Home Blog Page 269

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

0

முருகனுக்கான நாமங்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கந்த சஷ்டி கவசம். நாம் அனைவரும் அறிந்த இந்த கந்த சஷ்டி கவசமானது திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் கவசம் ஆகும். இதேபோன்று முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் 6 கவசங்கள் உள்ளன. இந்த ஆறு கவசங்களையும் எழுதியவர் பாலதேவராயன் ஆவார்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை பலரும் சரியான முறையில் படிப்பது கிடையாது. ஒரு சிலர் இந்த கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க முடியாது. அதே போன்று ஒரு சிலரால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க முடியாது.

படிக்கும் பொழுது பல்வேறு தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.இந்த கந்த சஷ்டி கவசத்தை எல்லோராலும் எளிமையாக படித்து விட முடியாது. ஆனால் கஷ்டப்பட்டு, பல இடையூறுகளையும் தாண்டி இந்த கந்த சஷ்டி கவசத்தை படித்து விட்டோம் என்றால், பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். அப்படி இந்த கந்த சஷ்டி கவசத்தை நாம் தொடர்ந்து படித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

இதனைப் படிக்கும் பொழுது முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து, ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை வைத்து விட்டு, புத்தகத்தைப் பார்த்தே நமக்கு மனப்பாடம் ஆகும் வரையிலும் படிக்கலாம். அவசர அவசரமாக படிக்காமல், நிறுத்தி நிதானமாக பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

இந்த கந்த சஷ்டி கவசம் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாமத்தையும் நாம் படிக்கும் பொழுது நிறுத்தி நிதானமாக, பொருள் உணர்ந்து படிக்கும் பொழுது மட்டுமே அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:

1.முருகப்பெருமானை எங்கு நினைத்தாலும் அந்த இடத்திலே முருகப்பெருமானை எழுந்தருள செய்கின்ற ஆற்றல் இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு. முருகனை வரவழைக்கும் தாரக மந்திரமாக இந்த கந்த சஷ்டி கவசம் விளங்குகிறது.

2. இது உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை ஒரு கவசமாக நமக்கு திகழ்கிறது.

3. பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இது போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த கந்த சஷ்டி கவசம் நம்மிடம் எதையும் அணுக விடாது.

4. எமதூதர்களை நம்மிடம் நெருங்க விடாத கவசமும் இந்த கந்த சஷ்டி கவசம் தான்.

5. விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களின் மீது நமக்கு இருக்கும் பயத்தை இந்த கந்த சஷ்டி கவசம் போக்கிவிடும். நமது உடலில் விஷங்கள் இருந்தாலும் அதனை இந்த கவசம் நீக்கிவிடும்.

6. தீராத நோய்களையும் தீர்த்துக் கொடுக்கும் வல்லமை இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு. எவர் ஒருத்தர் இந்த கந்த சஷ்டி கவசத்தை 48 நாட்கள் தொடர்ந்து அவர்களது நோய் தீர வேண்டும் என்று பாராயணம் செய்கிறார்களோ, அது எந்தவித நோயாக இருந்தாலும் தீர்ந்து விடும்.

7. இந்த உலக பற்றுகளை ஒருவர் நீக்கிக் கொள்ளவும் இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது. அதாவது அன்பு, பாசம் மற்றும் உறவுகளை தவிர்த்து முருகனின் பாதங்களில் சரணடைய இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.

8. எந்த வறுமையில் இருந்தாலும் கூட, அதாவது ஒரு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை படிக்க முடியாத நிலையில் இருந்தாலும் கூட, எவர் ஒருவர் முயற்சித்து கந்தசஷ்டி கவசத்தை படிக்கிறார்களோ அவர்களை வெள்ளி விளக்கேற்றி இந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் நிலைக்கு உயர்த்தும்.

9. எவர் ஒருவர் கந்த சஷ்டி கவசத்தை படிக்கிறாரோ அவருக்கு நவகிரகங்களின் ஆசி கிடைக்கும்.

10. பகையைப் போக்கக்கூடிய வல்லமை இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு.

11. நமது உடலில் இருக்கக்கூடிய ஆத்ம சக்திகளை மேல் எழும்ப செய்ய இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.

12. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் முருகப்பெருமானை போற்றி அர்ச்சித்து வணங்கும் பொழுது அனைத்து அர்ச்சனை பலன்களும் நமக்கு கிடைக்கும்.

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

0

பொதுவாக ஒரு வீட்டை கட்டும் பொழுது முதல் முறையாக பூமி பூஜை என்பதை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக செய்யக்கூடிய பூஜை என்றால் வாசற்கால் வைக்கும் பூஜை. இதற்கு நிலை வாசல் என்ற பெயரும் உண்டு. அதாவது நிலைத்த தெய்வீக சக்திகள் அந்த இடத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத் தான் நிலைவாசல் பூஜை என்பது செய்யப்படுகிறது.

வீடு என்பது நாம் தங்கக்கூடிய ஒரு சாதாரணமான இடம் அன்று. ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் மன அமைதியும், தெய்வீக அம்சமும் இருக்க வேண்டும். ஒரு சில வீடுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் ஆனால் அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது மன திருப்தி என்பது இருக்காது.

அதேபோன்று ஒரு சில வீடுகள் மிகவும் சிறிய குடிசை வீடாக இருந்தாலும் கூட, அந்த வீட்டில் நுழையும் பொழுது மன அமைதியும், தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாகவும் தோன்றும்.

ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அந்த வீட்டிற்கு வந்து செல்பவர்களுக்கும் மன நிம்மதி, சந்தோஷம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் நிலைவாசல் வைக்கும் பொழுது ஆகர்ஷண சக்தி உடைய நவதானியங்கள், நவரத்தின கற்கள், நாணயங்கள், சங்கு இதுபோன்ற பொருட்களை பதித்து வைப்பார்கள்.

ஒவ்வொரு வீட்டின் நிலை வாசலிலும் அந்த வீட்டின் குலதெய்வம் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால்தான் நிலைவாசலின் மீது அமரக்கூடாது, நிலை வாசலுக்கு உள்ளே நின்று எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது, வெளியே செல்லும் பொழுது நிலை வாசல் நமது காலை தடுத்தால் வெளியே செல்லக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள்.

நமது குலதெய்வம் தான் நமக்கு காவல் தெய்வம். எனவே நமக்கு வருகின்ற ஆபத்தினை முன்னெச்சரிக்கையாக காட்டுவதற்கு தான் இந்த அறிகுறிகளை நமக்கு கொடுக்கின்றது. அதே போன்று எந்த ஒரு நல்லது, கெட்டது, நல்ல சக்தி, கெட்ட சக்தி இது போன்ற எதுவாக இருந்தாலும் நமது வீட்டின் நிலை வாசலை தாண்டி தான் வீட்டிற்கு உள்ளே வர முடியும்.

ஆனால் தீய சக்திகளை நிலை வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, நல்ல சக்திகளை மட்டுமே வீட்டிற்கு உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான், இந்தந்த மரங்களால் மட்டுமே நிலை வாசலை வைக்க வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இப்படி பார்த்து பார்த்து வைக்கக்கூடிய நிலை வாசலை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

நமது வீட்டின் பூஜையறையில் இருக்கக்கூடிய தெய்வத்தை வழிபடும் அளவிற்கு, நிலை வாசலையும் வழிபட வேண்டும். ஏனென்றால் நமது குலதெய்வம் நமக்காக அந்த இடத்தில் இருந்து நமக்கு அருள்புரியக் கூடிய இடம். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதை காட்டிலும், குலதெய்வத்தின் அருளை பெறுவது தான் மிகவும் அவசியம். ஏனென்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்தால் மட்டுமே சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.

நிலை வாசலில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும். கீழே தரையில் இருந்து ஒரு அடி வரையிலும் மஞ்சளை தடவி விட்டு, நிலை வாசலின் இருபுறமும் வைக்கக்கூடிய குங்குமத்தின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்குமாறு வைக்க வேண்டும். நிலை வாசலின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு பக்கங்களிலும் மஞ்சள், குங்குமத்தை வைக்க வேண்டும்.

இதேபோன்று நிலை வாசலின் மேல்புறமும் மஞ்சள், குங்குமத்தை வைத்து மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மா இலை கிடைத்தால் அடிக்கடி கட்டிக் கொள்ளலாம். மா இலை கிடைக்காதவர்கள் எவ்வளவு காய்ந்து இருந்தாலும் ஒருமுறை கட்டி விட்டு ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு கூட வைத்துக் கொள்ளலாம்.

நிலை வாசலுக்கு வைக்கக்கூடிய மஞ்சள், குங்குமத்தை வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வைத்துக் கொண்டால் போதும். ஆனால் ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தை தினமும் பூஜை அறைக்கும், நிலை வாசலுக்கும் காட்ட வேண்டும்.

நிலை வாசலுக்கு பூஜை செய்யும் பொழுது, தீபம் ஏற்றி வைத்து, ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை காண்பித்து நிலை வாசலுக்கு மேலேயும் கீழேயும் சிறிதளவு பூக்களை தூவி விட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் பூஜை அறை வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த நிலை வாசல் பூஜையை அன்றாடம் செய்து வரும் பொழுது, உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உங்களால் கண்கூடாக காண முடியும்.

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

0

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது.

அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனை பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர். திருமாவளவன் அந்த அழைப்பை இனமுகத்தோடு ஏற்றுக் கொண்டு, மாநாடு வெற்றியடைய வேண்டும் என தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாமக மற்றும் விசிக கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் மோதல்களை சந்தித்திருக்கின்றன. அண்மையில் பாமக மாநாட்டில் விசிக கொடி அகற்றப்பட்டது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், இரு கட்சிகளும் சமூக நீதியை முன்வைக்கும் வகையில் போட்டியிடும் சூழலும் காணப்பட்டது.

இந்நிலையில், சித்திரை மாநாட்டிற்கான நேரடி அழைப்பு, மற்றும் அதனை திருமாவளவன் ஏற்றுக் கொண்டது, இரு கட்சிகளுக்கும் இடையே சமரச உணர்வை உருவாக்கும் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்கும் அடிப்படை மாற்றமாக இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

0

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீது எந்தவித ஜிஎஸ்டியும் (Goods and Services Tax) விதிக்கப்படவில்லை. மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த வகை இலவச டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பாதிக்கும் வகையில் எந்த திட்டமும் இல்லை, தற்போதைய அமைப்பே தொடரும்,” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதனுடன், “வதந்திகளை பரப்பும் முயற்சிகள் குற்றமாகும்; பொதுமக்கள் இப்படியான தகவல்களில் ஈடுபடாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்ப வேண்டும்” என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

UPI பரிமாற்றங்கள் இந்தியாவில் மிகுந்த பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற வதந்தி, பலரை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.

இதனால்தான், இந்த விளக்க அறிவிப்பு பதிவு மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. அரசு தொடக்கத்திலிருந்தே டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்குவிக்கப் பணியாற்றி வருவதாகவும், அதனை ஒத்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

தரமான சம்பவம் செய்த குட் பேட் அக்லி!. மொத்த வசூல் இவ்வளவு கோடியா?!…

0

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.

எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

gbu

இந்நிலையில் படம் வெளியாகி 89நாட்கள் ஆகிவிட்ட நிலையில் குட் பேட் அக்லி உலகம் முழுவதும் சேர்த்து 200 கோடியை வசூல் செய்துவிட்டதாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அது வேற வாய்.. இது நார வாய்!. விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் சீமானை கிழிக்கும் ரசிகர்கள்.

0

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் தனது படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியவர். அவர் ஒரு முஸ்லீம் விரோதி. அவரை நம்ப வேண்டாம். இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வேண்டாம். அவர் ஒரு சைத்தான். முஸ்லீம்களை வாக்குகளை பெறுவதற்காக அவர் நாடகம் போடுகிறர்’ என பேசினார். மேலும், சென்னையில் நடந்த இப்தார் விருந்தில் குடிகாரார்கள், சூதாட்டக்காரார்களை வரவழைத்து இப்தார் விருந்தையே கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் ‘அவ்வளவு ஆழமாக பார்க்க தேவையில்லை. விஜய் அப்படியெல்லாம் நினைக்கும் ஆள் இல்லை. அவர் மிகவும் யதார்த்தமானவர். ஏதோ தெரியாமல் சில தவறுகள் நடந்திருக்கலாம். இப்படியெல்லாம் பேசினால் விஜய் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவாரா?.. என் தம்பியை பத்தி எனக்கு நல்லா தெரியும்’ எனா பேசியிருக்கிறார்.

இதே சீமான்தான் விஜயை கடுமையாக திட்டியவர். ‘ஒன்னும் அந்த பக்கம் போ. இல்ல இந்த பக்கம் வா. நடுரோட்ல நின்னா லாரியில் அடிபட்டுதான் சாவ’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்போது ஜமாத் தெரிவித்துள்ள கருத்திற்கு எதிராக அதாவது விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதையடுத்து ‘அது வேற வாய்.. இது நார வாய்’ என விஜய் ரசிகர்கள் சீமானை கலாய்த்து வருகிறார்கள்.

சிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..

0

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் லிரிக் வீடீயோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சந்தோஷ நாராயனணே இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இப்பாடலை புரமோஷன் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டார்கள். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. 18ம் தேதியான இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை செய்யும் சூர்யா அதிலிருந்து மாற நினைக்கிறார். ஆனால், சூழ்நிலையும், வில்லன் குரூப்பை அவரை மாற விடாமல் தடுப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லர் முழுக்க சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கங்குவா படம் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்த நிலையில் ரெட்ரோ படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ரெட்ரோ டிரெய்லர் வீடியோ சூர்யா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயிச்சா மாலை!.. இல்லன்னா பாடை!.. நிர்வாகிகளுக்கு சீமான் எச்சரிக்கை!…

0

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

‘2026 சட்டமன்ற தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள். நான் சொல்வதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி விஜயின் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.. நானே சேர்த்துவிடுகிறேன்’ என பேசியிருக்கிறார்.

மேலும், ‘2026 சட்டமன்ற தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தேர்தலில் தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை உறுதி. தோற்றால் கொஞ்சம் பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள்’ என பேசியிருக்கிறார்.

12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

0

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :-

✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு மாலை நேர பட்டய படிப்புகளாக எடுக்கப்படுகிறது

✓ தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டய படிப்புகளும் எடுக்கப்படுகிறது

✓ சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட BA & MA தொழிலாளர் மேலாண்மை வகுப்புகளோடு தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்ற PG TLA & TLL போன்ற பட்டப்படிப்புகளும் எடுக்கப்படுகிறது.

இந்தக் கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் தற்பொழுது பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக வேலை பார்த்து வருவது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்த பாடப்பிரிவுகளில் சேர நினைக்கக்கூடிய 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி ஏ தொழிலாளர் மேலாண்மை பாடப்பிரிவில் சேரலாம் என்றும் விண்ணப்பங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு விதிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அதனுடன் தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் உதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் தேதி :-

ஏப்ரல் 21 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அதனை பூர்த்தி செய்த மே 18ஆம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் என்றும் விண்ணப்ப கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் மட்டுமே போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The director,
Tamil Nadu institute of labour studies,
Chennai.

என்ற பெயரில் பதிவு தபால் எடுத்த வங்கி வரைவோலையினை 50 ரூபாய் தபால் கட்டணமாக செலுத்தி பெற்று விரைவு அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின்படி மாணவர்களின் சேர்க்கையானது நடைபெறும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குஷியோ குஷி.. இனி ரூ 1000 இல்லை 2000 ஆயிரம் வழங்கப்படும்!! சட்டப்பேரவையில் மாஸ் அறிவிப்பு!!

0

TN Gov: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் பெண்கள் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இம்முறை உடல் ஊனமுற்றோருக்கு போட்டி இல்லாமையே ஊராட்சி பேரூராட்சிகளில் பதவி வழங்க உத்தரவிட்டுள்ளனர். இவையனைத்தும் அதிகார உயரத்தில் எடுத்துச் செல்ல தான் என தமிழக அரசு கூறியுள்ளது. கிராமத்தில் உள்ள கோவில்களின் பூசாரிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 12000 மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இது ரீதியாக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோவில் பூசாரிகள் பத்தாயிரம் பேருக்கு ரூ.12000 மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு கோவில் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலில் ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம். இது கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் இதன் தொகையை 2000 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.