Home Blog Page 270

இனி வெயிலில் போக வேண்டாம்..வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

0

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வீடு தேடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பொழுது ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி சென்று வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றை நம்முடைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின் தமிழகத்திலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதனுடைய முதல் கட்டம் தான் சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் நேரடியாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலை கிராமமான வெள்ளக் கவியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கிராமம் சரியாக கொடைக்கானலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் அங்கு சாலை வசதி கூட இல்லாத காரணத்தால் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் ஒத்தையடி பாதையில் நடந்து வந்த வாங்க வேண்டி உள்ளது என்றும் அந்த ஒத்தையடி பாதையில் பல்வேறு ஆபத்துகளையும் சவால்களையும் சமாளிப்பது ஆகவும் வெளியான தகவல்களின்படி, தற்பொழுது அந்த கிராமத்திற்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதோடு கூடவே சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இதற்காக தாங்கள் போராடி வருவதாகவும் அரசிற்கு பல கோரிக்கைகள் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நஸ்ரியா பகத் பாசில் விவாகரத்து.. என்னால முடியல மன்னிச்சிருங்க!! இன்ஸ்டா போஸ்டால் பரபரப்பு!!

0

Cinema: சினிமா துறையில் சமீப காலமாக பல நட்சத்திரங்கள் விவாகரத்து பெற்று வருகின்றனர். முதலில் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிக்கு ஆரம்பித்து இறுதியில் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் சைந்தவி, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோரும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் மலையாளம் என கலக்கி வந்த நடிகையான நஸ்ரியா இன்ஸ்ட்டாவில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அது குறித்து தான் பலரும் பேசி வருகின்றனர். இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய குழந்தையும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகத்திற்கு தெரியும். ஆனால் இவர் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் நஸ்ரியா பகத் பாசிலை பிரிய போவதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் அவர் கூறியதாவது, எனது நண்பர்கள், என் உடன் பணிபுரிந்தவர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டனர். ஆனால் யாருடைய தொடர்பையும் ஏற்கும் நிலையில் நான் இல்லை. கடந்த சில மாதங்களாக உணர்வு ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை. எனது உணர்வு ரீதியான பிரச்சனையால் எனது பிறந்தநாள், புத்தாண்டு, தான் நடித்து வெற்றி பெற்ற படமான சூட்சமதர்ஷினி உள்ளிட்டவைகளில் பங்கு கொள்ள முடியவில்லை.

இதிலெல்லாம் பங்கு கொள்ளாததற்காகத் தான் தற்போது மன்னிப்பு கேட்கிறேன். மேற்கொண்டு எனக்கு சிறந்த நடிகைக்கான கேரளா திரை விமர்சகர்கள் விருதைப் பெற்றுள்ளேன். எனக்கு கொடுத்த இந்த விருதுக்கும் மிகவும் நன்றி. எனது மனத ரீதியான பிரச்சனையில் கடந்து வர முயற்சிக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேற்கொண்டு நான் பழைய நிலைமைக்கு வர சில காலம் ஆகும் என தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியிருப்பதற்கு இவர்கள் திருமண வாழ்க்கை முடிவு பெற போகிறது, அதனால்தான் இவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கான சூப்பர் சலுகை!! தொழில்முறை கிரைண்டர் வாங்க 50% மானியம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0

தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் உயர்வு மற்றும் அவர்களுடைய முன்னேற்றம் குறித்த பல்வேறு நலத்திட்டங்கள் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது பல்வேறு திட்டங்களின் மூலமாக பெண்களுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதாரணமாக சுயதொழில் தொடங்க 50,000 ரூபாய் மானியம் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 18,000 ரூபாய் வரை நிதி உதவி சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் மற்றும் 50% மானியம் என பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதோடு கூட, தற்பொழுது தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மகளிருக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் புதிய முயற்சிகளையும் எடுத்துள்ளது. அதன்படி தான் 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்க கூடிய வணிக ரீதியான கிரைண்டர்களை வாங்க தமிழக அரசின் திட்டத்தின் மூலமாக 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

உலர் மற்றும் ஈர மாவு அரைக்கக் கூடிய வணிக ரீதியான கிரைண்டரை வாங்குவதற்கு 10,000 ரூபாய் செலவாகும் என்றால் அதில் 50% மானியமாகவோ அல்லது 5000 ரூபாய் தொகையை மானியமாகவோ வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மகளிர் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பாஜக கூட்டணி வெற்றியடையுமா?? Press க்கு ஷாக் பதிலை கொடுத்த ஓபிஎஸ்!! 

0

ADMK: பாஜக அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஆரம்பத்தில் ஒத்து வரவில்லை என்றாலும் தற்சமயம் மனம் மாறியுள்ளார். குறிப்பாக தினகரன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். இவ்வாறு எடப்பாடியின் செயலைக் கண்டு மாற்று கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் யிடம் செய்தியாளர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதாவது வருடம் தோறும் ஓபிஎஸ் ஆர்கே ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வழக்கம்போல் இந்த வருடமும் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடித்துவிட்டு திரும்பும் போது செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஐ சூழ்ந்து கொண்டனர். மேற்கொண்டு அவரிடம் கேள்வி எழுப்பினர். அதிலும், அதிமுக பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?? அதிமுக பாஜக கூட்டணி வெற்றியடையுமா என கேட்டுள்ளனர்.

இவ்வாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சிறிதும் கூட யோசிக்காமல் பன்னீர்செல்வம் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு விடுமுறை எனக் கூறிவிட்டு புனித வெள்ளி வாழ்த்து சொல்லி புறப்பட்டு விட்டார். இப்படி அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து வாய் திறக்காததற்கு முக்கிய காரணம் இருக்குமென கூறுகின்றனர். சமீபகாலமாகவே பாஜக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் ஓபிஎஸ் சசிகலா தினகரன் மீண்டும் இணைய வேண்டுமென்று அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி மனதும் தற்போது மாறி உள்ளதால் அவர்கள் கூறும் வரை எந்த ஒரு பதிலும் கூறக்கூடாது என்ற தீர்க்கமான முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

விஜய் சினிமாவை தொடர்வார்!! அடித்து சொல்லும் இயக்குனர் மிஸ்கின்!!

0

தன்னுடைய ஆரம்பகால சினிமாவில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டவராகவும் இப்பொழுது மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களால் எப்பொழுதுமே விரும்பக் கூடியவராக திகழக்கூடியவர்தான் நடிகர் விஜய். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என பல இயக்குனர்களை சந்தித்ததாக இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். யாரும் முன் வராத நிலையில் தானே தன் மகனை வைத்து படம் எடுத்ததாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் பல சரிவுகளை கண்டாலும் அதன் பின் தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இன்றுவரை வைத்திருப்பவர் நடிகர் விஜய். நடிப்பில் இருந்து மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என தெரிவித்து தற்பொழுது விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக்கழகமாக மாற்றி அரசியலில் நுழைந்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் அதன் பின் முழுவதுமாக அரசியலில் இறங்கி மக்களுக்கான நற்பணிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நடிகர் விஜய் அவர்களின் சச்சின் திரைப்படம் ஆனது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் இந்த திரைப்படமானது தற்பொழுது வெளியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் விஜய் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இயக்குனர் மிஸ்கின் விஜய் அவர்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

கலைத்துறையை விட்டு விஜய் அவர்கள் விலக மாட்டார் என்றும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பார் என்றும் தான் நினைப்பதாக இயக்குனர் மிஸ்கின் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவிக்கும் பொழுது தன்னை பொறுத்தவரை அவர் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே சினிமாவில் இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சினிமாவை விட்டு கமல் ரஜினியும் விலகி விட்டார்கள் என்றால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா அதேபோலத்தான் நடிகர்கள் விஜயும் அஜித்தும் அவர்கள் சினிமாவை விட்டு விலகி விட்டார்கள் என்றால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவே நடிகர் விஜய் எப்பொழுதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

“எதிர் கட்சி தலைவரே” எடப்பாடி பெயரை சொல்ல மறுத்த செங்கோட்டையன்!! அதிமுக – வில் வெடிக்கும் மோதல்!!

0

ADMK : அதிமுக கட்சிக்குள்ளே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. அதன்படி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும், அத்திக்கடவு பாராட்டு விழா நடத்தியதிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி பிரச்சனையில் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்திய போது இவருக்கு பின்வந்த மாஜி அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட செங்கோட்டையனுக்கு தரவில்லை. இதனால் அதிமுக சார்பாக நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தார்.

அந்த வகையில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக நடைபெற்ற விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. இப்படி இவர்களுக்குள் போர் முற்றிய நிலையில் அதிமுகவே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் டெல்லி சென்று திடீரென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை தனியாக சந்தித்து வந்தார். தொடர்ந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகி ஓபிஎஸ் உடன் இணையப் போகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து இவர்களை மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணியும் நேரம் பார்த்து சேர்ந்துவிட்டது.

இன்று ஈரோட்டில் அதிமுக சார்பாக அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் சைவ வைணவ இனம் குறித்து அவதூறாக பேசியது ரீதியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எடப்பாடி ஆட்சி அமைக்கவே என்று முழக்கம் விட்டனர். ஆனால் செங்கோட்டையன் வாய்மூடி அமைதியாகவே இருந்தார். அதேபோல செய்தியாளர்களிடம் பேசுகயிலும், மறைந்த முதல்வர்கள் ஆன எம் ஜி ஆர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தனர். அவர்கள் வழியில் தற்பொழுது எதிர் கட்சி தலைவரும் நல்லாட்சி அமைத்தார். அந்த நல்லாட்சி மீண்டும் வரவேண்டும்.

ஒரு கட்சி அமைச்சர் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேச வேண்டும் பெண்களை இழிவு படுத்தி பொன்மொழி பேசி உள்ளார். இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அமைச்சராகும்போது உறுதிமொழி எடுத்ததெல்லாம் எண்ணானது?? அதையும் மீறி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அமைச்சர் பேசியதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இனிமேல் இதுபோல் பேசாமல் இருக்க மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்டாயம் நடைபெறும். இது ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தான் எடுப்பார் எனக் கூறியுள்ளார். இவர் அவர் பேட்டியளிக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி என்று பெயரை குறிப்பிடவில்லை. அந்தவகையில் இவர்களின் மோதல் போக்கு முழுமையாக முடிந்த பாடில்லை.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. EPS க்கு நெருங்கும் சிக்கல்!! இனி தப்பிக்கவே முடியாது!!

0

ADMK DMK : தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் என அனைவரும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மறைமுகமாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சி தாக்கி வருகிறது. குறிப்பாக அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் மூலம் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் அதிமுக மற்றும் பாஜக இருப்பதாக திமுக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

அதேபோல் திமுகவும், அதிமுகவை ஆட்டம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கோடநாடு வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கோடநாடு எஸ்டேட் சம்பந்தமான வழக்கை விசாரித்து தவறு செய்தவருக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என கூறியிருந்தது. அதன்படி வழக்கானது சிபிசிஐடி கைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரித்ததில் கிட்டத்தட்ட 1500 பக்கம் கொண்ட ஆவணங்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் தனிப்படை அமைத்து விசாரணை செய்த ஆவணங்கள் கொண்டு சிபிசிஐடி வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது. இதில் கோடநாடு எஸ்டேட் மேனேஜர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட எஸ்டேட்டின் கணினி பொறியாளருடைய  அப்பா என பல தரப்பிடம் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சசிகலாவின் அண்ணியார் இளவரசி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர் அடிபட்டுள்ளது.

இதில் சசிகலா மற்றும் ஜெயலலிதா அவர்களின் பாதுகாவலர்களிடம் விசாரணை செய்துவிட்டனர். இனிவரும் நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி இளவரசி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர். அப்படி இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி சிக்க நேர்ந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலானது அதிமுக வசம் இருக்காது என்பது உறுதி.

ஒரு பக்கம் அதிமுக மற்றொரு பக்கம் திமுக.. இது தான் சரியான ரூட்!! தடாலடி முடிவெடுத்த விஜய்!!

0

TVK: தமிழ்நாட்டில் நடக்க போகும் 2026 வது சட்டமன்ற தேர்தல் பெருமளவு எதிர்பார்ப்புடன் உள்ளது. ஒரு பக்கம் திமுக வலிமையான கூட்டணியாக உள்ள நிலையில் அதனை எதிர்க்க பாஜகவும் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோதல் போக்கை தவிர்த்துவிட்டு அதிமுகவை இணைத்துக் கொண்டது. மேற்கொண்டு சீமான் உள்ளிட்ட சிறு கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படி தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனித்து நிற்கப்படுகிறார்.

எந்த பக்கமும் கூட்டணியின்றி களத்தில் இறங்க தயாராகி விட்டார். ஆரம்பகட்ட காலத்தில் இவருக்கு பல கட்சிகள் கூட்டணி குறித்து ஆதரவு அளிப்போம் என தெரிவித்தது. ஆனால் அரசியலில் நுழைந்த முதல் நாளிலிருந்து தனது தொகுதி மார்க்கெட்டை தயார் செய்து கொண்டார். அதிலிருந்து சிறிதும் கூட கீழே இறங்குவதில்லை. இதனாலையே பல கூட்டணிகள் இவருக்கு கை கொடுக்காமல் போனது. அதில் ஒன்றுதான் அதிமுக, விஜய்யின் வரைமுறைகளுக்கு ஒத்து வராது என கூறிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் டெல்லி அரவிந்த் கெஜ்ரவால் எப்படி பாஜக மற்றும் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு தன்னுடைய கட்சியை முன் நிறுத்தினாரோ, அதேபோல விஜய்யும் பாடுபட வேண்டியுள்ளது. இதனால் தனது இறுதி படமான ஜனநாயகனை முடித்த கையோடு பட்டித் தொட்டி எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் தமிழக மக்களுடன் இணக்கமாக அதிக வாய்ப்புள்ளது. மாபெரும் வலுப்பெற்ற கூட்டணி கட்சிகளை எதிர்க்க வேண்டுமென்றால் இப்படியான சவால்களை விஜய் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

அன்புமணிக்கு போன தலைவர் போஸ்ட்.. ராமதாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

PMK: பாமகவின் அப்பா மகன் இருவருக்கும் உள்ள மோதல் போக்கானது மேடை போட்டு பேசும் அளவிற்கு வந்துவிட்டது. பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழி பேரன் கட்சிக்குள் நுழைத்து பொறுப்பு கொடுத்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் மூலதனம். அதிலும் அன்புமணியின் பழைய போஸ்டிங்கான இளைஞரணி பதவியையே தனது பேரனுக்கு தூக்கி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் இது ரீதியாக இருவரும் மேடையிலேயே சண்டை போட்டுக் கொண்டனர்.

அப்போது ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வது தான் கேட்க வேண்டும் விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறியது, அன்புமணிக்கு தான் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். இவரும் அவகேற்றார் போல், பனையூரில் அலுவலகம் திறந்து விட்டேன் யாராக இருந்தாலும் என்னை அங்கு வந்து சந்தியுங்கள் என்று கூறினார்.

இவர்கள் மோதல் போக்கை ஒரு சில தினங்களிலேயே சமாதானம் செய்து வைத்தனர். இப்படி கட்சி சுமுகமாக சென்ற நிலையில், திடீரென்று ராமதாஸ் அன்புமணி-க்கு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு தலைமை பதிவியை தானே ஏற்று நடப்பதாக தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் இவர்கள் மோதல் போக்கும் மீண்டும் தொடர்ந்து விட்டதாக தெரிந்தது.

மேற்கொண்டு இது ரீதியாக என்னை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார். ஒரு சில தினங்கள் மௌனம் காத்த அன்புமணி, நான்தான் தலைவர், கட்சி ரீதியான அனைத்து செயல்பாடுகளையும் ஐய்யா ராமதாஸுக்கு புகழ் சேரும் வகையில் பார்க்கப் போகிறேன் என கூறினார். இப்படி இருவரும் தலைவர் பதவிக்கு மாறி மாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சித்திரை முழு நிலா மாநாட்டில் ஏதேனும் மாற்றம் வந்துவிடுமா என அனைத்து தொண்டர்களும் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் இன்று இது குறித்து அறிக்கை ஒன்றை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக அன்புமணியை சித்திரை முழு நிலா மாநாட்டின் தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க தமிழ் வழிக் கல்வி படித்தவர்களா!! அப்போ அரசு வேலை வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

0

தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு அளித்து வந்த முன்னுரிமையில் தற்பொழுது திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இதற்கு மேல் அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

அரசு தலைமை செயலர் நா முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே இனி அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அந்த சட்டத்திற்கான திருத்த சட்டம் 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிற மொழிகளை பயிற்று மொழிகளாக கொண்டு தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒன்றாம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்றும் இடையில் வந்து தமிழ் வழிக் கல்வியை கற்றுக்கொண்டு அரசு பணிகளில் சேர நினைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை அவர்கள் படித்த மற்றும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி படிப்பதற்கான சான்றிதழ்களை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் தற்பொழுது வேலை பார்க்கக்கூடிய அனைவரும் அதிலும் குறிப்பாக பள்ளி கல்வியாக இருந்தால் தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கக்கூடிய சான்றிதழ்களின் அடிப்படையில் அது உயர்கல்வியாக இருந்தாலும் தொழிற்பயிற்சி நிலையம் கல்லூரி பல்கலைக்கழகம் முதல்வர் பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அலுவலர்களால் வழங்கப்படக்கூடிய சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கே செல்லாமல் நேரடியாக தனித்தேர்வார்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி அற்றவர்களாக குறிப்பிடப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தங்களுடைய மேல்நிலைப் பள்ளிகளை மட்டும் தமிழ் வழியில் படித்து முடித்தவர்களுக்கும் இதன் கீழ் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் கல்வி தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி கல்லூரிகளில் குறிப்பாக தமிழ் பாடத்திட்டத்திற்கான ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் இவ்வாறு நியமனம் செய்யப்படக் கூடியவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இவை அனைத்தும் அவர்கள் எழுதக்கூடிய தேர்வான முதல் நிலை தேர்வு முதன்மை தேர்வு நேர்முக தேர்வு மற்றும் இதர நிலைகளில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.