்க முடியும் என விமர்சனம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கொள்ள திமுகவின் மேல் இடத்திற்கு இவ்வாறு எம்பி பேசியது அடுத்த கட்ட பிரஷரை உண்டாக்கியுள்ளது.

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷன் கடை இயங்குவதில் சிக்கல்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

TN Gov: தமிழக அரசு ரேஷன் அட்டை ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் இது ரீதியாக ஊழல் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசிடம் குறிப்பிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் இம்மாதம் தொடக்கத்திலேயே இரண்டு தினங்கள் இது ரீதியாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

இதனால் இம்மாதம் 22 23 மற்றும் 24 ஆம் தேதி தொடர் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப் போவதாக கூறியுள்ளனர். குறிப்பாக குடோன்களிலிருந்து எடுத்து வரப்படும் மூட்டைகளில் கணிசமான அளவில் எடை குறைகிறது. இதில் எங்கு தவறு நடக்கிறது என்று தெரியாமல் அதற்கு பாதுகாவலர்களின் மீது சந்தேகம் திரும்புகிறது. இதனையெல்லாம் சரி கட்ட கம்ப்யூட்டருடன் பொருந்திய எடை தராசை நிறுவுமாறு கேட்டு வருகின்றனர்.

மேற்கொண்டு கைரேகை பதிவு செய்ததுடன் அவர்களுடைய விவரங்களும் முழுமையாக வருவதில்லை. இந்த சர்வர் பிரச்சனையை சரி செய்யக் கோரியும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கம்ப்யூட்டருடன் பொருந்திய எடை தராசை நிறுவும் பட்சத்தில் நுகர்வோருக்கு சரியான அளவில் பொட்டலங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இதையெல்லாம் தமிழக அரசு சரி செய்வதில்லை எனக்கூறி இம்மாதம் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே பெறுவதன் மூலம் சிரமத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

பாமக சித்திரை முழு நிலவு மாநாடு.. வருகை தரப்போகும் விஜய்!! பாஜக-வை ஒதுக்கப் போகும் ராமதாஸ்!!

0

PMK TVK: பாமகவின் சித்திரை முழு நிலா மாநாடானது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை புரிய கோரி ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது நடுவே உட்கட்சி மோதல் இருந்தபோதும் மாநாட்டிற்கான பணியானது தடைப்படவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு பிறகு நடக்கும் மாநாடு. இதற்கு முன் நடத்தப்பட்ட மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால்  தான் மேற்கொண்டு மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர்.

ஆனால் தற்பொழுது மகாபலிபுரத்தில் வரும் மே மாதம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு அதன் தலைமையையும் ராமதாஸ், அன்புமணிக்கு கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்படும் என்ற பேச்சு அடிபட்டுள்ளது. எந்த ஒரு கூட்டணி கட்சியுமின்றி நடுநிலையில் இருக்கும் விஜய்க்கு இது ஒரு பெரிய வாய்ப்பு என்றே கூறுகின்றனர்.

அஞ்சலையம்மாவை தனது கொள்கை தலைவர்களுடன் சேர்த்ததற்கு முக்கிய காரணம் பாமக வை டார்கெட் செய்யத்தானம். இந்த மாநாட்டிற்கு விஜய்- க்கு அழைப்பிதல் கொடுக்கப்பட்டால் கலந்து கொள்வாரா, மேற்கொண்டு கூட்டணி குறித்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படுமா என்றெல்லாம் வியூக அமைப்பாளர்கள் பேசி வருகின்றனர். பாமக சித்திர முழு நிலா மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.