Home Blog Page 266

அதிமுக கூட்டணி கட்சி தவெக வில் கூட்டு.. 9 மாதம் தான் டைம்!! கலக்கத்தில் EPS!!

0

TVK : அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ விலகியுள்ள நிலையில் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை ஒன்பது மாதத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமித்ஷா எந்த தினத்தில் உறுதி செய்தாரோ அதே தினத்தில் தான் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இவர்கள் சந்தித்தது அவருக்கு நன்றி சொல்ல தான் எனக் கூறுகின்றனர்.

வப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டதற்காகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்காகவும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முதல்வருக்கு நன்றி செலுத்தியுள்ளனர். இதனால் மட்டும்தான் ஸ்டாலினை சந்தித்தோம் மேற்கொண்டு எந்த ஒரு காரணம் இல்லை எனவும் கூறினர். அதேபோல அதிமுகவிற்கு அலார்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு எதிராக சட்ட மசோதா இயற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் அதில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.

அவர்கள் சொல்லியதைப் போலவே தற்போது கூட்டணியிலிருந்து விலகியும் கொண்டனர். அப்படி இருக்கையில், எங்கள் சிறுபான்மையினரை ஆதரிக்கும் கட்சியை நாடிதான் எங்களது கூட்டணி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஒரு சில அரசியல் விமர்சகர்கள் எஸ் டி பி ஐ கட்சி விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என கூறுகின்றனர். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த தான் ஒன்பது மாச கால அவகாசம் என்றும் அரசல் புரசலான தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கும் நிலையில் அதிமுகவிற்கு அது பாதகமாகவே இருக்கும்.

எடப்பாடிக்கு அடுத்த இடி.. அதிமுக வை கை கழுவிய கூட்டணி கட்சி!! திமுக கொடுத்த சப்போர்ட்!!

0

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் இதனை விரும்பாத சில கட்சிகள் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி ஒத்து வராது எனக் கூறி புதிய தமிழகம் வெளியேறியது. இதனை தொடர்ந்து எஸ் டி பி ஐ கட்சியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய போதே எஸ் டி பி ஐ சார்பாக அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் விலகிக் கொள்வோம் என்று கூறியிருந்தனர். அதேபோல அமித்ஷா எந்த தினத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டாரோ அதே நாளில் முதல்வர் ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பானது வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இது ரீதியாக வழக்கானது ஹை கோர்ட்டிலும் தொடுக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் வைத்து தான் முதல்வரை சந்தித்ததாக கூறியுள்ளனர்.

குறிப்பாக ஸ்டாலின் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்கான இந்த சந்திப்பு முழுக்க முழுக்க நன்றி தெரிவிப்பது தான் என கூறினர். ஆனால் இதன் பின்னணியில் இவர்கள் திமுகவுடன் கைகோர்க்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கோட்டை வட்டாரம் கூறுகின்றது. அதேபோல அதிமுகவுடன் இருந்த பந்தத்தை முடித்துக் கொண்டு எஸ் டி பிஐ இன்னும் ஒன்பது மாதங்களில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதை தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகும். இது சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசும் விமல்!…

0

கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு வாய்ப்பு அவரோ அதில் விமலை நடிக்க சொன்னார். அப்படி வெளியான பசங்க படம் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் விமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விமலுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் சிவகார்த்திகேன், சூரி ஆகியோருடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் நடித்தார்.

அதேபோல், சற்குணம் இயக்கத்தில் மீண்டும் நடித்த வாகை சூடவா படம் விமலுக்கு ஒரு படமாக அமைந்தது. தேசிங்கு ராஜா, சார், கலகலப்பு, எனக்கு எங்கயோ மச்சம் இருக்கு, களவாணி 2, தெய்வ மச்சான் மஞ்சப்பை, துடிக்கும் கரங்கள், மாப்ள சிங்கம், எத்தன், கண்ணன் ராசி என பல படங்களிலும் நடித்தார்.

vimal

கடந்த சில வருடங்களாக விமல் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம், விமல் நடிப்பில் வெளிவந்த வெப் சீரியஸான விலங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சில நடிகர்கள் புத்திசாலித்தனமாக நடிப்பதோடு மட்டும் நிறுத்திகொள்வர்கள். சிலரோ சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த காசை இழந்து கடனாளி ஆகிவிடுவார்கள். விமலும் அந்த தவறை செய்திருக்கிறார்.

ஊடகம் ஒன்றில் பேசிய விமல் ‘மஞ்சப்பை படத்துக்கு அப்புறம் எனக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. மன்னர் வகையறா படத்தை சொந்தமா தயாரித்து படத்தை வெளியிட்டேன். அந்த படமும் சரியாக போகல. சினிமாவில் சம்பாதித்த பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறேன்.

சூர்யாவுக்கு ஜோசியம் பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. சிவக்குமார் சொன்ன பிளாஷ்பேக்!.

0

நேருக்கு நேர் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. 18ம் தேதியான நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.

sivakumar

இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது. டிரெய்லர் முழுக்க சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கங்குவா படம் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்த நிலையில் ரெட்ரோ படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ரெட்ரோ டிரெய்லர் வீடியோ சூர்யா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய விழாவில் பேசிய சூர்யாவின் அப்பா சிவக்குமார் ‘சூர்யாவுக்கு 17 வயதில் இருக்கும்போது அவர் கலைத்துறையில் பெரிய ஆளாக வருவார் என ஒரு ஜோதிடர் சொன்னார். எந்த துறையில் எனக்கேட்டேன். முகத்தை வைத்து செய்யும் தொழில் என்றார். ‘நடிகனாக வரப்போகிறானா?’ எனக்கேட்டேன் ‘ஆமாம்’ என்றார். காலையில் இருந்து இரவு வரை 4 வார்த்தைதான் பேசுவான். அவன் எப்படி நடிகனாவான்?. உனக்கென்ன பைத்தியமா?’ எனக்கேட்டேன். அதற்கு ‘உங்களை விட நல்ல நடிகர் என அவர் பேர் வாங்குவார்’ என அந்த ஜோதிடர் சொன்னார். அது அப்படியே நடந்துவிட்டது’ என சொல்லியிருக்கிறார்.

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து!.. இர்பானுக்கு அப்புறம் சிக்கிய பாபி சிம்ஹா!..

0

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சில படங்களில் நடித்த ரேஷ்மி மேனனை காதல் திருமணமும் செய்து கொண்டார்.

ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்நிலையில்தான் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுனர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வரும்போது சென்னை கிண்டி கத்திபாராவில் இந்த விபத்து நடந்திருகிறது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஓட்டுனர் புஷப்ராஜை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பிரபல யுடியூபர் இர்பான் ஓட்டி வந்த கார் ஒருமுறை விபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். முதலில் காரை ஓட்டியது இர்பான் என செய்தி வெளியானது. அதன்பின் இர்பான் காரில் இல்லை. அவரின் கார் ஓட்டுனர்தான் விபத்தை ஏற்படுத்தினார் என சொன்னார்கள். இப்போது பாபி சிம்ஹா விஷயத்திலும் இதுதான் நடந்ததா என போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

மதிமுகவில் மோதல்?!. பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்!.. காரணம் என்ன?…

0

திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். மதிமுக முதன்மை செயலர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இப்போது திடீரென மதிமுக முதன்மை செயலர் பொ|றுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருக்கிறார். நாளை மதிமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெறவுள்ள துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்தியாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்படுகிறது. நாளை கூடும் நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

durai vaiko

முதமை செயலர் பொறுப்பிலிருந்து விலகினாலும் மதிமுக தொண்டராக எனது பணி தொடரும் என துரை வைகோ தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வைகோ ‘துரை வைகோவின் முடிவு அதிர்ச்சியை கொடுக்கிறது’ என கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நாளை நடக்கவுள்ள் கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

0

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காய் நகர்த்தி வரும் பாஜக அரசுக்கு திமுக பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

தங்களுடன் ஒத்துப்போகத மாநிலங்களில் அமைச்சர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தி அவர்களை பணிய வைப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். சமீபத்தில் கூட அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இது நடந்து சில நாட்களில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது.

நேற்று திருவள்ளூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ‘டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு எப்போதும் அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சியை அமைக்கும் உங்களின் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. அமித்ஷா அல்ல. எந்த்ட ஷா வந்தாலும் சரி. உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துக்கிட்டு வாங்க. ஒரு கை பார்ப்போம். எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control-தான். 2026-லும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தர்ராஜன் ‘தமிழக மக்களின் Out of Control ஆக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தபின் ஸ்டாலின் பதட்டமாக இருக்கிறர். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது. ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை அவர் மறந்துவிடக்கூடாது’ என அவர் பேசியிருக்கிறார்.

ரேஸில் கார் விபத்தில் சிக்கிய அஜித்!.. பரபர அப்டேட்!..

0

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.

திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசை வென்றது. இதுவரை இந்தியாவை சேர்ந்த யாரும் அந்த போட்டியில் பரிசை வென்றது இல்லை.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களிலும் நடித்துவிட்டு கார் ரேஸுக்கு போனார். இந்த ரேஸ் நடந்தபோது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. ஆனாலும், அஜித் அதிர்ஷ்டவசமாக தப்பினார். துபாய் ரேஸ் முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ளப்போனார் அஜித்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பின்னரே அவர் புது படம் பற்றி யோசிப்பார் என்கிறார்கள். இந்நிலையில், பெல்ஜியம் நாட்டில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது அவரின் கார் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்ப முயலும்போது நேராக சென்று கார் மோதியது. ஆனால், அஜித் காயமின்றி தப்பினார். கார் ரேஸில் இது சாதாரணம்தான் என்றாலும் அஜித் என்பதால் இது செய்தியாகி வருகிறது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேரலாம்!!

0

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படித்திருக்கக் கூடிய மாணவர்களில் விமானியாக நினைக்கும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும் என இருந்த விதிகள் தற்பொழுது கலை மற்றும் வணிகவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விமானியாக பயிற்சி பெறலாம் என்பது குறித்த ஆலோசனை சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான தகவல் கூடிய விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிவியல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே விமானியாக பயிற்சி பெற முடியும் என்றும் அதற்கு முன்பு விமானி பயிற்சி பெற்று உரிமம் பெற்றவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வி தகுதி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீப காலமாக 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் முடித்திருக்கக்கூடிய அவர்களுக்கு மட்டுமே விமானி பயிற்சி மற்றும் விமானி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற நிலைகளால் பலரும் இந்த படிப்பினை படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் விமானி ஓட்டுனர் பயிற்சி மற்றும் அதற்கான உரிமம் பெறுவதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு மட்டுமே. அதில் இருக்கக்கூடிய பாடப்பிரிவுகள் பற்றி எந்தவித ஐயமும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்த ஐயப்பாடானது விரைவில் களையப்படும் என்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்த விவாதங்கள் தற்பொழுது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!!இனி இவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை!!

0

உயர் நீதிமன்ற உத்தரவின்படி TNPSC தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு சில முன்னுரிமை விதிகள் குறிப்பாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்து வந்த நிலையில் அதில் சில முக்கிய விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, புதிதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு :-

✓ 1 ஆம் வகுப்பு முதல் தேர்வர்களின் பணிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

✓ கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வயதின் காரணமாக நேரடியாக 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு கல்வியை நேரடியாக தமிழில் கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

✓ தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக பயின்று அதன் பின் தமிழ்நாட்டில் தங்களுடைய கல்வியை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

✓ தமிழைத் தவிர பிற மொழிகளை பயிற்று மொழிகளாக கொண்டு தேர்வுகளை மட்டும் தமிழ் மொழியில் எழுதியவர்களுக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தேர்வுகளை தமிழ் வழியில் எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது

கட்டாயமாக கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றில் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்து நியமன அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.